5th October, 2012
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
(குறள் 167: அழுக்காறாமை அதிகாரம்)
Transliteration:
Avviththu azhukkARu uDaiyAnaich seyyavaL
Thavvaiyaik kATTi viDum
Avviththu – Not able to tolerate, feeling unhappy in
heart (about the jealous people)
azhukkARu -
jealousy
uDaiyAnaich - those
who have (jealousy)
seyyavaL – the goddess of wealth, lakshmi
Thavvaiyaik – her older sister (who is goddess of
poverty)
kATTi viDum – will show her.
Goddess of wealth will not
tolerate the people that are jealous of others and she will make them poor by
leaving them and having her elder sister (MUdEvi) stay with them. As much as SridEvi symbolizes wealth, MUdEvi
symbolizes abject poverty. Some commentators have interpreted the “avviththu”
for jealous people to mean that they can not bear others being prosperous.
Either way, the totality of what is said holds good. Envious ones will suffer
poverty.
As we have seen it earlier,
regardless of vaLLuvar’s religious beliefs, he has evidently handled some of
the popular beliefs of his times in his verses.
The word “thavvai” has not
been used by anyone other than IlangO adigaL and vaLLuvar in Sangam literature.
Searching through the ocean of information, the internet, the word MUdEvi means
one who was born out of churing milky ocean, before Lakshmi. She is referred to
as “mUththOL” “mAmugaDi”, “kAkkaik koDiyOL”,
“pazhaiyOL” in sangam literature. Puranic
texts call her by the Sanskrit name “JeshtA”
meaning the same. A researcher NaRAyaNamUrthi
says that there are statues of mUDevi, her son kULigan, daughter mAndhi
in the outer sanctum of a Shiva temple in a town ‘mAnUR” near Pazhani. He further asserts that because she was
tainted with “laziness” and “poverty” in AuvayyAr and vaLLuvar’s work, she lost
the worship of people. Until 8th
century she was worshipped as mother goddess of Tamils. IlangO has used the
word “thavvai” to mean elder sister.
Jain monks have meant
“avvai” to mean female ascetics. Since ascetics beg for alms with a begging
bowl, vaLLuvar could have meant that goddess of wealth would make the jealous
people beg like those female ascetics.
Since jealousy is common for both genders, this may not be a fitting
comparison too. A remote possibility is that vaLLuvar did not give equal status
to females in his verses and it could be reflection of that stance too.
Another researcher pon.SaravaNan
places a different thought before us. He replaces the word “thavvai” with
“kavvai” (he thinks thavvai is a
mistake) meaning a loud cacophonous fighting sound made by the wife of a
jealous person. His interpretation is
that, “A jealous person will be bitterly fought by his own wife with a loud mouth”.
While he has attempted to portray and establish a non-religious leaning for
vaLLuvar, the most common commentary seems to fit the general sense of this
chapter as well as how vaLLuvar approaches every topic.
“Goddess of wealth will leave the jealous,
annoyed
Let elder sister be with them to make wealth
void”
தமிழிலே:
அவ்வித்து – பொறுக்காமல், மனங்கோணி
அழுக்காறு – பொறமை
உடையானைச் - கொண்டோரை
செய்யவள் - திருமகள்
தவ்வையைக் – அக்காளான மூதேவியைக்
காட்டி விடும் – அவர்களுக்குக்
காட்டிவிடும்
திருமகள் பொறாமை
கொண்டவர்களைக் கண்டு பொறுக்கமாட்டாது, அவர்களை தன்னுடைய தமக்கையான மூதேவி
சேரும்படி செய்து தான் அவரைவிட்டு நீங்கிவிடுவாள். இதையேஅடுத்தவர் வாழ்வதைப்
பொறாமல், பொறாமை கொண்டோர் என்று கொள்வோரும் உள்ளனர். இரண்டு விதமாகவும் பொருள்
சரிதான். பொறாமைக் கொண்டோர் வறுமையிலே வாடுவது திண்ணம் என்பதை இக்குறளால்
சொல்கிறார் வள்ளுவர்.
