तुङ्गाभिरामकुचभरशृङ्गारितमाश्रयामि काञ्चिगतम् ।
गङ्गाधरपरतन्त्रं शृङ्गाराद्वैततन्त्रसिद्धान्तम् ॥10॥
துங்காபிராம குசபர ச்ருங்காரிதம் ஆச்ரயாமி காஞ்சிகதம் |
கங்காதர பரதந்த்ரம் ச்ருங்காராத்வைத தந்த்ர ஸித்தாந்தம் || (10)
உன்னதமும், அழகுள்ளதுமான தனங்களால் அலங்கரிக்கப்பட்டதும், காஞ்சீபுரியிலிருப்பதும், சிருங்காரத்தால் வேற்றுமை பாவமில்லாத அத்வைத சிந்தாந்தத்தின் முடிவாயுமிருக்கும், கங்கைத் தாங்கியோன் பத்தினியைச் சரணமடைகிறேன்.
உயர்வாம் அழகுடை உண்ணா முலைகொளும் ஒப்பனையாள்
வயந்தே நதிதாங்கு வாணனை காஞ்சியில் வந்தணைந்தாள்
இயைபுடன் காம இயலின் பொருள்தரு இன்பமுமாய்
நயந்திடு நற்பொருள் நாரணி யின்சரண் நண்ணுவனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam