अङ्कुरितस्तनकोरकमङ्कालङ्कारमेकचूतपतेः ।
आलोकेमहि कोमलमागमसंलापसारयाथार्थ्यम् ॥36॥
அங்குரித ஸ்தனகோரகம் அங்காலங்காரம் ஏக சூதபதே: |
ஆலோகேமஹி கோமளம் ஆகம ஸம்லாப ஸார யாதார்த்யாம்
|| (36)
மொட்டுக்களை போன்ற தனங்களை உடையதும், மிருதுவான (மென்மையான) இயல்பினதும், வேதவாக்குகளின் சாரமான உண்மையாக இருப்பதும், ஏகாம்ரநாதருடைய மடியில் அலங்காரமாகயிருப்பதுமான, ஒன்றைக் காண்கிறோம்.
மலர்மொட் டினைபோலும் மார்புடை மஞ்சுள மாயதுவாம்
நலமாம் மறைவாக்கின் நற்பொருட் சாரமும் ஞானமுமாம்
தலமாய் ஒருமா தரும்தரு கீழமர் தம்பிரானைக்
கலந்தே மடியமர் கண்கவர் ஒப்பத்தைக் காண்கிறோமே
மஞ்சுளம் - மெல்லியல்; ஒப்பம் - அலங்காரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam