काञ्चीरत्नविभूषां कामपि कन्दर्पसूतिकापाङ्गीम् ।
परमां कलामुपासे परशिववामाङ्कपीठिकासीनाम् ॥11॥
காஞ்சீரத்னவிபுஷாம் காமபி கந்தர்ப ஸூதிகாபாங்கீம் |
பரமாம் கலாமுபாஸே பரசிவ வாமாங்க பீடிகாஸீனாம்
|| (11)
காஞ்சீயாம் உயர் இரத்தினத்தை அலங்காரமாயுடையவளும், மாரனுக்கு (மன்மதன்) பிறப்பிடமாக இருக்கும் அருள் நோக்குடையாளும், பரமசிவனின் இடது துடையை தாம் வீற்றிருக்கும் ஆசனமாகக் கொண்டவளுமாகிய பரம்பொருளை நான் உபாசனை செய்கிறேன்.
காஞ்சியாம் ரத்தினக் கல்லணிப் பூண்ட கவினழகாள்
வாஞ்சை யுடனே வரமீந்து மாரர்க்கும் வாழ்வளித்தாள்
ஆஞ்சிடு வார்மேல் அமைந்திடப் பக்கம் அமர்ந்தவளை
காஞ்சன மாமக் கருவைத் தொழநான் கருதுவனே
ஆஞ்சி - கூத்து; காஞ்சனம் - பொன்; காஞ்சி - மேகலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam