மே 31, 2012

குறளின் குரல் - 51


May 31st,  2012

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
                                (குறள் 41: இல்வாழ்க்கை அதிகாரம்)

Transliteration:
ilvAzvAn enbAn iyalbudaiya mUvarkkum
nallAtRin nindRa thuNai

ilvAzvAn enbAn – one who leads a good family life (gruhasthAsrama – illaram  - இல்+அறம்)
iyalbudaiya -  who stead the path of virtues (the four paths “brahmacharyA”, “gruhasthA”, “vAnaprasathA” and “sanyAsa”)
mUvarkkum – to the people of other three virtuous paths such as brahmacharya, vAnaprasthA and sanyAsa
nallAtRin  -  helping them to stand by their path by doing the necessary things as often as needed
nindRa thuNai – standing as a support (for people of other three paths)

Among the four ashramas prescribed for mankind viz., “brahmacharyA”, “gruhasthA”, “vAnaprasathA” and “sanyAsa”, vaLLuvar focuses primarily on “gruhasthasramA” (illaraviyal - இல்லறவியல்) and sanyAsa (thuravaraviyal - துறவறவியல்) as he deems them to be  virtues of utmost importance.

For life to sustain on this earth, people must follow what is ordained for the path they have chosen.  There are four paths, eachone virtuous in its own right. A disciplined disciple’s life that learns from a teacher of high value, a family life where needs of spouse, children, parents, siblings, relatives, friends and the society around us are all cared for, a life of retirement,  known as vAnaprastha to spend the end of life with the spouse in divine thoughts without any further duty commitments to the family or society, a life of ascetic path where the primary goal is to renounce the worldly pursuits and see the higher truths for the benefit of the society.

Of all these four virtuous paths, a family life is the liveliest, life continuing part and act as the wheel of the society to run as well oiled machine. They act as the support to the other three paths.

How?  The societal chariot is run by the people that lead the family life; they create, govern, share and distribute wealth and support systems required for the society to run.

Students of the society are the future home makers and thought leaders. They must pursue their learning without the worries of earning and other commitments.

The retired people have crossed other two phases and have to come to an end of life cycle stage and they must be supported, which is in a way social security for everyone towards end of life. They can not be let down by the people of the society. Vanaprasatha used to be a journey at the dusk of life to be devoid of attachments and prepare self for parting the mortal coil aspiring oneness with Godhead.

The people of ascetic life are without attachements and big needs, but they act as the collective conscience of the society; they pursue the higher truths and educate the society with ethical aspects of life and pray for the welfare of the people of the world.

So, people that lead family life are the support for all the above and hence are placed high among the four. It is in this context, the saint poetess AuvayyAr also said, “there is no virtue better than the virtue of family life”.

Those who lead the family life by virtues ordained,
are a support to other three to stand in good stead

தமிழிலே:

இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தை செம்மையாக நடத்துப்பவன் (என்பான் என்பது, செம்மையாகச் செய்பவரை குறித்தது)
இயல்புடைய – அற இயல்புடைய, அதாவது, மாணவப் பருவம் ( பிரம்மசரிய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள்), வாழ்க்கைத் துணையோடு கானேகி இறை சிந்தனையிலிருப்பவர்கள் (வானப்ரஸ்தர்கள்) , துறவறத்தில் இருப்பவர்கள்
மூவர்க்கும்  - மேலே சொன்ன மற்ற மூன்று அறவழி வாழ்பவர்க்கும்
நல்லாற்றின் – அவரவர் அவரவர் அறத்தில் நிலைபெற ஏதுவாக தொண்டாற்றி
நின்ற துணை – அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற துணை!

இல்லறவியலில், இல்வாழ்க்கை ( குடும்ப வாழ்க்கை) என்னும் அதிகாரத்தில் இவ்வுலகின்கண் உயிர்ப்பும், பல வளங்களும் நிலைபெற, முறிவு பெறாமல் வழிவழியாக குடியினர் பெருக, சீர்மையான இல்லறத்தோரின் தேவையினையும், அவர்கள் ஆற்றவேண்டிய கடமைகளையும் கூறியுள்ளார்.


மனிதர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் பின்பற்ற தக்கவை நான்கு வித ஒழுக்க நெறிகளாம்.  



  • கட்டுப்பாடோடு கற்றல் என்கிற ஒருமுக எண்ணத்தோடு உள்ள மாணவப்பருவம்; 
  • மனைவி மக்களோடு இருந்து, குடியும், சுற்றமும் மற்றவரும் வாழ கடமையாற்றுகின்ற இல்லறம்; 
  • வாழ்வு நிறைவோடு அமைந்து, முடிந்து, மனைவியோடு, கானேகி, வாழ்விறுதி நாளை இறையுணர்வோடு கழிக்கக்கூடிய வானப்ரஸ்தம் என்று வடமொழியில் கூறப்படும் கானேகுதல்; 
  • இவைதவிர உலகியல் வாழ்வை ஒதுக்கி, விருப்பு வெறுப்பு என்னும் நிலைகளைக் கடந்து, உயர் பொருளை அறிய விழைந்து மேற்கொள்ளும் துறவு நிலை.

இந் நிலைகளிலில் துறவு நிலையைத் தவிர, மற்ற மூன்று நிலைகளிலும், இல்லறமே பெரும்பகுதியைக் கொண்டது. அவ்வில்லறத்தோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட அறநிலைகளில், செயல்களில் வழுவாது இருந்தால், மற்ற மூன்று நிலைகளில் உள்ளோர்க்கு அது பெருந்துணையாகும்.

இல்லறத்தோர் எப்படி இவர்களுக்குத் துணையாக முடியும்? இல்லறத்தோரே பெரும்பாலும் மக்கள் குடியின் வாழ்வாதாரங்களை உருவாக்கி, உண்ணும் உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்று மற்றும் பலவித செல்வங்களையும் உருவாக்கி சமுதாயத் தேரினை ஓடவைக்கிறவர்களாக இருக்கிறார்கள். 


அவர்கள் நல்லறம் நின்று தங்கள் கடமைகளைச் செய்தாலே, கற்றல், வாழ்ந்து முடிந்து களைப்பாறக் கானேகல், தவம் என்ற மூன்று நிலையில் உள்ளவர்கள் தங்களுக்குரிய அறங்களை, கடமைகளை செய்வதற்கு வேண்டிய தேவைகளை தடையறாமல் செய்யமுடியும். அதனாலேயே அவர்களைத் துணயெனக்கூறியதும், அவர்களை நால்வகை அறநெறி நின்றோருள்ளும் உயர்வாய் வைத்ததும்.

இதையொட்டியே, ஔவையும், “இல்லறமல்லது நல்லறம் அன்று” என்று கூறியதும்.

இன்றெனது குறள்:
நானிலையின் மேனிலையார் இல்லறத்தார் நல்லறத்தில்
நானிலத்தில் மூவருக்கும் சார்பு

(நானிலையின் – மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட நான்கு அறநிலைகளில்; மேனிலையார் – உயர்வான நிலையுடையார்; சார்பு - துணை)

மே 30, 2012

குறளின் குரல் - 50


May 30th , 2012

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
                                (குறள் 40: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:

seyaRpAla dhOrum aRanE oruvaRku
uyaRpAla dhOrum pazhi

seyaRpAladhu – What must  be done (by any and everyone)
Orum – with clarity and understanding
aRanE – virtuous deeds
oruvaRku – for anyone ( should be interpreted for everyone)
uyaRpAladhu – That which must be rid of
Orum - with clarity and understanding
Pazhi – those deeds that bring defame and slander

This verse completes the last chapter of first section “pAyiraviyal” in aRaththuppAl, by giving the essence of this chapter. The summary in nutsheel is given as, virtuous life, ways and deeds are worthy of leading, following and doing; whatever brings slander and defame should be avoided and eliminated. 

Through the chapter, after discussing the glory and gains of virtuous life, ways and deeds, why should everyone must tread that path, what defines virtuosity,  how does it pave way to legitimate happiness and uplifts a soul to birthless of exalted state,  in this verse, he simply says, one must be virtuous and do deeds.

The last sentence is the most important. Even if all this reasoning does not work for someone, he advises to avoid, eliminate the sinful, slanderous deeds (which are only known to the innerself of everyone) from ones life implying that alone would stead them in virtuous path and life.

His comprehensive understanding of psychology of the world is revealed through this verse. More than giving reasons for being certain way, he appeals to the inner conscience of everyone, which definitely know what is wrong from right and he advises the world to be devoid of ways, activities, deeds that bring defame and smear.

Deeds worthy of doing are virtuous for all
Discard slanderous deeds that bring a fall

தமிழிலே:

செயற்பாலது செய்யக்கூடிய செயல்கள் (யாருமே)
ஓரும் – தெளிந்த, ஆராய்ந்த (வெற்று அசைச் சொல்லாகவும் பொருள் கொண்டுள்ளனர் சில உரையாசிரியர்கள்)
அறனே - அறச்செயல்களே
ஒருவற்கு – ஒருவற்கு (ஒவ்வொருவருக்குமே என்று கொள்ளவேண்டும்)
உயற்பாலது – ஒழிக்கத் தக்கவை, விலக்கத் தக்கவை, கொய்தெறிய வேண்டியவை
ஓரும் – தெளிவாக (வெற்று அசைச் சொல்லாகவும் பொருள் கொண்டுள்ளனர் சில உரையாசிரியர்கள்)
பழி – பழிக்கத்தக்கனவாம் செயல்களும், வழிகளும்

அறத்துப்பாலின், பாயிரவியலின் இறுதி அறன் வலியுறுதல் அதிகாரத்தின் இறுதிக் குறளின் குரல் இதுவரை சொன்னவற்றின் சாரமாகச் சொல்லப்படுகிறது. செய்யத்தக்கவையான செயல்கள், அறவழிச் செயல்களே, கொய்தெறிய வேண்டியவை, பழியைச் சேர்க்கும் செயல்கள் என்று சுருக்கமாக கூறி முடிக்கிறார் வள்ளுவர்.

அறத்தின் சிறப்பு, ஏன் அறவாழ்க்கை வாழவேண்டும், எதுவெல்லாம் அறம், அது எவ்வாறு முறையான இன்பத்துக்கு வழி வகுத்து, பிறவியில்லாப் பெருநிலைக்கு உயர்த்துகிறது என்றெல்லாம் கூறிவிட்டு, இறுதியாக, அறவாழ்வில் இருக்க காரணங்களையோ, பயன்களையோ சொல்லாமல், செய்யத்தக்கவை அறச்செயல்களே என்று கூறுகிறார்.

விலக்கத்தக்கவை, பழிவரும் செயல்கள் என்று கூறி, பழிவரும் செயல்களைத் தவிர்ப்பதே அறவழி வாழ்வாகும் என்று கூறிமுடிக்கிறார். அறம் இதுவென தெரியாதவர்கள்கூட, பழி சேர்க்கும் செயல்கள் எவை என்பதை, தங்கள் உள்ளங்களில் அறிவார்கள் ஆதலால், அதை இறுதிச் சொல்லாக வைத்து பழியில்லா வாழ்வை வாழச் சொல்லி, இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்.

இது வள்ளுவர் உலகின் உளவியலை அறிந்த சிறப்பைக் காட்டுகிறது. காரணங்களைச் சுட்டி, ஒன்றைச் செய்யவேண்டும் என்பதைவிட, “தயைசெய்து, உங்கள் மனசாட்சிக்கு, இதனால் பழி வரும் என்று தெரிவதை விலக்குங்கள்” என்று சொல்வதாலேயே, எல்லாதரப்பினருக்கும், மனதில் தைக்கக்கூடிய விதத்தில் அறனை வலியுறுத்திவிட்டார் வள்ளுவர்.

