May 28th,
2012
வீழ்நாள் படாஅமை
நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும்
கல்.
(குறள் 38: அறன்வலியுறுத்தல்
அதிகாரம்)
Transiliteration:
vIzhnAL
paDAamai nandRAtRin ahgdhoruvan
vAzhnAl
vazhiyaDaikkum kal
vIzhnAL - the waning days of life
paDAamai –
waiting for (the waning days)
nandRAtRin – stead the
virtous path of life
ahgdhoruvan – that will
serve for someone
vAzhnAl - another birth on this earth with this mortal
coil
vazhiyaDaikkum –that
blocks the way (to rebirth)
kal – the rock!
The desires of five senses and the derived
dual nature of deeds, result in the strife filled cycle of life and death. The sum
total thought expressed in this verse is this: if someone can live virtuously without wasting
a day waiting for waning days of life, his gains would stand as the big rock
that blocks the way to another birth on this earth relieving us,
As written before, though vaLLuvar has
expressed a lot of very rare thoughts in such short beautiful verses, but sometimes,
it appears that he has refuted himself. When such conflicting ideas are expounded
in different chapters, at least we can try to see if the context of the chapter
is in alignment. When they appear in the same chapter, that too next to each
other, we are left wondering where his stand is and what he is trying to say
truly.
When I write this, I do with all humility,
and try to be just a little bit more inquisitive to get into the mind of
vaLLuvar.. Sadly, most of the commentators, as I said before, are seeing every
verse in silos and have tried to explain only the verse in focus, without
seeing them in connection with others. They have failed to apply what vaLLuvar
himself has vehemently advocated that everything has to be under scruitiny for
knowing the true merits.
Just in the last verse he said that we should
not take the metaphors cited in the books and scriptures of philosophical,
ethival and virtuous principles and wrongly interpret them. In this verse, he
himself has violated his saying by writing something with another metaphor to
insist on “virtuous living”! Many a poets
have written, being thankful to the beauty around them, addressing to God, “ How many reasons for happiness have you
created?” Is this world so painful that the only goal should be to seek a state
of rebirthlessness, moksha, or vIDu (வீடு) which itself is question in many
minds.
If someone lives a life filled with virtuous
ways, what’s wrong in their desire to be reborn, if that’s possible? Just a
hypothetical question - What is that big state of birthlessness that everybody
has aspired to. Is this some kind of
realestate owned by God to be allocated to worth suitors? In that case, isn’t
it self a desire?
As said in a different verse, if somebody has
lived through his life virtuously, what should he or she fear about the future
births, as the gains would be carried on to future births anyway. Why is this hung up idea of birthlessness in
many great people’s thoughts? If those great souls such as Rama, Krishna,
Bhudda and Jesus, or Vivekananda and many others that have lived an exemplary
life to be model beings, are reborn, would not his earth itself reform and
flourish and be a heaven to live?
If everybody stays the virtous path and are
not reborn, the life on this earth will shrink and be nothing. Is that what
desired by such great souls. It feels like a different version of the judgment
day seeking pagan-religio thinkers and the religious converters. Both display a
defeatist attitude in different ways.
It is one of those verses where vaLLuvar has
contradicted himself and confused us also!
“Stay
virtuous not waiting for evening of the life
It is the
rock that blocks the treacherous cycle of strife”
தமிழிலே:
வீழ்நாள் – வாழ்விறுதி
நாட்கள்
படாஅமை – வரும் வரைக்கும்
காத்திராமல்
நன்றாற்றின் – நல்லறவாழ்வினை
வாழ்ந்தவர்க்கு
அஃதொருவன் – அவ்வாழ்வு
ஒருவருக்கு
வாழ்நாள் – அவருடைய
பிறந்திறக்கும் அவத்தையான வாழ்வுக்கு
வழியடைக்கும் – மீண்டும்
வரும் வழியை அடைக்கும்
கல் – பெரும்
பாறையைப் போலாகும்
ஐம்புலன் ஆசைகளால் வரும் இருவினைப் பயன்களால், மீண்டும்
மீண்டும் பிறந்திறப்பது பெரிய அவத்தை, ஆதலால் வாழ்வின் பொழுது சாயும் வேளைவரை காத்திராமல், என்றும் அறவழி நின்றோர்க்கு, இவ்வுடம்போடு மீண்டும்
பிறக்கும் வழியை அடைக்கும் கல்லாக, அவரது அறவாழ்வே துணை நிற்கும்.
முன்னரே எழுதியதுபோல, வள்ளுவர் சொல்வது, பெரும்பாலும்
அரிய கருத்துக்களாயிருந்தாலும், சில சமயங்களில் தன்னையே மறுத்துகூட எழுதினாரோ என்று
தோன்றுகிறது. இப்படி மாறுபட்ட கருத்துக்கள் வெவ்வேறு அதிகாரங்களில் வரும்போது ஓரளவுக்கு,
அதிகாரத்தின் தன்மைக்கும், பொதுவான பொருளுக்கும் பொருந்தியாவது வருகிறதா எனப்பார்க்கலாம்.
ஒரே அதிகாரத்தில் அடுத்தடுத்து வரும் போது, என்னத்தான் சொல்ல வருகிறார் இவர் என்று
எண்ணத்தோன்றுகிறது.
இதை வள்ளுவரையே கேள்வி கேட்க முடிகிறது என்கிற தலைக்கனத்தில்
கேட்கவில்லை. உண்மையான ஆர்வத்திலேதான் கேட்கிறேன்.
சென்ற குறளில் தத்துவ விசாரணை மற்றும் அறநெறி நூல்கள்
உவமையாகக் கூறுவதையெல்லாம் அப்படியே பொருள் கொள்ளக்கூடாது என்று சொன்னார். இக்குறளில்
அவரே வலிய வந்து இதுதான் உண்மையென்பது போல ஒரு உவமையைக் கூறுகிறார். ஒரு புலவர் எழுதுகிறார், “எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய்”
என்று. இவ்வுலகம் அத்துணை கொடுமையானதா? மற்றொருவர்
எழுதினார் வாழ்க்கை வாழ்வதற்கே என்று! எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாமல், விளைவிக்காமல்
இருக்கும் வாழ்வே அறவாழ்வுதானே? அப்படி வாழ்பவர்க்கு ஏன் மறு பிறவிகூடாது. அப்படி பிறவியில்லாப்
பெருநிலைதான் என்ன?
இன்னொரு குறளில் கூறியதுபோல, அறவழியிலே நின்று மடிந்தவொருவருக்கு,
அவ்வழிப்பலன் பிற பிறவிகளில் தொடருமானால், அவர் அஞ்ச வேண்டியது என்ன? மறுபிறவியே வேண்டாம்
என்று மறுபடியும் மறுபடியும் கூறுவது எதனால்? மனித குலம் உய்வதற்காக பெரும் பிறவிகள் மீண்டும்
மீண்டும் பிறந்தால்தானே உலகினரை நல்வழிபடுத்த முடியும்… இராமனோ, கிருஷ்ணனோ, புத்தனோ,
ஏசுவோ, விவேகானந்தரோ, இன்னும் எத்துணையோ வாழ்ந்து முடிந்த நல்வழிச் செம்மல்கள், உலகில்
இருந்தால்தானே உலகில் அறவியல் வாழ்வு தழைக்கும், செழிக்கும்?
எல்லோரும் அறவழி நின்று, உலகை நீங்கி மீண்டும் பிறவாமல்
விட்டால், உலகில் பிறப்பு சுருங்கி ஒன்றுமில்லாமல் ஆகவேண்டும் என்கிற எண்ணமா? இதற்கும்,
இறுதி நீதி வழங்கும் நாளுக்காக, மதமாற்றம் செய்யும் மதங்களுக்கும் என்ன வித்தியாசம்
என்ன? இரண்டுமே தோல்வி மனப்பான்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகளே!
வள்ளுவன் தன்னிலே முரண்பட்டு, நம்மை குழப்புகிற
குறள்களில் ஒன்றிது!
இன்றெனது குறள்:
செய்யாத நாளில்லை என்றறம் ஆற்றதுவே
பொய்க்க பிறப்படைக்கும் கல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam