மார்ச் 14, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 13


आम्रतरुमूलवसतेरादिमपुरुषस्य नयनपीयूषम्
आरब्धयौवनोत्सवमाम्नायरहस्यमन्तरवलम्बे 13

ஆம்ரதருமூல வஸதே: ஆதிம புருஷஸ்ய நயன பீயூஷம் |
ஆரப்த்த யெளவனோத்ஸவம் ஆம்னாயரஹஸ்யம் அந்தரவலம்பே ||   (13)

மாமரத்தினடியே வசிக்கும் ஆதிபுருஷனது கண்களுக்கு அமுதமானதும், இளமையின் உற்சவத்தைத் தொடங்கியுள்ளதும், மாமறைகள் கூறும் மந்திரங்களின் உட்பொருளுமானதொன்றை, உள்ளத்தில் இறுகப்பிடித்துள்ளேன்.

மாமரத் தின்கீழ்வாழ் மாதேவன் கண்ணுக்கு மாவமுதை
பாமையை என்றும் பதினாறாம் சீரிளப் பாங்கதனை
மாமறை கூறிடும் மந்திர வுட்கரு வானவொன்றை

நேமத்தோ டேயெந்தன் நெஞ்சில் இறுக நிறுத்துவனே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...