இன்றெனது குறள்:
நல்லறம் செய்தகவாம் எல்லோர்க்கும் அஃதன்றி
அல்லறம் கொய்தகவா மே

(அறத்துப்பாலின் பாயிரவியல் முடிவுறுகிறது)

மே 29, 2012

குறளின் குரல் - 49


May 29th, 2012

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
                                (குறள் 39: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:

aRaththAn varuvadhe inbam matRellAm
purththa pugazhum ila

aRaththAn – Living virtuously
varuvadhe  - brings forth
inbam – happiness (implied long lasting)
matRellAm – Other forms of transient and what seem to be happiness are
purththanot truly happiness, genuine or sutainable
pugazhum ila – also they (happiness sought through non-virtuous ways) don’t bring glory (implied that they will destroy the glory and slander)

This verse says that fulfilling happiness comes from leading a virtuous life. What seems happiness, illgotten is but transient and ignoble.

Here in this verse, vaLLuvar stresses on an exalted fact, without dressing up, in simple terms. Reading Parimelazhagar commentary, we see that he has attributed the word “inbam” to conjugal bliss entirely, which narrows the scope of this verse and the vast amount of things that can bring true happiness in genuine virtuous ways. Afterall happiness is associated with the senses we are blessed with.

The beauty of nature, sweetness of music, thirst quenching water for the dry tongue, a good food for starved stomach, deity’s prayer for the devout, baby talk of little children, a caress of gentle breeze and may such things are unadulterated happiness and bliss for everyone; for those who get them by proper means they are genuine too.

When someone records his/her thoughts as a literary work, the experiential nature of what they heard, saw, read, realized come in handy to make a forceful case for what they write. vaLLuvar has also probably done the same. When a conscience functioning  and just thinking literati sees a widespread pattern of moral depravity in a society, overwhelmed by a sense of responsibility and righteousness, they pour their thoughts in their recorded works. (What should we call the people that write liiter and call that literature? May be “litterati” or “illiterati”? ). When we read books on ethics, morality and philosophy, definitely such thoughts cross our minds.  Regardless of how elevated we want to feel about our Tamil Society, like any other world society, we have also had mixed bag always, of people and personalities - good in measure and bad in abundance. Looking at the overwhelming list of ethical works for over 2000 years, this is very apparent. We need to realize vaLLuvar as one such realized soul that wanted to record good principles of life for people watching how the society of his time was!

“Life of virtue brings true happiness - rest apparent
Glee and glory are indeed ignoble and transient”

தமிழிலே:
அறத்தான் – அறவழி வாழ்வினால்
வருவதே - அடையக்கூடிய
இன்பம் – இன்பங்களே நிலையான இன்பங்கள்
மற்றெல்லாம் – மற்றவையெல்லாம் (இன்பங்களைப் போன்ற தோற்றப் பிழைகள்)
புறத்த  -  இன்பம் போலிருந்து துன்பத்தில் சேர்ப்பவை
புகழும் இல – அவற்றால் நமக்கு புகழும் கிடையாது (நம்மை இகழ்வென்னும் குழியில் தள்ளிவிடக்கூடியவை)

அறவழியில் நின்று முறையானவற்றில் அடைவதே நிறைவான இன்பம். பிற வழிகளில் அடைய விரும்பும், அடையும் இன்பங்கள் எல்லாம், ஒரு குறுகிய கால மகிழ்வினைத் தந்தாலும், நிலையானதாகவோ, மன நிறைவாகவோ இருப்பதுமில்லை. அவ்வழியில் நாம் அடையும் இன்பங்கள் நமக்கும் புகழையும் சேர்க்காது.

இக்குறள் ஒரு உயர்வான உண்மையை, மேல்பூச்சு எதுவுமில்லாமால், எளியதாய் சொல்கிறது. இதற்கான பரிமேலழகர் உரை, “இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது, அதனோடு பொருந்தாது வருவதெல்லாம் இன்பமாயினும், துன்பத்தினடத்து” என்கிறது.  இன்பத்தை, முறையான இல்லறத்தில் மட்டும் வைத்தது பொருந்தவில்லை. இன்பமும், அழகும் நுகர்வோரின் புலனுணர்ச்சியை ஒட்டியவை.

இயற்கையின் அழகில் இன்பம், கேட்கும் இசையினில் இன்பம், வரண்ட நாவுக்கு நீர் இன்பம், வற்றிய வயிற்றுக்கு உணவு இன்பம், பக்தியிலிருப்போருக்கு பரமனே இன்பம், குழந்தையின் மழலையில் இன்பம், மெல்லிய காற்று வீசும் போது இன்பம் என்று இன்பங்களில்தான் எத்துணவகை? இவ்வெல்லாவற்றையும் முறையான வழியிலே அடைவோருக்கு அவ்வழியே இன்பமாகிவிடும்.

ஒருவர் தன் கருத்துக்களை இலக்கியமாக படைக்கும் போது, கண்ட, படித்த, கேட்ட, உணர்ந்த நிகழ்வுகள், செய்திகளை வைத்தே எழுதுகிறார்கள். வள்ளுவரும் அவ்வாறே செய்திருக்கக்கூடும். ஒரு பரவிய அளவிலே முறையற்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போதே, எந்தவொரு இலக்கியவாதிக்கும், அதைப்பற்றி தாக்கத்தோடு எழுதமுடிகிறது. நீதி நூல்களைப் படிக்கும் போது, இந்த எண்ணம் வராமல் போவதில்லை. நாம் என்னத்தான் தமிழ் சமுதாயத்தின் பெருமையினை உயர்த்திப் பிடித்தாலும், எந்தவொரு  சமுதாயத்தையும் போல, தமிழின வாழ்வியலிலும், எந்தவொரு காலகட்டத்திலும், சீர்கேடுகள், முறையற்றவை நிறையவே இருந்திருக்கின்றன! அவற்றைக் கண்டும், உணர்ந்தும், செய்யத்தக்கன இவை, தகாதன இவையென்று, நீதி மொழிகள் சொன்ன சான்றோர்கள், படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகத்தான் நாம் வள்ளுவரை உணரவேண்டும்.

இன்றெனது குறள்:
அறந்தரும் இன்பமே மெய்யும் புகழும்
பிறவெல்லாம் தோற்றப் பிழை

மே 28, 2012

குறளின் குரல் - 48


May 28th, 2012

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
                                (குறள் 38: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transiliteration:

vIzhnAL paDAamai nandRAtRin ahgdhoruvan
vAzhnAl vazhiyaDaikkum kal

vIzhnAL  - the waning days of life
paDAamai – waiting for (the waning days)
nandRAtRin – stead the virtous path of life
ahgdhoruvan – that will serve for someone
vAzhnAl  - another birth on this earth with this mortal coil
vazhiyaDaikkum –that blocks the way (to rebirth)
kal – the rock!

The desires of five senses and the derived dual nature of deeds, result in the strife filled cycle of life and death. The sum total thought expressed in this verse is this:  if someone can live virtuously without wasting a day waiting for waning days of life, his gains would stand as the big rock that blocks the way to another birth on this earth relieving us,

As written before, though vaLLuvar has expressed a lot of very rare thoughts in such short beautiful verses, but sometimes, it appears that he has refuted himself. When such conflicting ideas are expounded in different chapters, at least we can try to see if the context of the chapter is in alignment. When they appear in the same chapter, that too next to each other, we are left wondering where his stand is and what he is trying to say truly.

When I write this, I do with all humility, and try to be just a little bit more inquisitive to get into the mind of vaLLuvar.. Sadly, most of the commentators, as I said before, are seeing every verse in silos and have tried to explain only the verse in focus, without seeing them in connection with others. They have failed to apply what vaLLuvar himself has vehemently advocated that everything has to be under scruitiny for knowing the true merits.

Just in the last verse he said that we should not take the metaphors cited in the books and scriptures of philosophical, ethival and virtuous principles and wrongly interpret them. In this verse, he himself has violated his saying by writing something with another metaphor to insist on “virtuous living”!  Many a poets have written, being thankful to the beauty around them, addressing to God,  “ How many reasons for happiness have you created?” Is this world so painful that the only goal should be to seek a state of rebirthlessness, moksha, or vIDu (வீடு) which itself is question in many minds.  

If someone lives a life filled with virtuous ways, what’s wrong in their desire to be reborn, if that’s possible? Just a hypothetical question - What is that big state of birthlessness that everybody has aspired to.  Is this some kind of realestate owned by God to be allocated to worth suitors? In that case, isn’t it self a desire?

As said in a different verse, if somebody has lived through his life virtuously, what should he or she fear about the future births, as the gains would be carried on to future births anyway.  Why is this hung up idea of birthlessness in many great people’s thoughts? If those great souls such as Rama, Krishna, Bhudda and Jesus, or Vivekananda and many others that have lived an exemplary life to be model beings, are reborn, would not his earth itself reform and flourish and  be a heaven to live?

If everybody stays the virtous path and are not reborn, the life on this earth will shrink and be nothing. Is that what desired by such great souls. It feels like a different version of the judgment day seeking pagan-religio thinkers and the religious converters. Both display a defeatist attitude in different ways.

It is one of those verses where vaLLuvar has contradicted himself and confused us also!

“Stay virtuous not waiting for evening of the life
It is the rock that blocks the treacherous cycle of strife”

தமிழிலே:

வீழ்நாள் – வாழ்விறுதி நாட்கள்
படாஅமை – வரும் வரைக்கும் காத்திராமல்
நன்றாற்றின் – நல்லறவாழ்வினை வாழ்ந்தவர்க்கு
அஃதொருவன் – அவ்வாழ்வு ஒருவருக்கு
வாழ்நாள் – அவருடைய பிறந்திறக்கும் அவத்தையான வாழ்வுக்கு
வழியடைக்கும் – மீண்டும் வரும் வழியை அடைக்கும்
கல் – பெரும் பாறையைப் போலாகும்

ஐம்புலன் ஆசைகளால் வரும் இருவினைப் பயன்களால், மீண்டும் மீண்டும் பிறந்திறப்பது பெரிய அவத்தை, ஆதலால் வாழ்வின் பொழுது சாயும் வேளைவரை காத்திராமல், என்றும் அறவழி நின்றோர்க்கு, இவ்வுடம்போடு மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் கல்லாக, அவரது அறவாழ்வே துணை நிற்கும்.

முன்னரே எழுதியதுபோல, வள்ளுவர் சொல்வது, பெரும்பாலும் அரிய கருத்துக்களாயிருந்தாலும், சில சமயங்களில் தன்னையே மறுத்துகூட எழுதினாரோ என்று தோன்றுகிறது. இப்படி மாறுபட்ட கருத்துக்கள் வெவ்வேறு அதிகாரங்களில் வரும்போது ஓரளவுக்கு, அதிகாரத்தின் தன்மைக்கும், பொதுவான பொருளுக்கும் பொருந்தியாவது வருகிறதா எனப்பார்க்கலாம். ஒரே அதிகாரத்தில் அடுத்தடுத்து வரும் போது, என்னத்தான் சொல்ல வருகிறார் இவர் என்று எண்ணத்தோன்றுகிறது.

இதை வள்ளுவரையே கேள்வி கேட்க முடிகிறது என்கிற தலைக்கனத்தில் கேட்கவில்லை. உண்மையான ஆர்வத்திலேதான் கேட்கிறேன். 

சென்ற குறளில் தத்துவ விசாரணை மற்றும் அறநெறி நூல்கள் உவமையாகக் கூறுவதையெல்லாம் அப்படியே பொருள் கொள்ளக்கூடாது என்று சொன்னார். இக்குறளில் அவரே வலிய வந்து இதுதான் உண்மையென்பது போல ஒரு உவமையைக் கூறுகிறார்.  ஒரு புலவர் எழுதுகிறார், “எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்” என்று. இவ்வுலகம் அத்துணை கொடுமையானதா?  மற்றொருவர் எழுதினார் வாழ்க்கை வாழ்வதற்கே என்று! எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாமல், விளைவிக்காமல் இருக்கும் வாழ்வே அறவாழ்வுதானே? அப்படி வாழ்பவர்க்கு ஏன் மறு பிறவிகூடாது. அப்படி பிறவியில்லாப் பெருநிலைதான் என்ன?

இன்னொரு குறளில் கூறியதுபோல, அறவழியிலே நின்று மடிந்தவொருவருக்கு, அவ்வழிப்பலன் பிற பிறவிகளில் தொடருமானால், அவர் அஞ்ச வேண்டியது என்ன? மறுபிறவியே வேண்டாம் என்று மறுபடியும் மறுபடியும் கூறுவது எதனால்?  மனித குலம் உய்வதற்காக பெரும் பிறவிகள் மீண்டும் மீண்டும் பிறந்தால்தானே உலகினரை நல்வழிபடுத்த முடியும்… இராமனோ, கிருஷ்ணனோ, புத்தனோ, ஏசுவோ, விவேகானந்தரோ, இன்னும் எத்துணையோ வாழ்ந்து முடிந்த நல்வழிச் செம்மல்கள், உலகில் இருந்தால்தானே உலகில் அறவியல் வாழ்வு தழைக்கும், செழிக்கும்?

எல்லோரும் அறவழி நின்று, உலகை நீங்கி மீண்டும் பிறவாமல் விட்டால், உலகில் பிறப்பு சுருங்கி ஒன்றுமில்லாமல் ஆகவேண்டும் என்கிற எண்ணமா? இதற்கும், இறுதி நீதி வழங்கும் நாளுக்காக, மதமாற்றம் செய்யும் மதங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ன? இரண்டுமே தோல்வி மனப்பான்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகளே!

வள்ளுவன் தன்னிலே முரண்பட்டு, நம்மை குழப்புகிற குறள்களில் ஒன்றிது!

இன்றெனது குறள்:
செய்யாத நாளில்லை என்றறம் ஆற்றதுவே
பொய்க்க பிறப்படைக்கும் கல்

மே 27, 2012

குறளின் குரல் - 47


May 27th, 2012

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
                                (குறள் 37: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:
aRaththu + Aru – The gains of staying virtuous
idhuvena  - this is what we get (by staying virtuous)
vENDA  = don’t be blinded by what you see
sivigai – the palanquin
poruththAnODu  - bearer of palanquin
UrndhAn – the who rides in the palanquin
iDai – between the two (palanquin bearer/rider)

When we look at the palanquin bearers and the person who is travelling in the same, two thoughts can arise. We may attribute the causal effect of virtuous ways to the person sitting inside the palanquin and the curse of ill deeds to the persons who are carrying the palanquin. This kind of comparison, implied in some scriptures as text book thoughts should not bias us in deciding them as the result of virtuous ways or otherwise. It is simply not prudent.

If one has to bear the burden of ill deeds, does it mean that the person inside or the palanquin, is such a burden? First and foremost thing to bear in mind is that the virtuous people, would not live in somebody’s toil. Also, the virtuous people would not mind any type of job as inferior and nothing would be construed as a burden of curse, but the call of duty.

We have to remember the story of Thirungnana Sambadhar (the child saivite saint poet). Appar (aka Thirunavukkuarasar) carried the palanquin of Sambandar, though he was much older to Sambandar. He was the  oldest of the four tamil saivaite saints, who were important figures in the Bhakti movement. Appar cherished it as a gift to carry the embodiment of virtue, the great saint. Neither was he non-virtuous nor Sambandar was a burden of ills. It was a story of virtue carrying virtue and implies even to carry virtue one has to basically virtuous.

So, vaLLuvar underlines in this verse that unfitting metaphors should not be used to be  decide who is virtuous or not.  Also he implies that being virtuous is not done out of fear or expecting a return on investment. We should tread the virtuous path for its absolute merit and because it is the only right way to be!

The phrase “pondRungAl pondRath thuNai” in the previous kuraL was also not to give it as an incentive for people to stay virtuous but as a factual benefit.

Palanquin bearers and the traveler inside do not bear testimony
To stand as a measure of ones virtuosity and decide his destiny

அறத்தாறு (அறத்து ஆறு) – அறத்தினால் கிடைக்கும் பயன்.
இதுவென – இது தான் போலென்று எண்ணி
வேண்டா – மயங்க வேண்டா (ஒப்பு நோக்கி)
சிவிகை – பல்லக்கு
பொறுத்தானோடு – சுமந்து செல்பவனோடு
ஊர்ந்தான் – அதிலே பயணிப்பவனை
இடை – இவர்கள் இருவருக்கும் இடையே இருக்ககூடிய் ஏற்றத் தாழ்வுகள்)

பல்லக்கில் செல்பவர்களையும் அந்த பல்லக்கை சுமப்பவர்களையும் பார்க்கும் ஒருவர் இருவிதமாக எண்ணக்கூடும். அமர்ந்து செல்பவரைப் பார்த்து, அவருடைய நல்வினைப் பயனால் அவருக்கு அச்சிறப்பு என்று நினைப்பர். எப்போது செய்த தீவினைப் பயனோ, இன்று பல்லக்கைச் சுமந்து செல்கிறார்கள் என்று சுமப்பவர்களைப் பார்த்தும் நினைப்பர்.

இவ்வாறு ஒப்பு நோக்கி, இவைதான் அறவாழ்வினால் கிடைக்கும் பயன்களென்று, நூற்கருத்துக்களை ஒட்டி எண்ண வேண்டாம்.

அவரவர் தீவினை விளைவுகளை அவரவர் சுமப்பது நியதி என்றால், பல்லக்கோ, அல்லது அமர்ந்தவரோ பாவச் சுமை என்று ஆகிவிடுமா?  ஏனெனில் நல்லறத்தோர் பிறர் துன்பத்திலுழல தான் வாழமாட்டார்.  
அதுபோலவே, நல்லறத்தோர் தாம் செய்வது எப்படிப்பட்ட வேலையாயினும் அதை தமக்கு ஏற்பட்ட கடமையாகவே செய்வார்கள். அதை தம் பாவத்தின் ஊதியமாக நினைந்தும் வருந்தமாட்டார்கள்.

திருஞான சம்பந்தப்பெருமான் அமர்ந்திருந்த பல்லக்குத் தூக்கிகளில் அப்பர்பெருமானும் ஒருவராக இருந்து பல்லக்கு தூக்கி சென்ற கதை நினைவுக்கு வருகிறது. அது புண்ணியத்தை புண்ணியம் சுமந்த கதை. புண்ணியத்தை சுமக்கவும் புண்ணியம் வேண்டும் என்பதை சொல்லுகிற கதை.

இக்குறளின் மூலம் பொருந்தா உவமைகளால், அறச்சிந்தனைகளை நாம் நினவுகொள்ளக் கூடாது என்பதையே வள்ளுவர் கூறுவதாகத் தெரிகிறது.  இரண்டாவதாக, அறத்தை பயன் எதிர் நோக்கியோ, அல்லது தீவினை சுடும் என்கிற அச்சத்தாலோ செய்தல் கூடாது.

அப்போது “பொன்றுங்கால் பொன்றாத் துணை” என்றது எதனால்? அறத்தின் பயன் பின்வரும் பிறவிகளிலும் நம்மைத் தொடர்ந்து வந்து நம்மைக் காக்கும் என்பதை வலியுறுத்தமட்டுமே

இன்றெனது குறள்:

பல்லக்கில் செல்வார் சுமந்தார்கள் சான்றில்லை
சொல்லவறம் ஈதென்ப தற்கு

மே 26, 2012

குறளின் குரல் - 46


May 26th, 2012

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
                                     (குறள் 36: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:

anRarivAm ennAdhu aRanjcheiga matRadhu
pondRungAl pondRA thuNai

anRarivAm – The thought that, we can be virtuous later in life after the present youthful days are spent in other pursuits, (Towards the end of life) and postponing
ennAdhu  - without giving excuses as above
aRanjcheiga – live virtuously and do good things
matRadhu – because "that" will  (staying the virtuous path)
pondRungAl – When the life is to leave this body 
pondRA – unfailing (the one which will bring the account in good stead in later births)
thuNai – support (that will continue in our successive births too)

Some people have the tendency to say, that there is no real urgency to be good and stay the life with good virtues. They claim that they are in their prime of youth and want to act accordingly; they think and say that during the evening of their lives, it is enough to be virtuous.

It is only for such people, vaLLuvar emphasizes that the virtuous ways have to be followed and be done now and every day, not later. Life throws a lot of uncertainties and what if the later day is indeed after somebody becomes “late”?  There is a popular saying, ‘nadRE sei – adhuvum indRE sei’ (நன்றே செய் – அதுவும் இன்றே செய்) which reflects the essence of this verse.  Though there are several works that reflect a similar thought, Papanasam Sivan has beautifully expressed a reply to “andRarivAm” types, in his song by saying “nALai enbAr – yARE kanDAr?” Who can give gurantee of life even the next second?

Learning and practice is essential for everything, especially for good things in life. “ILamayil kal” (இளமையில் கல்) is what is insisted again and again by many learned people and great works. The ability to learn and practice can not come all on a sudden at a later age.

How will, living a virtuous life, come in as a big support when our life is ready to depart the mortal coil as the phrase “pondRA thuNai” indicates? The subtle suggestion here is the belief of successive births (based on our karmas, good and bad), for which our body of this birth will not come with us, but our good deeds will.

Live virtuously, not postponing for evening of the life
As it will be the indestructible support for life after life.

தமிழிலே:

அன்றறிவாம் – இன்று எங்களுக்கு இளமைக் காலம், அதனால், அவசரமில்லை, எங்கள் வயதான காலத்தில் நாங்கள் அறவழிகளில் நடந்து, புண்ணியங்கள் தேடிக்கொள்கிறோம், (என்கிற எண்ணம்)
என்னாது -  என்று எண்ணாமல், சொல்லாமல்
அறஞ்செய்க – அறவழிகளில் செல்க, அறச்செயல்களை செய்க
மற்றது – தவிரவும் அது
பொன்றுங்கால் – இவ்வுடம்பு அழிந்து மறையும் போது
பொன்றாத் – அழியாது நம்முடைய பின் வரும் பிறப்புகளில் தொடர்ந்து வரும்
துணை - உற்ற துணை

சிலர் எங்களுக்கு இது இளமைக்காலம். எத்தனையோ இன்பங்கள் கொட்டிக்கிடக்க அவற்றை அனுபவியாது அறவழி சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபடுவது என்பது எங்கள் இளமைக்கு ஏற்புடைய செயல் அல்ல என்பார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்காகச் சொல்லப்பட்ட குறள்தான் இது. வள்ளுவர் அறிவுறுத்தலாக வலியுறுத்தி, எல்லோரும் அறவழிகளையே நாட வேண்டும், நடக்க வேண்டும், பிறிதொரு நாள் பார்த்துக்கொள்வோம் என்னாமல். ஏனெனில் அவ்வறம்தான், உடல் குன்றி உயிர்  போங்காலத்துக்கு, நமக்கு உற்றதுணையாக, நம்மை பின் வரும் பிறப்புகளிலும் தொடர்ந்து வரும்.

நற்செயல்களை நினைவதையும், நல்வழி நடப்பதையும், தள்ளிப்போடுதல் ஏற்புடைய செயல் அல்ல. வாழ்க்கை எத்தனயோ எதிர்பாராத நிகழ்வுகளைக் கொண்டது. மற்றொரு நாள் என்பது “மறைவுக்குப் பின்” என்று இருந்துவிட்டால்? தமிழிலே இருக்கிற சொற்றொடர், “நன்றே செய் – அதுவும் இன்றே செய்” சொல்வது இதைத்தான். நாளையென்பார்! யாரே கண்டார்? என்ற கருத்தை அழகாகத் தெரிவிக்கிறது இக் குறள்.

“பொன்றாத் துணை” என்பது நம் இரு வினைப் பயன்களும் நம்மைப் பின் வரு பிறவிகளில் தொடரும் என்றதால், அறத்தின் பலன்களே, நமக்கு பின்வரும் பிறவிகளில் துணையாக இருக்கும் என்பதுதான்! இக்குறளும் வள்ளுவர், கரும வினைகளின் பயனாக நடைபெறும், பிறப்பு இறப்பு சுழற்சியில் கொண்டுள்ள நம்பிக்கையை தெரிவிப்பதாகவே இருக்கிறது.

இன்றெனது குறள்:
செய்யறமே வாழ்விறுதிக் காலத்தில் உற்றதுணை
செய்யறத்தை அன்றெனாது இன்று

மே 25, 2012

குறளின் குரல் - 45


May 25th, 2012

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
                                (குறள் 35: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:
azhukkAru avA veguLi innAsol nAngum
izhukkA iyanRadhu aRam.

azhukkAru  - jealousy on others properity
avA  - desires driven  through the five senses
veguLi  - Anger which are causes by the desires and the dejections because of them
innAsol – Words spoken in anger
nAngum – these four which are like the dirt in her mind
izhukkA  - spoil ( If the these undesirable four are  to be spoiled, it will bring goodness.)
iyanRadhu – whateve one can do
aRam – is virtuous or acts of virtue

Instead of listing the virtues and virtues ways, if we eliminate certain undesirable traits that are bad, we automatically tread the virtuous ways in our lives. This is the truth established by vaLLuvar in this verse.

The traits that have to be eliminated are:
  • Our jealousy at other’s prosperity and accomplishments
  • Our indulgence in desires driven by our senses
  • Our anger at others with or without reason.
  • Our caustic verbiage  that cause pain to others


Listing the good traits is a way of emphasizing, but lisitng the bad traits that have to be eliminated from us is a more powerful and , though indirect, is an effective, which is what vaLLuvar has doen through this verse.

Since most of us are victims of our own bad thoughts and traits (more than good deeds which yield fruits much later to be seen or felt.), we see the effects of our own and others bad traits very easily. So, vaLLuvar has used this effectively to emphasize the importance of leading a virtuous life.  If the list is short and sweet, then it makes it easy for people to even accept them and give them a serious try!

Very crisply, he has listed only four bad traits that have to be out of our system to automatically lead virtuous life. If there are example situations or stories behind each one of them, people can probably understand better as they ought to have seen the ill effects of each one of them in their lives more than once. If we start reflecting on even for a second and try avoiding them or begin eliminating them in small steps, it will bring in the desired fruition.

Jealousy, desires, anger, words that are caustic,
Eliminated , brings virtuous life that is automatic.

தமிழிலே:
அழுக்காறு – பிறர் மீது கொள்ளும் பொறமை
அவா – ஆசை – புலன்கள் வழியே செல்லும் பலவித ஆசைகள்
வெகுளி - கோபம்
இன்னாச்சொல் – அதனால் வரும் கடுஞ்சொற்கள் (ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று பின்னால் சொல்லப்போகிறார்)
நான்கும் – என்ற நான்கு மனத்தின்கண் மாசுகளும் (முந்தைய குறளில் கூறிய)
இழுக்கா  - பரிமேலழகர் இதற்கு “கடிந்து” என்று பொருள் கூறுகிறார்.   இழுக்கல் என்பது, கெடல், வழுவுதல், தவறுதல், பிறழுதல் என்ற பொருள்களைக் கொண்டிருப்பதால், கூறிய நான்கு தீய குணங்களும்  “கெட” என்று பொருள் கொள்ள வேண்டும்
இயன்றது - செய்வது
அறம் – தரும, அறச்செயல்கள்

அறம் இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்வதை விட, எவற்றை விலக்கிவிட்டால், எவை நம்மிடமிருந்து கெட்டால், நம் செயல்கள், தாமாகவே அறவழிகளில் நின்றுவிடுமோ, அதையே வள்ளுவர் இக்குறளின் வாயிலாகக் கூறியுள்ளார். 

நம்மிடமிருந்து கெடவேண்டியவை:
  • நாம் பிறறின் வாழ்வைப் பார்த்து கொள்ளும் பொறாமை, 
  • நம் புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் மூழ்குதல்,  (ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள் என்றுதான் சான்றோர்களும், ஆன்றோர்களும் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர்)
  • பிறர் மீது ஒரு காரணம் பற்றியோ, அல்லது, எக்காரணமும்  இன்றியோ  சினம் கொள்ளுதல் (கோபம் பாபம் சண்டாளம் என்று சொல்லக்கேட்ட நினைவு),
  • அத்தகைய சினத்தினால் வெளிவரும், பிறர் மனதை காயப்படுத்துகிற சுடுச்சொற்கள் (யாகாவாரயினும் நாகாக்க, நாவினால் சுட்ட வடு என்று பின்னாலே கூறப்போகிறார்), இவைதாம்.
இருக்கவேண்டிய வேண்டிய நல்ல குணநலன்களைக் கூறுவது ஒரு முறை. தீய குணங்கள் இல்லாமல் கெடவேண்டிச் செய்யச் சொல்வது இன்னொரு முறை. இரண்டுமே வலியுறுத்தும் முறைகள் தான்.

நல்லவையைப் பற்றிச் சொல்லும் போது, பலன்களை கூறுவதால் அவை இறுதிப்பயனை குறிப்பதால், கால வரையரை என்பது நிறைய பேரை ஆயாசப்பட வைக்கும்.

நம்மில் கெடவேண்டிய தீயகுணங்களை பற்றி அடுக்கும் போது, அவற்றை ரத்தின சுருக்கமாகப் பட்டியலிட்டு (நான்கே தான்) அவற்றினால் வரும் பின் விளவுகளைக் கூறி, மனதில் அவை விலகவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தல் பலசமயங்களில் எதிர்பார்க்கும் பயனைத்தந்துவிடும். அதைத்தான் வள்ளுவர் இக்குறளில் செய்திருக்கிறார். அட! இவ்வளவுதானா என்று முயற்சி செய்யத் தொடங்கினாலே, திருவினையாகிவிடுமே!

இன்றெனது குறள்:
பொறாமை புலனாசை கோபம் கடுஞ்சொல்
உறாமை  யதாமே அறம்

மே 23, 2012

குறளின் குரல் - 44


May 23rd, 2012

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
                                (குறள் 33: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:
Ollum vagaiyAn aRavinai OvAdhE
SellumvAi ellAnj cheyal.

Ollum  -  Able to do
vagaiyAn  - in all possible ways ( where one is able to do)
aRavinai  - deeds of virtue
OvAdhE – Without stopping
SellumvAi – by good thinking (mind), good words (speaking) and good deeds (body with its sesnse) bycapable faculties of the body (referring to five senses) – (manO, vAk, kAyam)
ellAnj – Using all of them (the five senses)
cheyal – do (the deeds of virtue)

However possible, stead the virtuous path and deeds, without
pause or stop, with all your capable senses and good thought

Here is a simple verse true to the nature of this chapter insisting on steading the path of virtue and doing the deeds accordingly, wherever and however possible with all capable senses, and good thoughts in mind.

Understanding the limitations of human beings and the capabilities of different people, he makes it simple for everyone. Each is capable of certain things, based on their situations, physical, mental capabilities and what they can do or not. So, he carefully words “Ollum vagaiyaan”, meaning, in whichever possible ways one is capable of doing the good deeds.

But he also insists on consistency and continuity of being and doing so! Afterall, doing good deeds does not take vacation or can be stopped for any reason. Though there is a well known adage “pAththiram aRindhu pichayidu”, referring to the story of how gullible Seethaa was abducted by RaavaNaa, vaLLuvar, does not put such restrictions.

Even though superficially it may seem like that Seetha suffered because of her not knowing who she was giving alms to and what was about to come, the end was good because RaavaNaa was eventually vanquished and killed. So, good deeds done knowingly or unknowingly of immediate repurcushions, eventually bring good in return.

Another subtle point he makes, about “sellum vAi” implying which faculties can do good. The primary faculty that should be good for doing is one’s mind. If the mind thinks good, then whichever faculties are functional and capable of deeds of good virtue, they should be used to do the same. 

So, there are three important aspects that are insisted in this verse. All possible ways, without stop or pause and through all the capable faculties and seses, one must do virtuous deeds.

ஒல்லும் – இயன்ற (தம்மால் இயன்ற, தாம் அறிந்த)
வகையான் - வழிகளிலெல்லாம்
அறவினை – அறச்செயல்களை (அவற்றைச் செய்வதினாலேயே அறவழி வாழ்வு என்பதும் தெளிகிறது)
ஓவாதே – ஓயாமல் (நல்லவற்றைச் செய்வதற்கு விடுமுறையா கொடுக்கமுடியும்)
செல்லும்வாய்  -  செய்யக்கூடிய பொறிவழிகள் (ஐம்புலன்களும், மனம் என்ற சூக்குமமும்)
எல்லாஞ் – அவைகளால் (புலன்களாலும், புலன்களை மற்றும் புலன்களால் இயக்குகின்ற மனத்தினாலும்)
செயல் - செய்வீர்

இந்த எளிய குறளின் மூலம் இந்த அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் “வலியுறுத்தலை” அழகாக, சுருக்கமாக, நறுக்கென்று கூறியுள்ளார் வள்ளுவர். அறவழி நிற்றலையும் வினைகள் ஆற்றுவதையும், எவ்வழிகளிலெல்லாம் முடியுமோ, எப்புலன்களால் செய்யவியலுமோ, செய்யவேண்டும், அதுவும் இடையறாமல், தடையுறாமல்.

வெவ்வேறு மனிதர்களின் ஆற்றல்களின் வேறுபட்ட எல்லகளை மனதில் கொண்டு, எல்லோருக்கும் எளிதாக இருக்ககூடிய வகையிலே இக்குறளை எழுதியுள்ளார். யாரால் எது முடியும் என்பது அவர்களது நிலைகளம், உடல், மற்றும் மனம் சார்ந்த திண்மை, திறமை இவற்றைப் பொருத்தது.  அதனாலேயே “ஒல்லும் வகையான்” என்றது.

அதோடு இல்லாமல், நிலைத்தன்மையும், தொடர்த்தன்மையையும் வலியுறுத்திச் சொல்லுகிறார். அறவழிகளை சிந்தையில் கொள்வதற்கும், அறவழி செயலாற்றலுக்கும் விடுமுறை கொடுக்கமுடியாதல்லவா? ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்ற தொன்மொழி ஒன்றுண்டு. இது, ராவணனுக்கு சீதை பிச்சையளித்ததையும், அதனால் நிகழ்ந்த பின் விளைவுகளையும் மனதில் கொண்டு சொல்லப்பட்டது.  மேலோட்டமாகப் பார்த்தால், அவள் செய்த நல்ல காரியமே அவளுக்கு துன்பச் சிறையை தந்து ராமனிடமிருந்து பிரிவையும் தந்தது. ஆனால் அவள் அறவழி நின்றதாலேயே  ராவாணசுர அழிவு என்கிற நல்லதும் நடந்தது என்ற உண்மையே நம் உள்ளத்தில் தைக்கவேண்டும்.  அதனால் சில சமயங்களில் அறன்வழிகளால், உடன்வரும் துன்பங்களால் துவளாதிருந்தால், முடிவில் நல்லதே நடக்கும் என்பதன் கருத்தே இது.

“செல்லும் வாய்” என்றதால், இயன்ற பொறிவழிகளால் என்று யாரும் எந்தவித “நொண்டிச் சாக்கும்” சொல்லமுடியாதபடி செய்துவிட்டார். நல்லதை நினைக்கும் மனமிருந்தாலேகூட போதுமே! உயிருள்ளவரை மனமிருக்கும், மனமிருக்கும்வரை அறவழி சிந்திக்கலாமே!

முடிவாக, மூன்று சிந்தனகளை முன்வைக்கிறார் “முனைவர் வள்ளுவர்” (பட்டங்கள் பறக்கும் இக்காலத்திலே அவருக்கு ஒரு காலம் முடிந்த விருது கொடுத்தால்தான் என்ன? – தமிழர்கள் தயங்காமல் ஏற்றுக்கொள்வதுதானே!)
இயன்ற அறங்களைச் செய்தல், ஓய்வின்றிச் அவற்றைச் செய்தல், இயன்ற பொறிவழிகளால் அவற்றைச் செய்தல் என்ற மூன்றும்தான் அவை!

இன்றெனது குறள்:

அறிவழியில் இன்னறத்தை செய்வீர் ஒழியாப்
பொறிவழியில் தேர்ந்த விடத்து

(அறிவழி – தெரிந்த வழிகளில்; ஒழியா – முடங்காமல், ஓயாமல்,ஓவாமல்)

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...