ஏப்ரல் 08, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 38

लोलहृदयोस्ति शम्भोर्लोचनयुगलेन लेह्यमानायाम्
ललितपरमशिवायां लावण्यामृततरङ्गमालायाम् 38

லோல ஹ்ருதயோVஸ்மி சம்போ: லோசந யுகளேன லேஹ்யமானாயாம் |
லாலித பரமசிவாயாம் லாவண்யாம்ருத தரங்க மாலாயாம் ||   (38)

பரமசிவனின் இருகண்களாளும் ஆசையுடன் பருகப்படுவதும்பரமசிவனை மோகம் கொள்ளச் செய்வதும்அழகாம் அமுதக் கடலின் அலைகளின் கூட்டம் போலிருப்பதுமான ஒன்றில் ஈடுபடும் மனத்துடையேனாக இருக்கிறேன்.

சிவனார் விழிகளால் தேடிப் பருகித் திளைப்பதனில்
சிவனார் தமைதன்மேல் தீரா திருத்திடச் செய்வதனில்
அவமில் அழகாம் அமுதக் கடலின் அலைகளது
நிவகம் தனையேபோல் நிற்பதில் நெஞ்சம் நிலைபெறுதே

தமை - ஆசை; நிவகம் - கூட்டம்; அவமில் - கேடு இல்லாத

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...