மார்ச் 06, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 5

पञ्चशरशास्त्रबोधनपरमाचार्येण दृष्टिपातेन 
काञ्चीसीम्नि कुमारी काचन मोहयति कामजेतारम् 5

பஞ்சசர சாஸ்த்ர போதன பரமாசார்யேண த்ருஷ்டிபாதேன |
காஞ்சீ ஸீம்னி குமாரி காசன மோஹயதி காமஜேதாரம் ||   (5)

இந்த ஸ்லோகத்தில்  பரமேஸ்வரனுக்கே காமாட்சி பரமாச்சார்யாளாக இருப்பதை அழகாக கூறுகிறார் மூககவிகாஞ்சீயின் எல்லையுள் ஒரு குமாரி காம சா்த்ரத்தைப் போதிப்பதில் பேராரசிரியையாகி தன் கடைக்கண் நோக்கால் காமனை வென்றவரையே மயக்குகிறாளாம்.

நெற்றிப் பொறியினில் நீராகி மாரன் நிலம்படவும்
செற்றப் பரமனை சேல்விழிப் பார்வையில் சேர்த்தணைக்கும்  
பெற்றியைப் பெற்றவள் பேறெனக் காஞ்சிப் பெருங்குருவாய்
பற்றிப் பரமர்க்கு பஞ்சர பாடம் படிக்கிறாளே!

பஞ்சர பாடம் - காமனுடைய சாத்திரம்; பஞ்சர் - பஞ்ச சரம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...