மார்ச் 08, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 7

ऐश्वर्यमिन्दुमौलेरैकत्म्यप्रकृति काञ्चिमध्यगतम्
ऐन्दवकिशोरशेखरमैदम्पर्यं चकास्ति निगमानाम् 7

ஐஸ்வர்யம் இந்துமௌளே: ஐகாத்ம்ய ப்ரக்ருதி காஞ்சிமத்யகதம் |
ஐந்தவகிசோர சேகரம் ஐதம்பர்யம் சகாஸ்தி நிகமானாம் ||   (7)

பரப்ரம்ஹத்தோடு இரண்டென்று வேறிலாது இருக்கும் பரவஸ்துவும், காஞ்சீ புரத்தின் நடுவே வீற்றிருப்பதும், இளம் பிறையினை சிரத்தில் அணியாகக் கொண்டதுமான, சந்த்ரமெளளீஸ்வருடைய தேவிரூப (காமாக்ஷி) செல்வமானது, சிவமே ஆக்கியளித்த வேதமாகவும் விளக்கமாகவும் விளங்குகிறது.

சிவத்தோடு வேறிலா சித்தாய சக்தியாய் சேர்ந்தவளும்
சிவகாஞ்சீ புண்ணிய சேத்திரத் தேயுறை சின்மயியும்
சிவசந்த்ர மௌலியர் செல்வம் பிறையணி சேகரியும்

சிவவேத ஞானமும் செம்பொரு ளான சிவசதியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...