2nd Sep 2013
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
(குறள் 495: இடனறிதல் அதிகாரம்)
Transliteration:
neDumpunaluL
vellum mudhalai aDumpunalin
nIngin
adhanaip piRa
neDumpunaluL – in deep waters
vellum
mudhalai – a crocodile/ allegator will easily win over the
enemies
aDum – will win and kill
punalin
nIngin – if they leave the waters
adhanaip
piRa – other life forms will,(win) the crocodile
It is generally understood, that knowing the playing
ground will assure victory in any endeavor. This verse echoes this thought; but
the verse was probably written without understanding the true nature of
crocodiles (allegators). It is true that they have enormous amount of strength
in waters and the prey has liitle chance to escape. But it is also true that
they can chase their prey upto 10 miles per hour and they have their strength
outside of the waters too. So it is wrong to underestimate crocodiles outside
the waters too.
In Sangam literature Aingurunooru, the word, “mudalai” is used in to denote
cannibalistic tendency by the line “ than
pArppu thinnum anbil mudhalaiyoDu”. The word “pArppu” means the young ones of the same kind. Morlet’s crocodile,
known as Mexican crocodiels also, are cannibalistic in nature and eat their own
young ones.
“Strong and mighty are allegators in deep waters
Leaving there, they will be in worrying
quarters”
தமிழிலே:
நெடும்புனலுள் - ஆழமான நீர் நிலையினுள்
வெல்லும் முதலை -- தன் பகையை மிகவும் எளிதாக வெல்லும்
முதலை
அடும் - வென்று கொல்லும்
புனலின் நீங்கின் - நீர்
நிலையை விட்டு நீங்கும் போது
அதனைப்
பிற - அம்முதலையை மற்றி பிற உயிரினங்கள்
களமறிந்து ஆடினால்தான் வெற்றி என்பதற்கான மற்றொரு குறள்.
ஆனால் முதலையின் வலிமையைப் பற்றி வெகுவாக தெரியாமல் எழுதப்பட்ட குறள். முதலைக்கு நீரில்
வலிமை அதிகம்தான், அதனுடைய இரையாக அகப்பட்ட
எவரும் உயிரோடு தப்புவதும் எளிதில்லைதான். ஆனால் நீருக்கு வெளியிலேயும் அது ஏறக்குறைய
மணிக்கு பத்து மைல் அளவுக்குத் துரத்தக்கூடியது. நீர் நிலைக்கு வெளியிலும் அதற்கு வலிமை
உண்டு; ஆனால் அதனுடைய இரைக்கும், எதிரிகளுக்கும் தப்பித்துகொள்ளும் வாய்ப்புகளும்,
வழிகளும் பலவுண்டு.
இக்குறள் முதற்கருத்தை உள்ளங்கை நெல்லியாகச் சொல்லுகிறது.
நீர் நிலையைவிட்டு நீங்கினால், முதலையை மற்றவை வெல்லும், கொல்லும் என்பது, ஒரு அநுமானத்தில்
எழுதப்பட்டது.
உபரித்தகவல்: முதலைகளைப் அன்பிலாத ஒரு பிராணியாகிய சங்க இலக்கியமான ஐங்குறுநூறு தனது 41வது
பாடலில் சொல்லுகிறது இவ்வாறு: “தன்பார்ப்புத் தின்னும் அன்பில் முதலையொடு”. “பார்ப்பு” என்பது ஓர் இனத்தின்
குட்டிகளைக் குறிக்கும். இது உண்மையா என்று ஆராயப் புகுந்தால், மெக்ஸிகோ நாட்டு முதலைவகையான
“மோர்லெட்” என்பவை அப்படிப்பட்டவை. தம்மினத்தின்
குட்டிகளைத் தாமே உண்ணக்கூடியவை.
இன்றெனது குறள்:
நீர்தான் முதலைக்கு வெல்லும் களம்நீங்கின்
நீர்க்கு மதற்கு வலி
nIrthAn
mudhalaikku vellum kaLamnIngin
nIrkku
madharku vali
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam