மார்ச் 10, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 9

आदृतकाञ्चीनिलयमाद्यामारूढयौवनाटोपाम्
आगमवतंसकलिकामानन्दाद्वैतकन्दलीं वन्दे 9

ஆத்ருத காஞ்சீ நிலயாம் ஆத்யாம் ஆரூட யௌவனாடோபாம் |
ஆகமவதம்ஸ கலிகாம் ஆனந்தாத்வைதகந்தலீம் வந்தே ||   (9)

காஞ்சீபுரியை தன்னுடைய இருப்பிடமாக கொண்டவளும், இவ்வகிலத்திற்கே ஆதியானவளும், இளமையின் செழிப்போடு நிறைந்தவளும், சிறப்பான மறைகளின் மணிமகுடமாக பூக்களின் மொக்குகளைப் போன்ற உபநிடதங்களின் சாரமாய் இருப்பவளும், வேறிலாமல் ஒன்றேயான ஆனந்தத் துளிர் போன்றிருப்பவளுமாகிய தேவியை (காமாக்ஷியை) வணங்குமருளைப் பெறுவேன்.

ஆர்வமாய் காஞ்சீ அணைந்தாள் அகிலத்தின் ஆதியவள்
சீர்கொள் இளமைச் சிறப்பெலாம் கொண்டு சிறந்தவளாம்
ஆர்த்த மறைமுடி ஆயமொட் டைச்சூடும் அத்துவிதப்
பேரின்பத் தூவலாம் பேற்றை வணங்கப் பெறுகிறேனே


தூவல் - துளிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...