पुञ्जितकरुणमुदञ्चितशिञ्जितमणिकाञ्चि किमपि काञ्चिपुरे ।
मञ्जरितमृदुलहासं पिञ्जरतनुरुचि पिनाकिमूलधनम् ॥37॥
புஞ்சித கருணம் உதஞ்சித சிஞ்சித மணி காஞ்சி கிமபி காஞ்சிபுரே |
மஞ்ஜரித ம்ருதுள ஹாஸம் பிஞ்சர தனுருசி பினாகி மூலதனம்
|| (37)
கருணை நிரம்பியதும், ரத்தின மயமான ஒட்டியாணத்தின் சலங்கையொலி நிரம்பியதும் பூத்துப் பூத்துவரும் மென்சிரிப்பு நிறைந்ததும், பொன்னே போன்ற மேனியொளி உடையதும் பிநாகபாணியின் (சிவனுடைய வில் - பிநாகம்) மூலதனமுமாகவும் இருக்கின்றவொன்று காஞ்சீபுரத்தில் விளங்குகிறது.
இரக்கம் உடைத்தாம் இரத்தினக் காஞ்சி இசையுடைத்தாம்
புரந்திடப் பூத்திடும் புன்னகை மிக்கதாம் பொன்னொளியாய்
விரவிய மேனியாம் வேதன் பிநாகி விழையுமொரு
திரவிய மாயது திண்ணமாய் காஞ்சீ திகழுமதே
காஞ்சி - இடையாபரணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam