परया काञ्चीपुरया पर्वतपर्यायपीनकुचभरया ।
परतन्त्रा वयमनया पङ्कजसब्रह्मचारिलोचनया ॥6॥
பரதந்த்ரா வயமனயா பங்கஜ ஸப்ரம்ஹசாரிலோசனயா |
பரயா காஞ்சீபுரயா பர்வதபர்யாய பீனகுசபரயா || (6)
காஞ்சீபுரியிலிருப்பவளும் பர்வதங்களின் உருவம்போல் பருத்ததான தன பாரங்களை உடையவளும், தாமரைப் பூக்களைப்போல் கண்களைக் உடையவளுமான இந்த பரதேவதையினால் நாம் பரவசமாகிவிட்டோம்
மாமலை யேபோல் மதர்க்கும் தனமுடை மாதரசி
தாமரைப் பூக்களைத் தாயவள் கண்களாய் தாங்கியவள்
காமத்துக் கோட்டமாம் காஞ்சி வதியும் கருணையளை
பாமையாம் தேவியைப் பார்த்திட என்றும் பரவசமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam