May 27th,
2012
அறத்தாறு இதுவென
வேண்டா சிவிகை
பொறுத்தானோடு
ஊர்ந்தான் இடை.
(குறள் 37: அறன்வலியுறுத்தல்
அதிகாரம்)
Transliteration:
aRaththu + Aru – The gains of staying
virtuous
idhuvena - this is what we get (by staying virtuous)
vENDA = don’t be blinded by what you see
sivigai – the palanquin
poruththAnODu - bearer of palanquin
UrndhAn – the who rides in the palanquin
iDai – between the two (palanquin
bearer/rider)
When we look at the palanquin bearers and the
person who is travelling in the same, two thoughts can arise. We may attribute
the causal effect of virtuous ways to the person sitting inside the
palanquin and the curse of ill deeds to the persons who are carrying the palanquin.
This kind of comparison, implied in some scriptures as text book thoughts
should not bias us in deciding them as the result of virtuous ways or
otherwise. It is simply not prudent.
If one has to bear the burden of ill deeds,
does it mean that the person inside or the palanquin, is such a burden? First
and foremost thing to bear in mind is that the virtuous people, would not live
in somebody’s toil. Also, the virtuous people would not mind any type of job as
inferior and nothing would be construed as a burden of curse, but the call of
duty.
We have to remember the story of Thirungnana
Sambadhar (the child saivite saint poet). Appar (aka Thirunavukkuarasar) carried
the palanquin of Sambandar, though he was much older to Sambandar. He was the oldest of the four tamil saivaite
saints, who were important figures in the Bhakti movement. Appar cherished it as a gift to carry the embodiment of
virtue, the great saint. Neither was he non-virtuous nor Sambandar was a burden
of ills. It was a story of virtue carrying virtue and implies even to carry virtue
one has to basically virtuous.
So, vaLLuvar underlines in this verse that
unfitting metaphors should not be used to be decide who is virtuous or not. Also he implies that being virtuous is not
done out of fear or expecting a return on investment. We should tread the
virtuous path for its absolute merit and because it is the only right way to be!
The phrase “pondRungAl pondRath thuNai” in
the previous kuraL was also not to give it as an incentive for people to stay virtuous
but as a factual benefit.
Palanquin
bearers and the traveler inside do not bear testimony
To stand
as a measure of ones virtuosity and decide his destiny
அறத்தாறு (அறத்து ஆறு)
– அறத்தினால் கிடைக்கும் பயன்.
இதுவென – இது தான்
போலென்று எண்ணி
வேண்டா – மயங்க வேண்டா
(ஒப்பு நோக்கி)
சிவிகை – பல்லக்கு
பொறுத்தானோடு – சுமந்து
செல்பவனோடு
ஊர்ந்தான் – அதிலே பயணிப்பவனை
இடை – இவர்கள்
இருவருக்கும் இடையே இருக்ககூடிய் ஏற்றத் தாழ்வுகள்)
பல்லக்கில் செல்பவர்களையும் அந்த பல்லக்கை சுமப்பவர்களையும்
பார்க்கும் ஒருவர் இருவிதமாக எண்ணக்கூடும். அமர்ந்து செல்பவரைப் பார்த்து, அவருடைய
நல்வினைப் பயனால் அவருக்கு அச்சிறப்பு என்று நினைப்பர். எப்போது செய்த தீவினைப் பயனோ,
இன்று பல்லக்கைச் சுமந்து செல்கிறார்கள் என்று சுமப்பவர்களைப் பார்த்தும் நினைப்பர்.
இவ்வாறு ஒப்பு நோக்கி, இவைதான் அறவாழ்வினால் கிடைக்கும்
பயன்களென்று, நூற்கருத்துக்களை ஒட்டி எண்ண வேண்டாம்.
அவரவர் தீவினை விளைவுகளை அவரவர் சுமப்பது நியதி
என்றால், பல்லக்கோ, அல்லது அமர்ந்தவரோ பாவச் சுமை என்று ஆகிவிடுமா? ஏனெனில் நல்லறத்தோர் பிறர் துன்பத்திலுழல தான் வாழமாட்டார்.
அதுபோலவே, நல்லறத்தோர் தாம் செய்வது எப்படிப்பட்ட வேலையாயினும் அதை தமக்கு ஏற்பட்ட கடமையாகவே செய்வார்கள். அதை தம் பாவத்தின் ஊதியமாக நினைந்தும் வருந்தமாட்டார்கள்.
அதுபோலவே, நல்லறத்தோர் தாம் செய்வது எப்படிப்பட்ட வேலையாயினும் அதை தமக்கு ஏற்பட்ட கடமையாகவே செய்வார்கள். அதை தம் பாவத்தின் ஊதியமாக நினைந்தும் வருந்தமாட்டார்கள்.
திருஞான சம்பந்தப்பெருமான் அமர்ந்திருந்த பல்லக்குத்
தூக்கிகளில் அப்பர்பெருமானும் ஒருவராக இருந்து பல்லக்கு தூக்கி சென்ற கதை நினைவுக்கு
வருகிறது. அது புண்ணியத்தை புண்ணியம் சுமந்த கதை. புண்ணியத்தை சுமக்கவும் புண்ணியம்
வேண்டும் என்பதை சொல்லுகிற கதை.
இக்குறளின் மூலம் பொருந்தா உவமைகளால், அறச்சிந்தனைகளை
நாம் நினவுகொள்ளக் கூடாது என்பதையே வள்ளுவர் கூறுவதாகத் தெரிகிறது. இரண்டாவதாக, அறத்தை பயன் எதிர் நோக்கியோ, அல்லது
தீவினை சுடும் என்கிற அச்சத்தாலோ செய்தல் கூடாது.
அப்போது “பொன்றுங்கால் பொன்றாத் துணை” என்றது எதனால்?
அறத்தின் பயன் பின்வரும் பிறவிகளிலும் நம்மைத் தொடர்ந்து வந்து நம்மைக் காக்கும் என்பதை
வலியுறுத்தமட்டுமே
இன்றெனது குறள்:
பல்லக்கில்
செல்வார் சுமந்தார்கள் சான்றில்லை
சொல்லவறம் ஈதென்ப தற்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam