6th October, 2012
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
(குறள் 168:அழுக்காறாமை அதிகாரம்)
Transliteration:
azhukkaRu ena oru pAvi thirucheRRuth
thIyuzhi uyththu viDum
azhukkaRu ena –that is which called
jealousy
oru pAvi - a great
sin
thirucheRRuth – will destroy wealth
thIyuzhi - hell
uyththu viDum – will send to (hell)
Like in many other chapters
throughout ThirukkuraL, vaLLuvar talks extensively about the repercussions of
being jealous, how demeaning it is, and points out to the losses and the punishment.
He describes the envy as a big sinner and how that sinner will not only destroy
wealth in this life and will only take the envious to hell after our life.
The word “thirucheRRu” has been interpreted as
removing the goddess of wealth Lakshmi from our life, by some commentators. The
word “seRRu” means eradicate, or
kill. Laksmi is killed or eradicated is
not an auspicious thing to say. To avoid this, some commentators have said,
removing Lakshmi, which does not fit the way the verse goes. A Goddess can not
be removed by a deamonous sin which gives a wrong connotation of evil triumphs
over good. It makes sense that the same deamonous sin will wipe out the wealth
or kill the wealth of an envious person as it is considered a sin too.
Similarly the word “thIyuzhi” is also not “devious or sinful path”. Foe every sin,
only a repercussion or a punishment is a valid thing to say in an aphorism to
keep people away from the sin. vaLLuvar’s intent is not to point out that a bad
sin will take a person to bad ways further here, but to underline what will be the
resultant punishment for them. “thIyuzhi”
is “being in fire like punishment”. As he has talked about other beliefs of his
times, he means the “burning in the eternal fire of hell” here. By spelling out the punishment, even if other
punishments are not penetrating, the punishment of “hell” has always been able
to make impact in most people in all cultures.
“The sinner – Jealousy will not only destroy
the wealth
But will
punish the envious in the fire of hell after death”
தமிழிலே:
அழுக்காறு என – பொறாமை எனப்படும்
ஒரு பாவி – ஒரு பெரும் பாவியானவன்
திருச்செற்றுத் – செல்வமழித்து
தீயுழி – நரகத்தின் கண்
உய்த்து விடும். – கொண்டு சேர்க்கும்
பல அதிகாரங்களிலும் காணும்
முறையிலே ஒரு தீயொழுகலினால் வருந்தீமை, அக்குணம் கொண்டோர்க்கு வரும் இழிமை,
துன்பம், அக்குணத்தினால் அவரைச் சார்ந்தவருக்கு வருந்துன்பம் போன்றவற்றைக்கூறி,
அவருக்கே வரக்கூடிய இம்மை மறுமையைச் சார்ந்த இழப்புகளைச் சுட்டிக்காட்டி
சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர். பொறாமை என்கிற குணக்கேட்டை ஒரு பாவத்தின்
உருவாகச் சொல்லி, அந்த உருவம் நமக்கு இம்மையில் செல்வத்தை அழித்து (திருச்
செற்று), இறந்தபின் நரகத்தில் (தீயுழி) தள்ளிவிடும்.
திருச் செற்று என்பதை இலக்குமியை விலக்கி
என்பர் சில உரையாசிரியர்கள். திருவை செல்வங்களின் கடவுளாகக் கொண்டு, அதனாலே “செற்று” என்பதற்கு “விலக்கி” என்று சொல்வது தவறானது. செற்றல் என்பதற்கு கொல்லல்,
அழித்தல் என்ற பொருளே சரி, இக்குறளை
பொருத்தவரை. இலக்குமியைக் கொன்று, அல்லதுஅழித்து
என்பது மங்கலமில்லாத சொல்வழக்காகையால், செல்வத்தை அழித்து என்றலே சரி.
தீயுழி என்பதையும் தீய வழி என்றல் சரியான பொருள்
அல்ல. குற்றத்திற்கு உண்டாவது தண்டனையே தவிர, மேலும் தீயவழி சேர்ப்பது அல்லது. தீய
வழி செல்பவர்களு மற்ற குணக்கேடும் சேர்ந்துகொண்டால் மேலும் தீய வழிகளுக்குச்
செல்வார்கள் என்பது உண்மையானாலும், அதை உறுதிப்படுத்துகிறவிதமாக வள்ளுவர்
எழுதவில்லை. தீயுழி என்பது நெருப்பனைய கொடுமை அல்லது மற்ற நம்பிக்கைகளைப் போல
சுடுவதைப் போலவாம் நரகத்தில் கொண்டு சேர்ப்பது என்ற பொருளில்தான் செய்துள்ளார்.
பரிமேலழகர் உரையும் இக்கருத்தை ஒட்டித்தான் இருக்கிறது.
இன்றெனது குறள்:
செல்வங் கெடுத்து நரகம் செலுத்துமே
பொல்லாத பாவிபொறா மை
Selvang keDuththu naragam seluththumE
pollAdha pAvipoRA mai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam