மார்ச் 15, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 14

अधिकाञ्चि परमयोगिभिरादिमपरपीठसीम्नि दृश्येन
अनुबद्धं मम मानसमरुणिमसर्वस्वसम्प्रदायेन 14

அதிகாஞ்சி பரம்யோகிபிராதிம பர பீடஸீம்நி த்ருச்யேன |
அனுபத்தம் மம மானஸம் அருணிம ஸர்வஸ்ய ஸம்ப்ரதாயேன || (14)

மாயோகிகளால், காஞ்சீபுரத்தில், ஆதி பீடமான காமகோடி பீடத்தில் பார்க்கப்படுவதும், சிவப்பு நிறத்தின் சாரமாய் இருப்பதுவும், தொடர்ந்து வழிபடுபவர்களால் உணரப்பெற்றதாக உள்ளதுமான ஸ்ரீகாமாக்ஷி, என்மனம் தன்னில் நிதம் ஈர்க்கப்பட்டு, ஈடுபட, நிலைக்க என்னில் நிறைந்தவளாம்.

மாயோகி கள்காணும் மாநகர் காஞ்சியில் மாபொருளாள்
ஆயோகி யர்போற்றும் ஆதியாம் பீடம் அமர்ந்தவளாம்
தாயாள்செம் மைநிறத் தாலே நிரம்பினாள் தன்நினைவில்

நேயேன் மனத்தை நிலைசெய ஈர்ப்பாய் நிறைந்தனளே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...