மார்ச் 09, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 8

श्रितकम्पसीमानं शिथिलितपरमशिवधैर्यमहिमानम्
कलये पटलिमानं कञ्चन कञ्चुकितभुवनभूमानम् 8

ச்ரிதகம்பா ஸீமானம் சிதிலித பரமசிவ தைர்ய மஹிமானம் |
கலயே பாடலீமானம் கஞ்சன கஞ்சுகித புவன பூமானம் ||    (8)

கம்பா நதிக்கரையில் இருப்பதுவும், உயர்ந்தோன் பரமசிவனின் மனவுறுதியை உடையும்படி செய்ததுவும், தாரணி யாவுமே தன்னுடைய உடையாக அணிந்ததுவும், இளஞ்சிவப்பு (வெண்ணிறத்தோடு கூடிய சிவப்பு) நிறத்ததுமான பொருளொன்றை என்னுள்ளத்திருத்தி ஏத்துவேன், தியானிக்கிறேன்.

கம்பைக் கரையமர் காஞ்சீ கனகமா காட்சியதாம்
உம்பன் பரசிவன் உள்ளத் துறுதி உடைத்ததுவாம் 
தம்முடை யாகவே தாரணி யாவும் தரித்ததுவாம்

எம்முள் நினைந்து இளஞ்சிவப் பாமதை ஏத்துவனே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...