முன்னரே கண்டபடி, வள்ளுவரின்
மதநம்பிக்கைகள் எவையாயிருந்தாலும், அவர் மக்களிடையே இருந்துவந்த சில நம்பிக்கைகளை
தன்னுடைய குறள்களில் எடுத்துக் கையாண்டுள்ளார் என்பது வெளிச்சம். செல்வத்திருமகள்
இலக்குமி, அவளுடைய அக்காள் மூதேவி என்னும் தரித்திர நாராயணி என்பது காலம் காலமாக
இருந்துவருகிற நம்பிக்கை என்பது இக்குறளினால் உறுதி.
தவ்வை என்ற சொல்லை இளங்கோ, வள்ளுவரைத்தவிர வேறு
யாரும் சொல்லாடல் செய்ததாகத் தெரியவில்லை.
தகவலாழியாம் இணயத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள். மூதேவி என்பவள்
ஸ்ரீதேவிக்கு முன் பார்க்கடலில் தோன்றிய மூத்தோள், முன்னவரை குறிக்கும் “ஜேஷ்டா”
என்ற வடமொழிச் சொல்லாலும் குறிப்பிடப்படுபவள். சங்க இலக்கியங்களில் மாமுகடி,
காக்கைக் கொடியோள், பழையோள் என்று பதினான்கு விதப்பெயர்கள் உண்டென்று
ஆராய்ச்சியாளர் நாராயணமூர்த்தி என்பவர் கூறுகிறார். அவர் பழனி அருகிலுள்ள மானூரில்
உள்ள சிவன்கோவில் வெளிச்சுற்றில் இவளுக்கும், இவளது மகன் குளிகன், மகள் மாந்தி
இவர்களுக்குச் சிலைகள் உண்டு என்கிறார். இதில்
காக்கை கொடி இடதுபுறம் திரும்பி இருத்தல், கிரீட மகுடம், மூதேவி மட்டும் பூணூல் அணியாதிருத்தல்
ஆகியவை சிறப்பம்சம். மூவரும் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகிய அணிகலன்கள் அணிந்துள்ளனர்.
திருவள்ளுவர், அவ்வையார் பாடல்களில், சோம்பலின் அம்சமாக கூறப்பட்ட சூழலில் மூதேவி வழிபாடு
குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இளங்கோவடிகளும் தவ்வையை, தமக்கை, மூத்தவள்
என்ற பொருளிலேயே கையாண்டிருக்கிறார்.
சமணர்கள் அவ்வை என்ற
சொல்லைப் பெண்துறவிகளைக் குறிக்கச் சொல்லுவார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில்
ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார். துறவிகள் கைகளில் ஓடேந்தி பிச்சை எடுப்பவர்கள்
என்பதனால் பிச்சையெடுக்கச் செய்திடுவாள் என்று கொள்ளலாம். ஆனால் பொறாமை ஆண் பெண்
இருபாலருக்கும் பொதுவானதாகையால், அதை பிச்சையெடுக்கும் பெண்துறவிகளுக்கு ஒப்பாக
கூறியிருக்க முடியாது.
இணையத்தில் பொன். சரவணன்
என்கிற தமிழாராய்ச்சியாளர் ஒரு வேறுபட்ட சிந்தனையை முன்வைக்கிறார். தவ்வை என்ற
சொல்லுக்குப் பதிலாக கவ்வை என்ற சொல்லை இட்டு, “பேராசையால் காழ்ப்புணர்ச்சி உடையவனை
அவனது இல்லாளின் ஆரவார ஒலியே காட்டிக் கொடுத்து விடும்” என்கிறார். செய்யவள்
என்பதற்கு மனையாள் என்றம் கவ்வை என்பதற்கு ஆரவார ஒலி (சண்டையில் மிகுந்த குரல்) என்றும்
பொருள் கொண்டு விளக்குகிறார்.
வள்ளுவரின் சமயச்
சார்பின்மையை நிறுவ இவர் செய்திருக்கும் முயற்சி பாராட்டத்தக்கதே எனினும்,
பரிமேலழகர் உள்ளிட்ட உரையாசிரியகள் செய்த உரை பொருத்தமாகத்தான் உள்ளது. அதை ஒட்டியே என்னுடைய இன்றைய மறு குறளும்.
இன்றெனது குறள்:
அவ்வியரை அவ்வித்து மால்மனையாள் அக்காளை
அவ்வியர்க்குச் சேர்த்து விடும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam