अङ्कितशङ्करदेहामङ्कुरितोरोजकङ्कणाश्लेषैः ।
अधिकाञ्चि नित्यतरुणीमद्राक्षं काञ्चिदद्भुतां बालाम् ॥15॥
அங்கித சங்கர தேஹாம் அங்குரிதோரோஜ கங்கணாச்லேஷை: |
அதிகாஞ்சி நித்யதருணீம் அத்ராக்ஷம் காஞ்சித் அத்புதாம் பாலாம்
|| (15)
மொட்டிட்ட மார்பின் நுனியாலும், முன்கை வளையாலும் சிவபெருமானது உடலைத் ஆரத் தழுவி அடையாளமிட்டவளும் (களங்கம் - குறி), என்று இளமை மாறாதவளும், வியப்புக்குரியவளுமான பெண்ணொருத்தியை காஞ்சீயிலே கண்டேனே.
மொட்டிட்ட மார்பொடு முன்கை வளைகளால் முன்னமவள்
கட்டித் தழுவினாள் காமேஸ் வரனே களங்கமுற்றான்
கட்டுக் குலைவிலா கன்றா இளமைசேர் கன்னியவள்
விட்ட கலாத வியப்பினை காஞ்சியில் விள்ளுவனே!
விள்ளுதல்
- தெளிதல்; களங்கம் - குறி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam