அக்டோபர் 06, 2012

குறளின் குரல் - 177


6th October, 2012

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
                  (குறள் 168:அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
azhukkaRu ena oru pAvi thirucheRRuth
thIyuzhi uyththu viDum

azhukkaRu ena –that is which called jealousy
oru pAvi  - a great sin
thirucheRRuth – will destroy wealth
thIyuzhi  - hell
uyththu viDum – will send to (hell)

Like in many other chapters throughout ThirukkuraL, vaLLuvar talks extensively about the repercussions of being jealous, how demeaning it is, and points out to the losses and the punishment. He describes the envy as a big sinner and how that sinner will not only destroy wealth in this life and will only take the envious to hell after our life.

The word “thirucheRRu” has been interpreted as removing the goddess of wealth Lakshmi from our life, by some commentators. The word “seRRu” means eradicate, or kill.  Laksmi is killed or eradicated is not an auspicious thing to say. To avoid this, some commentators have said, removing Lakshmi, which does not fit the way the verse goes. A Goddess can not be removed by a deamonous sin which gives a wrong connotation of evil triumphs over good. It makes sense that the same deamonous sin will wipe out the wealth or kill the wealth of an envious person as it is considered a sin too.

Similarly the word “thIyuzhi” is also not “devious or sinful path”. Foe every sin, only a repercussion or a punishment is a valid thing to say in an aphorism to keep people away from the sin. vaLLuvar’s intent is not to point out that a bad sin will take a person to bad ways further here, but to underline what will be the resultant punishment for them. “thIyuzhi” is  “being in fire  like punishment”.  As he has talked about other beliefs of his times, he means the “burning in the eternal fire of hell” here.  By spelling out the punishment, even if other punishments are not penetrating, the punishment of “hell” has always been able to make impact in most people in all cultures.

“The sinner – Jealousy will not only destroy the wealth
  But will punish the envious in the fire of hell after death”

தமிழிலே:
அழுக்காறு என – பொறாமை எனப்படும்
ஒரு பாவி – ஒரு பெரும் பாவியானவன்
திருச்செற்றுத் – செல்வமழித்து
தீயுழி – நரகத்தின் கண்
உய்த்து விடும். – கொண்டு சேர்க்கும்

பல அதிகாரங்களிலும் காணும் முறையிலே ஒரு தீயொழுகலினால் வருந்தீமை, அக்குணம் கொண்டோர்க்கு வரும் இழிமை, துன்பம், அக்குணத்தினால் அவரைச் சார்ந்தவருக்கு வருந்துன்பம் போன்றவற்றைக்கூறி, அவருக்கே வரக்கூடிய இம்மை மறுமையைச் சார்ந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டி சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர். பொறாமை என்கிற குணக்கேட்டை ஒரு பாவத்தின் உருவாகச் சொல்லி, அந்த உருவம் நமக்கு இம்மையில் செல்வத்தை அழித்து (திருச் செற்று), இறந்தபின் நரகத்தில் (தீயுழி) தள்ளிவிடும்.

திருச் செற்று என்பதை இலக்குமியை விலக்கி என்பர் சில உரையாசிரியர்கள். திருவை செல்வங்களின் கடவுளாகக் கொண்டு, அதனாலே “செற்று” என்பதற்கு “விலக்கி” என்று சொல்வது தவறானது. செற்றல் என்பதற்கு கொல்லல், அழித்தல் என்ற பொருளே சரி, இக்குறளை பொருத்தவரை. இலக்குமியைக் கொன்று,  அல்லதுஅழித்து என்பது மங்கலமில்லாத சொல்வழக்காகையால், செல்வத்தை அழித்து என்றலே சரி.

தீயுழி என்பதையும் தீய வழி என்றல் சரியான பொருள் அல்ல. குற்றத்திற்கு உண்டாவது தண்டனையே தவிர, மேலும் தீயவழி சேர்ப்பது அல்லது. தீய வழி செல்பவர்களு மற்ற குணக்கேடும் சேர்ந்துகொண்டால் மேலும் தீய வழிகளுக்குச் செல்வார்கள் என்பது உண்மையானாலும், அதை உறுதிப்படுத்துகிறவிதமாக வள்ளுவர் எழுதவில்லை. தீயுழி என்பது நெருப்பனைய கொடுமை அல்லது மற்ற நம்பிக்கைகளைப் போல சுடுவதைப் போலவாம் நரகத்தில் கொண்டு சேர்ப்பது என்ற பொருளில்தான் செய்துள்ளார். பரிமேலழகர் உரையும் இக்கருத்தை ஒட்டித்தான் இருக்கிறது.

இன்றெனது குறள்:
செல்வங் கெடுத்து நரகம் செலுத்துமே
பொல்லாத பாவிபொறா மை
Selvang keDuththu naragam seluththumE
pollAdha pAvipoRA mai

அக்டோபர் 05, 2012

குறளின் குரல் - 176


5th October, 2012

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
                  (குறள் 167: அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
Avviththu azhukkARu uDaiyAnaich seyyavaL
Thavvaiyaik kATTi viDum

Avviththu – Not able to tolerate, feeling unhappy in heart (about the jealous people)
azhukkARu  - jealousy
uDaiyAnaich  -  those who have (jealousy)
seyyavaL – the goddess of wealth, lakshmi
Thavvaiyaik – her older sister (who is goddess of poverty)
kATTi viDum – will show her.

Goddess of wealth will not tolerate the people that are jealous of others and she will make them poor by leaving them and having her elder sister (MUdEvi) stay with them.  As much as SridEvi symbolizes wealth, MUdEvi symbolizes abject poverty. Some commentators have interpreted the “avviththu” for jealous people to mean that they can not bear others being prosperous. Either way, the totality of what is said holds good. Envious ones will suffer poverty.

As we have seen it earlier, regardless of vaLLuvar’s religious beliefs, he has evidently handled some of the popular beliefs of his times in his verses.

The word “thavvai” has not been used by anyone other than IlangO adigaL and vaLLuvar in Sangam literature. Searching through the ocean of information, the internet, the word MUdEvi means one who was born out of churing milky ocean, before Lakshmi. She is referred to as “mUththOL” “mAmugaDi”, “kAkkaik koDiyOL”, “pazhaiyOL” in sangam literature. Puranic texts call her by the Sanskrit name “JeshtA” meaning the same. A researcher NaRAyaNamUrthi says that there are statues of mUDevi, her son kULigan, daughter mAndhi in the outer sanctum of a Shiva temple in a town ‘mAnUR” near Pazhani.  He further asserts that because she was tainted with “laziness” and “poverty” in AuvayyAr and vaLLuvar’s work, she lost the worship of people.  Until 8th century she was worshipped as mother goddess of Tamils. IlangO has used the word “thavvai” to mean elder sister.

Jain monks have meant “avvai” to mean female ascetics. Since ascetics beg for alms with a begging bowl, vaLLuvar could have meant that goddess of wealth would make the jealous people beg like those female ascetics.  Since jealousy is common for both genders, this may not be a fitting comparison too. A remote possibility is that vaLLuvar did not give equal status to females in his verses and it could be reflection of that stance too.

Another researcher pon.SaravaNan places a different thought before us. He replaces the word “thavvai” with “kavvai” (he thinks thavvai is  a mistake) meaning a loud cacophonous fighting sound made by the wife of a jealous person.  His interpretation is that, “A jealous person will be bitterly fought by his own wife with a loud mouth”. While he has attempted to portray and establish a non-religious leaning for vaLLuvar, the most common commentary seems to fit the general sense of this chapter as well as how vaLLuvar approaches every topic.

“Goddess of wealth will leave the jealous, annoyed
  Let elder sister be with them to make wealth void”

தமிழிலே:
அவ்வித்து – பொறுக்காமல், மனங்கோணி
அழுக்காறு – பொறமை
உடையானைச் - கொண்டோரை
செய்யவள் - திருமகள்
தவ்வையைக் – அக்காளான மூதேவியைக்
காட்டி விடும் – அவர்களுக்குக் காட்டிவிடும்

திருமகள் பொறாமை கொண்டவர்களைக் கண்டு பொறுக்கமாட்டாது, அவர்களை தன்னுடைய தமக்கையான மூதேவி சேரும்படி செய்து தான் அவரைவிட்டு நீங்கிவிடுவாள். இதையேஅடுத்தவர் வாழ்வதைப் பொறாமல், பொறாமை கொண்டோர் என்று கொள்வோரும் உள்ளனர். இரண்டு விதமாகவும் பொருள் சரிதான். பொறாமைக் கொண்டோர் வறுமையிலே வாடுவது திண்ணம் என்பதை இக்குறளால் சொல்கிறார் வள்ளுவர்.

முன்னரே கண்டபடி, வள்ளுவரின் மதநம்பிக்கைகள் எவையாயிருந்தாலும், அவர் மக்களிடையே இருந்துவந்த சில நம்பிக்கைகளை தன்னுடைய குறள்களில் எடுத்துக் கையாண்டுள்ளார் என்பது வெளிச்சம். செல்வத்திருமகள் இலக்குமி, அவளுடைய அக்காள் மூதேவி என்னும் தரித்திர நாராயணி என்பது காலம் காலமாக இருந்துவருகிற நம்பிக்கை என்பது இக்குறளினால் உறுதி.

தவ்வை என்ற சொல்லை இளங்கோ, வள்ளுவரைத்தவிர வேறு யாரும் சொல்லாடல் செய்ததாகத் தெரியவில்லை.  தகவலாழியாம் இணயத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள். மூதேவி என்பவள் ஸ்ரீதேவிக்கு முன் பார்க்கடலில் தோன்றிய மூத்தோள், முன்னவரை குறிக்கும் “ஜேஷ்டா” என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பிடப்படுபவள். சங்க இலக்கியங்களில் மாமுகடி, காக்கைக் கொடியோள், பழையோள் என்று பதினான்கு விதப்பெயர்கள் உண்டென்று ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி என்பவர் கூறுகிறார். அவர் பழனி அருகிலுள்ள மானூரில் உள்ள சிவன்கோவில் வெளிச்சுற்றில் இவளுக்கும், இவளது மகன் குளிகன், மகள் மாந்தி இவர்களுக்குச் சிலைகள் உண்டு என்கிறார்.  இதில் காக்கை கொடி இடதுபுறம் திரும்பி இருத்தல், கிரீட மகுடம், மூதேவி மட்டும் பூணூல் அணியாதிருத்தல் ஆகியவை சிறப்பம்சம். மூவரும் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளனர். திருவள்ளுவர், அவ்வையார் பாடல்களில், சோம்பலின் அம்சமாக கூறப்பட்ட சூழலில் மூதேவி வழிபாடு குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இளங்கோவடிகளும் தவ்வையை, தமக்கை, மூத்தவள் என்ற பொருளிலேயே கையாண்டிருக்கிறார்.

சமணர்கள் அவ்வை என்ற சொல்லைப் பெண்துறவிகளைக் குறிக்கச் சொல்லுவார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில் ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார். துறவிகள் கைகளில் ஓடேந்தி பிச்சை எடுப்பவர்கள் என்பதனால் பிச்சையெடுக்கச் செய்திடுவாள் என்று கொள்ளலாம். ஆனால் பொறாமை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானதாகையால், அதை பிச்சையெடுக்கும் பெண்துறவிகளுக்கு ஒப்பாக கூறியிருக்க முடியாது.

இணையத்தில் பொன். சரவணன் என்கிற தமிழாராய்ச்சியாளர் ஒரு வேறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறார். தவ்வை என்ற சொல்லுக்குப் பதிலாக கவ்வை என்ற சொல்லை இட்டு, “பேராசையால் காழ்ப்புணர்ச்சி உடையவனை அவனது இல்லாளின் ஆரவார ஒலியே காட்டிக் கொடுத்து விடும்” என்கிறார். செய்யவள் என்பதற்கு மனையாள் என்றம் கவ்வை என்பதற்கு ஆரவார ஒலி (சண்டையில் மிகுந்த குரல்) என்றும் பொருள் கொண்டு விளக்குகிறார். 

வள்ளுவரின் சமயச் சார்பின்மையை நிறுவ இவர் செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே எனினும், பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியகள் செய்த உரை பொருத்தமாகத்தான் உள்ளது.  அதை ஒட்டியே என்னுடைய இன்றைய மறு குறளும்.

இன்றெனது குறள்:
அவ்வியரை அவ்வித்து மால்மனையாள் அக்காளை
அவ்வியர்க்குச் சேர்த்து விடும்

அக்டோபர் 04, 2012

குறளின் குரல் - 175


4th October, 2012

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
                  (குறள் 166: அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
koDuppadhu azhukkaRuppAn suRRam uDuppadhUum
uNbadhUum inRik keDum

koDuppadhu – seeing somebody’s charity
azhukkaRuppAn –  a person who is jealous of that charity
suRRam – the close relatives of such envious person
uDuppadhUum – proper clothes to wear
uNbadhUum – or food to eat
inRik - will not have
keDum – and perish ( will become so poor is implied)

When someone is charitable towards others, a person who gets jealous of that act makes sure that his family and relatives all starve and struggle to even have decent clothes to keep their honor. This means that the envy will become the reason for the abject poverty of the person’s close relatives.

This verse is to point out the ill effects of having ill thoughts such as envy and to turn away a person from such thoughts. Even a person who is envious has a family, friends and relatives, whose wellbeing should definitely be the person’s concern. At least for that concern, the person should stray from such ill thoughts and acts - the main idea emphasized by this verse!

This verse also points to a socio- psychological stance.  A society treats the associates of a person based on its evaluation of the persons conduct and manners. It is inferential that people that are associated with a person of bad traits are kept at a distance by the society.

In Kamba Ramayana, sage Viswamithira tells the story of Mahabali to Rama and Lakshmana narrating, how Mahabali gets perturbed at the advice of his guru Sukracharya that Mahabali should not give what the little vAmanA asks for, during the sacrifice. Mahabali tells his guru: “Does it fit your stature as a guru to prevent me form being charitable to somebody who has come to me for alms?  Don’t you know that your own relatives will be devoid of food and clothese if you do this?” (“eDuththu oruvarukkyu  oruvar Ivadhanin munnam thaDuppadhu ninakku azakidhO? Thagavu il veLLi?  koDuppadhu vilakku koDiyOi unadhu suRRam uDuppadhuvum uNbadhuvum inRi viDukinDRAi”)

Kamaban has used many of kuraL aphorisms through out his magnum opus with similar words and the appropriate contexts.

“Preventing the charity of a person being jealous,
  A person’s kin will perish with out food and dress”

தமிழிலே:
கொடுப்பது – பிறருக்கு ஈதலை செய்பவனைக் கண்டு
அழுக்கறுப்பான் – பொறாமை கொள்பவனது
சுற்றம் – நெருங்கிய சுற்றம், கேளிர்
உடுப்பதூஉம் – மானம் மறைக்கும் துணிமணிகளும்
உண்பதூஉம் – பசியாற்ற உணவும்
இன்றிக் – இல்லாது வறுமையிலே
கெடும் - அழியும்

பிறருக்கு தானம் (ஈதல்) செய்யும் ஒருவரைக்கண்டு பொறமை (அவ்வியம்) கொள்ளுபருக்கு அவருக்கு மட்டுமல்லாது, அவருடைய சுற்றமும் (கேளிர்) அழிந்துபோகக்கூடிய அளவுக்கு வறுமை வந்து சேரும், அவர் உண்ண உணவும், மானத்தை மறைக்கும் உடையும் கூட இல்லாத வறுமையில் உழலுவர்.

ஒரு தீய குணத்தின் உச்ச அளவு தீங்கினைச் சுட்டிக்காட்டி நல்வழி ஆற்றுபடுத்தவே வள்ளுவர் இப்படிக்கூறுவதாகக் கொள்ளவேண்டும். பொறாமை என்னும் தீக்குணம் கொண்டவருக்கும் தம்முடைய மனைவி, மக்கள், சுற்றம் இவர்களின் நலனில் அக்கறை இருக்குமே. அந்த அக்கரையின் மேலிட்டாவது அவர்கள் அத்தீக்குணமொழுகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கருத்து.

இது ஒரு சமூக உளவியல் சேர்ந்த ஒரு நிலைப்பாட்டையும் குறிக்கிறது. சமூகம் ஒருவரின் குணநலன்களைச் சார்ந்தே ஒருவரின் சுற்றத்தை, அளவிடும், மதிப்பிடும்; ஆகையால், தீய குணம் கொண்ட ஒருவரின் சுற்றத்தையும் மனதளவிலே தள்ளிவைத்தே பார்க்கும்.

கம்ப இராமாயணத்தில் வேள்விப்படலத்தில், இராமனுக்கு மகாபலியின் கதையைச் சொல்லும் விசுவாமித்திரர், மகாபலி தன்னுடைய குலத்துக்கு ஆசிரியனாம் சுக்கிராச்சாரியாரைப்பார்த்து இவ்வாறு கூறுகிறார்.
“எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!”

பெருந்தன்மை இல்லாத   சுக்கிரனே, நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர் ஒருவர் பொருளை  எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது  உனக்கு அழகாகுமோ? ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச்   சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல் விடுகின்றாய் என்பதை அறிவாயாக என்கிறான் மகாபலி. வள்ளுவனின் குறள் கருத்துக்களை குறள் சொல்லும் சொற்களிலேயே கம்பன் வெகு பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.

இன்றெனது குறள்:
ஈதலுக் கவ்வியன் கேளிர் கெடுவரே
நோதலில், ஊணுடை அற்று

Idhaluk kavviyan kELir keDuvarE
nOdhalil UNuDai aRRu

அக்டோபர் 03, 2012

குறளின் குரல் - 174


3rd October, 2012

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
                  ( குறள் 165:அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
azhukkARu uDaiyArkk(u) adhusAlum onnAr
vazhukkAyum kEDIn badhu

azhukkARu – The envious mentality
uDaiyArkk(u) – those who have such mentality
adhusAlum – that alone will suffice (to destroy them)
onnAr – their enemies
vazhukkAyum  - even if there is none
kED(u) –  harm to self
Inbadhu – it (the envious mentality) will bring

Ones own ill deeds will hit him back. ThirumUlar, one of the 18 siddhaas, in his work “Thirumandhiram” says:”Avviyam pEsi aRankeDa nillanmin” (Don’t speak words of jealous and be non virtuous). He likens the envious words spoken as slipping from virtue. Avviyam is another word for envy in Tamizh. Auvayyar, the saint poetess in her simple aphorism advices not to speak out of jealousy.

The envy a person has for others for their prosperity will destroy him as his enemy, and he does not need other enemies. Envy instigates people to tread a non virtuous path which will only come a full circle to be an agent of self-destruction. In this verse, vaLLuvar underlines the “Envy” is the first and foremost enemy of anyone.

“None needed as an enemy for jealous
  As their jealousy it self is their nemesis”

தமிழிலே:
அழுக்காறு – பொறாமை என்னும் பொல்லாக்குணம்
உடையார்க்கு - கொண்டவர்களுக்கு
அதுசாலும் – அது ஒன்றே போதும் (அவர்களை அழிக்க)
ஒன்னார் - பகைவர்கள்
வழுக்காயும் – இல்லாது ஒழிந்தும்
கேடு - கெடுதியினை
ஈன்பது – கொடுத்துவிடும் அது.

“அவ்வியம் பேசேல்” என்பது ஒளவையின் வாக்கு. “அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்” என்பார் திருமூலர் திருமந்திரத்தில். கம்பர் “அவ்வியம் நீத்து உயர்ந்தமனது அருந்தவனைக் கொணர்ந்து” என்று கலைக்கோட்டு முனிவரைப் (ரிஷியச்ருங்கர்) பற்றி திரு அவதாரப் படலத்திலே கூறுவான்.  அவ்வியம் என்ற சொல் குறிப்பது பொறாமையைத்தான்.

“தன்வினைத் தன்னைச் சுடும்” என்ற சொல்வழக்குகேற்ப, பிறர்மேல் ஒருவர் கொள்ளும் பொறாமையானது, அல்லது அவரது பொறாமை என்னும் பொல்லாக் குணம், அவருக்கு வேறு பகையே தேவையில்லை என்பதுபோல அவருக்கு அதுவே பகையாயிருந்து மிக்கக் கெடுதலைச் செய்துவிடும்.

இன்றெனது குறள்:
பகைவேறு வேண்டாவே அவ்வியத் தார்க்கு
மிகையாம் அதுவே பகை

pagaivERu vENdAvE avviyaththArkku
migaiyAm adhuvE pagai


அக்டோபர் 02, 2012

குறளின் குரல் - 173


2nd October, 2012

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
                  (குறள் 164: அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
azhukkARRin allavai seyyAr izhukkARRin
Edham paduppAkku aRindhu

azhukkARRin  - Being jealous
allavai – deeds that are not virtuous
seyyAr – won’t do (learned and knowledgeable)
izhukkARRin –  by indulging in self to be envious
Edham – the offense committed
paduppAkku – and the pain and bad repercussions of it
aRindhu –knowing and understanding that will befall on self .

In the chapter on “Right conduct” (Discipline), sixth verse goes very similar to this verse, in fact, the second line being exactly the same - “ozhukkaththin olgAr uravOr – izhukkaththin Edham paDuppAkkaRindhu”. Altering the verse slightly to apply in the context of “not being envious”, vaLLuvar has emphasized a specific facet of “right conduct” through this verse.

ParimElazhagar, in his commentary, interpretes the word “uravOr” as those who are, “strong willed”, which indicates that for right conduct, will power is an important ingredient. MaNakkuDavar, another commentator interprets the same word as “learned”, which also makes sense. After all, “strong will” and “being learned” are the two sides of the same coin. One can not be without the other for the currency to hold. Being devoid of jealous is a discipline also. What was said as the general discipline in that chapter has been said in the context of a specific discipline of “not being envious”, the only difference between these two verses.

vaLLuvar seems to have utilized the re-use methodology of today’s programming world – not only in this verse, but in many verses through out his work, which we will see in due course.

The verse says: “Realizing that the offense of being jealous of others is going to bring back pain to self, learned will not indulge in jealousy”

Since vaLLuvar wrote almost the same verse for two thoughts which are only narrowly different, I got a little over zealous to write two verses to reflect the same thought.

“Knowing the pains and bad repercussions of being envious -
 An offense, the learned will not engage in deeds not virtuous”

தமிழிலே:
அழுக்காற்றின் – பொறாமையின் காரணமாக
அல்லவை - அறமல்லாதவற்றைச்
செய்யார் – செய்யமாட்டார்கள் (கற்றறிந்த அறிவுடையோர்)
இழுக்காற்றின் – அத்தகைய இழிய செயலை செய்வதனால்
ஏதம் – ஏற்படுகின்ற குற்றத்தின்
படுபாக்கு – வருகின்ற துன்பம்
அறிந்து - தமக்கேயுறும் என்பதை அறிவதனால்

ஒழுக்கமுடமை அதிகாரத்தின்ஆறாவது குறளில் “ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் – இழுக்கத்தின் ஏதம் படுப்பாக் கறிந்து” என்ற கருத்தையே சிறிது மாற்றி பொறாமை கொள்ளாதிருத்தலினை வலியுறுத்த சொல்லியிருக்கிறார் வள்ளுவர்.  இரண்டாவது வரி முற்றிலுமாக அக்குறளின் வரியே!

உரவோர் என்பதற்கு பரிமேலழகர் மனவலிமை கொண்டவர் என்று பொருள் சொல்லியிருப்பது ஒழுக்கத்துக்கு மனத் திண்மைத் தேவை என்பதை அடிக்கோடிடுகிறது. மணக்குடவர் உரையில் உரவோர் என்பதற்கு அறிவுடையவர் என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது. மனவலிமையும் அறிவுடமையும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்தான். பொறாமையின்றி இருப்பதும் ஒரு ஒழுக்கம்தான்! அக்குறளில் பொதுக்கருத்தாக “ஒழுக்கதினின்று” என்று சொல்லப்பட்டதை, இங்கு குறிப்பிட்ட “ஒழுக்கந்தவறிய செயலை, அதாவது பொறாமை உறுதலை” என்று சொல்லியிருப்பதுதான் வேற்றுமை.

மறுபயனாக்க வழிமுறையினை வள்ளுவரே செய்திருக்கிறார் என்று இக்குறளில் மட்டுமல்ல, மேலும் பல குறள்களின் வழியாகவும் பார்க்கலாம்.

கற்றறிந்தவர்கள், பொறாமையினால் விளையும் அறக்கேடு என்னும் குற்றத்தினால் தமக்கே துன்பம் சேரும் என்பதை உணர்ந்து, அதன் காரணமாக அறமற்ற செயல்களைச் செய்யமாட்டார் என்பது இக்குறளின் கருத்து.

ஒன்றே போல் இரு குணநலன்களை எழுதியதால், ஒரு பொருளுக்கு, இரண்டு குறள்கள் எழுதலாமே என்று தோன்றியதால், இரண்டு குறள்கள் இன்றும்.

இன்றெனது குறள்(கள்):
அறனல்ல செய்யார் அழுக்காற்றின் தீதை
புறந்தள்ளக் கற்றறிந் தார்
aRanalla seyyAr azhukkARRin thIdhai
puRanthaLLak kaRRaRindhAr

அறனில் அழுக்காற்றை ஆய்ந்தறிந்தோர் ஆற்றார்
பிறழ்தலின் பொல்லாங் கறிந்து
aRanil  azhukARRai aYndharindOr ARRAr
piRazdhalin pollAng gaRindhu

அக்டோபர் 01, 2012

குறளின் குரல் - 172


1st October, 2012

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
                  (குறள் 163: அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
aRan Akkam vEnDAdhAn enbAn piRanAkkam
pENAdhu azhukkaruppAn

aRan  - virtuous life that gives all the good in this and subsequent births
Akkam  - the wealth obtained because of that like good family, education, respectable status etc.
vEnDAdhAn – who does like them for self
enbAn – and says so
piRanAkkam – watching others living well
pENAdhu – can’t tolerate
azhukkaruppAn – out of envy, jealousy

Even if I lose both eyes, other person should lose at least one” is an extremely cynical and sinful thought born out of jealousy. This verse has been written for such envious people. Those who can not bear when others live in prosperity, lose perspective of the virtuous life that gives all benefits such as good subsequent births, education, and respect in the society. It is as if they say that they don’t want such nice things in life.

Though it is impossible to think that someone would actually say that, vaLLuvar implies, being so jealous tantamount to declaring so. So he cautions envious people this way that they are pushing away good things in their life. There is an old proverb that says: “Enemy’s envy is a punishment to himself”.  Hearing Kunthi has given birth to a male child, GAndhAri, hit her stomach in extreme jealous that her child was not the first to the clan and would automatically lose the right to kingdom. We know that resulted in the birth of 100 bad children, Dhuryodana and his ninety nine brothers. That completely wiped out the Kaurava clan as well GhAndhAri’s parental family too.

“Those who don’t want virtuous life and ensuing wealth
   Are jealous of others propertity, dwell in the envious filth”

தமிழிலே:
அறன் – தனக்கு இப்பிறப்பு, மற்றும் பின்வரும் பிறவிகளில் நன்மையும் தரக்கூடிய அறநெறி வாழ்க்கை
ஆக்கம் – அதனால் பெறக்கூடிய செல்வமெனப்படும், குடிப்பிறப்பு, கல்வி, கற்றோரிடம் மதிப்பு போன்றவை
வேண்டாதான் – இவற்றை தனக்கு தேவையில்லை
என்பான் – என்று சொல்பவன்
பிறனாக்கம் – மற்றவர் வளமுடன் வாழுதலை
பேணாது – கண்டு அதை சகியாது
அழுக்கறுப்பான் – பொறாமையில் வெம்புகிறவன்.

“தான் இருகண்களை இழந்தாலும் சரி, அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது அவிய வேண்டும்” என்கிற தீய எண்ணத்தை உடைய பொறாமைக்காரர்களுக்காக எழுதப்பட்ட குறளிது.  மற்றவர்கள் வளமுடன் வாழ்வதைக் கண்டு பொறாமையில் வெம்புகிறவர்கள், தங்களுக்கு இப்பிறப்பு மற்றும் ஏனைய வரும் பிறப்புகளிலும் நன்மைதரக் கூடிய அறவாழ்வினையும், அவ்வாழ்வினால் விளையக்கூடிய செல்வங்களான நற்குடிப்பிறப்பு, கல்வி, கற்றோரிடம் மதிப்பு மற்றும் பலவித நன்மைகளையும் தனக்குத் தேவையில்லை என்று சொல்பவர்களாக் கருதலாம்.

யாரும் அப்படி நினைக்கமாட்டார்கள் எனினும், பொறாமைக்காரர்களுக்கு இவையெல்லாம் கிடைக்காது என்பதை அவர்களுக்கு உணர்த்துவிதமாக, அவர்கள் இன்னவற்றை வேண்டாமென்பார்கள் என்கிறார் வள்ளுவர். “சத்துரு பொறாமை தனக்கே தண்டனை” என்கிற பழமொழி கூறுவதும் இக்கருத்தைத்தான். காந்தாரி, குந்தி பிள்ளைப்பெற்றாள் என்று அறிந்து பொறாமையால் உந்தப்பட்டு தன்வயிற்றை மோதிக்கொண்டதன் விளைவு, அவள் குலமே வேரோடு அழிய துரியோதனன் உள்ளிட்ட நூறு தீக்குணப் பிள்ளைகளைத் தந்து அவளுடைய குடும்பத்தோடு அழித்ததுமில்லாமல், அவள் பிறந்த வீட்டு உறவுகளையும் அழித்தது.

இன்றெனது குறள்:
அழுக்காற்றில் மாற்றார் உயர்வை பொறாதார்
விழுப்பறனும் ஆக்கமும்வேண் டார்

azhukkaRRil mARRAr uyarvai poRAdhAr
vizuppaRanum Akkamum vENDAr

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...