செப்டம்பர் 04, 2013

குறளின் குரல் - 504


4th Sep 2013

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
                           (குறள் 497: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
anjAmai allAl thuNaivENDA enjAmai
eNNi iDaththAl seyin

anjAmai allAl – with determined mind, other than not fearing obstacles or enemies
thuNaivENDA – there is no other support neeed (when and why?)
enjAmai – without anything left (i.e. doubts), completely
eNNi – with a lot of thoughtfulness
iDaththAl – figuring the turf to do
seyin – and do

Parimelazhagar, though interprets all deeds in different chapters that come under the major sub-heading of  “politics” as “engaging in war”, we can interpret a more general meaning “any and all deeds”.  With completely researched, planned and thought about every possibility, outcome, those who engage in any deed, (engaging in war with enemies according to Parimelazhagar) nothing needed other than, being fearless against all the odds, obstacles, and enemies – is the thought expressed in this verse.

Already, we have seen another verse, vaLLuvar has insisted to engage after a considered thinking (eNNith thuNiga karumam). In the earlier chapter of “Merits of Ruler”, we have seen the verse that listed fearlessness, charity, wisdom and effort as the essential four ingredients that make a ruler. Other than charity, other three are directly or indirectly referenced in this verse too.

“With fully researched, and done in the right place
 None other than fearlessness is needed in place”

தமிழிலே:
அஞ்சாமை அல்லால் - மனவுறுதியோடு, இடரும், பகையும் கண்டு அச்சங்கொளாமலிருப்பதைத் தவிர
துணைவேண்டா - வேறு உற்ற துணை எதுவும் தேவையில்லை! (எப்போது?)
எஞ்சாமை - எவ்வித ஐயமும் இல்லாது முழுதுமாக
எண்ணி - சிந்தித்து
இடத்தால் - எவ்விடத்தில் ஏது செய்யலாம் என்று அறிந்து
செயின் - வினையாற்றினால்

பரிமேலழகர் பொதுவாக அரசியல் என்னும் பகுதியில் வருவதால், செய்யும் வினையெல்லாம் பகைமேலேற்றி, பகைவரோடு போர் புரிவதைச் சொன்னாலும், செய்யும் வினைகள் யாவற்றுக்கும் இவை பொருந்தும். முழுதுமாக ஆராய்ந்து, ஐயமில்லாமல் விளவுகள், எதிர்விளைவுகளைச் சிந்தித்து வினகளாற்றுவோருக்கு, மனவுறுதியோடு வரும் இடர்கள், பகைகள், தடங்கல்கள் இவற்றைக்கண்டு அச்சங் கொள்ளாமலிருப்பதைவிட வேறு உற்ற துண எதுவும் வேண்டாம். என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.

முன்னரே “எண்ணித்துணிக கருமம்” என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். இறைமாட்சி அதிகாரத்தில் ஆளுவோருக்கு வேண்டியனவற்றைப் பட்டியலிடும்போது, “அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு” என்பார். இதில் ஈகை தவிர, மற்ற மூன்றும் இக்குறளில் வெளிப்படையாகவும், உள்ளுரையாகவும் சொல்லப்படுகின்றன.

இன்றெனது குறள்:

முழுதுமாய்ந்து செய்யும் இடந்தேர்ந்து செய்தால்
விழுத்துணை யாகுமஞ்சா மை

muzhudhumAindhu seyyum idanthErndhu seidhAl
vizhuththuNai yAgumanjA mai

செப்டம்பர் 03, 2013

குறளின் குரல் - 503


3rd Sep 2013

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
                           (குறள் 496: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
kaDalODA kaLval neDunthEr kaDalODum
nAvAyum ODA nilaththu

kaDalODA – won’t go on sea
kaLval – strong wheeled
neDunthEr – tall chariot
kaDalODum – That which run on deep sea waters
nAvAyum – the big ship
ODA nilaththu – will not run on ground.

To win against enemies, one must know where the enemies will operate. Even if it is a big ship, but for the deep sea waters, will not travel on the ground; similarly, even it is capable of carrying mighty warriors, a strong wheeled big chariot cannot run on deep sea waters.

The snake around the neck of Lord Shiva is always safe. Even Garuda (an enemy if snake, mythical bird like eagle, Vishnu’s vehicle) cannot fight that snake.  Likewise for everyone, safety is only in suitable grounds for operation. Victory or Loss is immaterial. This verse just gives metaphorical references of ship and chariot to drive home the point.

“A ship does not run even on the roads paved
 On deep sea a ship, can not be an inch moved”

தமிழிலே:
கடலோடா - கடல்மேலே செல்லாது
கால்வல்  - வலிய சக்கரத்தை உடைய
நெடுந்தேர் - உயர்ந்திருக்கும் தேரானது
கடலோடும் - கடல் மேலே செல்லுகிற
நாவாயும் - கப்பலும்
ஓடா நிலத்து - நிலத்தின் மேலே ஓடாது

யார் எங்கு செயல்பாடுவார்கள் என்று இடம் அறிந்து செயலாற்றுதலே பகைவர்களை வெல்லக்கூடிய வழியாகும். பெருங்கப்பலேயானாலும் அது ஆழ்கடலன்றி நிலத்தின்மேல் பயணிக்காது. அதேபோல எவ்வளவுதான் சிறந்த வீரர்களைசு சுமந்து செல்லுவதானாலும் பெரியதேர் கடல் மேலே செல்லாது.

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு எப்போதுமே பாதுகாப்பாகத்தான் இருக்கும். கருடனும் கூட அதோடு சண்டைக்குப் போகமுடியாது. யாருமே அவருக்கு ஏற்ற களத்தில் இருந்தால், செயலாற்றினால்தான் பாதுகாப்பு! வெற்றி தோல்வியெல்லாம் பிறகுதான். எவ்விடத்தில் எச்செயலைச் செய்தால் அது கூடாதோ அவ்விடத்தில் அதைச் செய்யக்கூடாது என்பதைச் சொல்ல உவமையை மட்டும் சொல்லி அமைந்த குறள்.

இன்றெனது குறள்:

ஓடாதேர் ஆழியிலும் கப்பல் நிலத்திலும்
கூடா விடச்செயல் போல்

(ஓடா, தேர் ஆழியிலும் கப்பல் நிலத்திலும், கூடா இடச் செயல்போல்)

OdathEr Aziyilum kappal nilaththilum
kUDa viDachchyeal pOl

செப்டம்பர் 02, 2013

குறளின் குரல் - 502


2nd Sep 2013

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
                           (குறள் 495: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
neDumpunaluL vellum mudhalai aDumpunalin
nIngin adhanaip piRa

neDumpunaluL – in deep waters
vellum mudhalai – a crocodile/ allegator will easily win over the enemies
aDum – will win and kill
punalin nIngin – if they leave the waters
adhanaip piRa – other life forms will,(win) the crocodile

It is generally understood, that knowing the playing ground will assure victory in any endeavor. This verse echoes this thought; but the verse was probably written without understanding the true nature of crocodiles (allegators). It is true that they have enormous amount of strength in waters and the prey has liitle chance to escape. But it is also true that they can chase their prey upto 10 miles per hour and they have their strength outside of the waters too. So it is wrong to underestimate crocodiles outside the waters too.

In Sangam literature Aingurunooru, the word, “mudalai” is used in to denote cannibalistic tendency by the line “ than pArppu thinnum anbil mudhalaiyoDu”. The word “pArppu” means the young ones of the same kind. Morlet’s crocodile, known as Mexican crocodiels also, are cannibalistic in nature and eat their own young ones.

“Strong and mighty are allegators in deep waters
 Leaving there, they will be in worrying quarters”

தமிழிலே:
நெடும்புனலுள் - ஆழமான நீர் நிலையினுள்
வெல்லும் முதலை  -- தன் பகையை மிகவும் எளிதாக வெல்லும் முதலை
அடும் - வென்று கொல்லும்
புனலின் நீங்கின் - நீர் நிலையை விட்டு நீங்கும் போது
அதனைப் பிற - அம்முதலையை மற்றி பிற உயிரினங்கள்

களமறிந்து ஆடினால்தான் வெற்றி என்பதற்கான மற்றொரு குறள். ஆனால் முதலையின் வலிமையைப் பற்றி வெகுவாக தெரியாமல் எழுதப்பட்ட குறள். முதலைக்கு நீரில் வலிமை அதிகம்தான்,  அதனுடைய இரையாக அகப்பட்ட எவரும் உயிரோடு தப்புவதும் எளிதில்லைதான். ஆனால் நீருக்கு வெளியிலேயும் அது ஏறக்குறைய மணிக்கு பத்து மைல் அளவுக்குத் துரத்தக்கூடியது. நீர் நிலைக்கு வெளியிலும் அதற்கு வலிமை உண்டு; ஆனால் அதனுடைய இரைக்கும், எதிரிகளுக்கும் தப்பித்துகொள்ளும் வாய்ப்புகளும், வழிகளும் பலவுண்டு.

இக்குறள் முதற்கருத்தை உள்ளங்கை நெல்லியாகச் சொல்லுகிறது. நீர் நிலையைவிட்டு நீங்கினால், முதலையை மற்றவை வெல்லும், கொல்லும் என்பது, ஒரு அநுமானத்தில் எழுதப்பட்டது.

உபரித்தகவல்: முதலைகளைப் அன்பிலாத ஒரு பிராணியாகிய சங்க இலக்கியமான ஐங்குறுநூறு தனது 41வது பாடலில் சொல்லுகிறது இவ்வாறு: தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு”. “பார்ப்பு” என்பது ஓர் இனத்தின் குட்டிகளைக் குறிக்கும். இது உண்மையா என்று ஆராயப் புகுந்தால், மெக்ஸிகோ நாட்டு முதலைவகையான “மோர்லெட்” என்பவை அப்படிப்பட்டவை. தம்மினத்தின் குட்டிகளைத் தாமே உண்ணக்கூடியவை.

இன்றெனது குறள்:

நீர்தான் முதலைக்கு வெல்லும் களம்நீங்கின்
நீர்க்கு மதற்கு வலி

nIrthAn mudhalaikku vellum kaLamnIngin
nIrkku madharku vali

செப்டம்பர் 01, 2013

குறளின் குரல் - 501


1st Sep 2013

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
                           (குறள் 494: இடனறிதல் அதிகாரம்)

Transliteration:
eNNiyAr eNNam izhappar iDanaRindhu
thunniyAr thunnich cheyin

eNNiyAr – One who wants to win over their enemies
eNNam izhappar – will relinquish that thought
iDanaRindhu – when they know the appropriate place to perform their deeds
thunniyAr – those who think and do their deeds
thunnich cheyin – in a fitting way.

This verse expresses the content of previous verse in a different way. Foes that want to win waging a war against their adversaries will relinquish such thoughts and not venture at all when they see their opponents do their deeds knowing right and vantageous place to perform. Different words, but the same thought as before.

“Enemies will quit the thought of waging war, as a pursuit in vain
 When the vantageous place of the opponents favor as their gain”

தமிழிலே:
எண்ணியார் - ஒருவரை வெல்ல வேண்டும் என்று நினைக்கின்ற பகைவர்
எண்ணம் இழப்பர்  - அவ்வெண்ணத்தைக் கைவிடுவர்
இடனறிந்து - வினையாற்றும் களம் அறிந்து
துன்னியார் - வினைகளை எண்ணி ஆற்றுகின்றவர்
துன்னிச் செயின் - அவ்வாறு பொருந்தச் செய்தால்

மீண்டும் ஒரு அரைத்தமாவை அரைக்கிற குறள். இடமறிந்து வினைகளை பொருந்த ஆற்றுவோரைக், கண்டால், அவரை வெல்லக் கருதுகின்ற பகைவர்கள் அவ்வெண்ணத்தை கைவிடுவர், என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. சென்ற குறளினை வேறுவிதமாக சொல்லுகிற முயற்சியிது.

இன்றெனது குறள்:

இடமறிந்து செய்வாரைக் கண்டால் பகைவர்
உடனிழப்பர் வெல்லுமெண் ணம்

iDamaRindhu seivAraik kaNDAl pagaivar
udaNizhappar vellumeN Nam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...