4th October, 2012
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
(குறள் 166: அழுக்காறாமை அதிகாரம்)
Transliteration:
koDuppadhu azhukkaRuppAn suRRam uDuppadhUum
uNbadhUum inRik keDum
koDuppadhu – seeing somebody’s charity
azhukkaRuppAn – a person who is jealous of that charity
suRRam – the close relatives of such envious person
uDuppadhUum – proper clothes to wear
uNbadhUum – or food to eat
inRik - will not have
keDum – and perish ( will become so poor is
implied)
When someone is charitable
towards others, a person who gets jealous of that act makes sure that his family
and relatives all starve and struggle to even have decent clothes to keep their
honor. This means that the envy will become the reason for the abject poverty
of the person’s close relatives.
This verse is to point out the
ill effects of having ill thoughts such as envy and to turn away a person from
such thoughts. Even a person who is envious has a family, friends and
relatives, whose wellbeing should definitely be the person’s concern. At least
for that concern, the person should stray from such ill thoughts and acts - the
main idea emphasized by this verse!
This verse also points to a
socio- psychological stance. A society
treats the associates of a person based on its evaluation of the persons
conduct and manners. It is inferential that people that are associated with a
person of bad traits are kept at a distance by the society.
In Kamba Ramayana, sage
Viswamithira tells the story of Mahabali to Rama and Lakshmana narrating, how Mahabali
gets perturbed at the advice of his guru Sukracharya that Mahabali should not
give what the little vAmanA asks for, during the sacrifice. Mahabali tells his
guru: “Does it fit your stature as a guru to prevent me form being charitable
to somebody who has come to me for alms?
Don’t you know that your own relatives will be devoid of food and
clothese if you do this?” (“eDuththu
oruvarukkyu oruvar Ivadhanin munnam
thaDuppadhu ninakku azakidhO? Thagavu il veLLi?
koDuppadhu vilakku koDiyOi unadhu suRRam uDuppadhuvum uNbadhuvum inRi
viDukinDRAi”)
Kamaban has used many of
kuraL aphorisms through out his magnum opus with similar words and the
appropriate contexts.
“Preventing the charity of a person being
jealous,
A person’s kin will perish with out food and
dress”
தமிழிலே:
கொடுப்பது – பிறருக்கு ஈதலை செய்பவனைக் கண்டு
அழுக்கறுப்பான் – பொறாமை கொள்பவனது
சுற்றம் – நெருங்கிய சுற்றம், கேளிர்
உடுப்பதூஉம் – மானம் மறைக்கும் துணிமணிகளும்
உண்பதூஉம் – பசியாற்ற உணவும்
இன்றிக் – இல்லாது வறுமையிலே
கெடும் - அழியும்
பிறருக்கு தானம் (ஈதல்)
செய்யும் ஒருவரைக்கண்டு பொறமை (அவ்வியம்) கொள்ளுபருக்கு அவருக்கு மட்டுமல்லாது, அவருடைய
சுற்றமும் (கேளிர்) அழிந்துபோகக்கூடிய அளவுக்கு வறுமை வந்து சேரும், அவர் உண்ண
உணவும், மானத்தை மறைக்கும் உடையும் கூட இல்லாத வறுமையில் உழலுவர்.
ஒரு தீய குணத்தின் உச்ச அளவு
தீங்கினைச் சுட்டிக்காட்டி நல்வழி ஆற்றுபடுத்தவே வள்ளுவர் இப்படிக்கூறுவதாகக்
கொள்ளவேண்டும். பொறாமை என்னும் தீக்குணம் கொண்டவருக்கும் தம்முடைய மனைவி, மக்கள்,
சுற்றம் இவர்களின் நலனில் அக்கறை இருக்குமே. அந்த அக்கரையின் மேலிட்டாவது அவர்கள்
அத்தீக்குணமொழுகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட கருத்து.
இது ஒரு சமூக உளவியல்
சேர்ந்த ஒரு நிலைப்பாட்டையும் குறிக்கிறது. சமூகம் ஒருவரின் குணநலன்களைச் சார்ந்தே
ஒருவரின் சுற்றத்தை, அளவிடும், மதிப்பிடும்; ஆகையால், தீய குணம் கொண்ட ஒருவரின்
சுற்றத்தையும் மனதளவிலே தள்ளிவைத்தே பார்க்கும்.
கம்ப இராமாயணத்தில்
வேள்விப்படலத்தில், இராமனுக்கு மகாபலியின் கதையைச் சொல்லும் விசுவாமித்திரர்,
மகாபலி தன்னுடைய குலத்துக்கு ஆசிரியனாம் சுக்கிராச்சாரியாரைப்பார்த்து இவ்வாறு
கூறுகிறார்.
“எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின்
முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு
இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது
சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!”
பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே, நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர்
ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு
கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ?
ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே! உன்னைச்
சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது, உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல்
விடுகின்றாய் என்பதை அறிவாயாக என்கிறான் மகாபலி. வள்ளுவனின் குறள் கருத்துக்களை குறள்
சொல்லும் சொற்களிலேயே கம்பன் வெகு பொருத்தமாக பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.
இன்றெனது குறள்:
ஈதலுக் கவ்வியன் கேளிர் கெடுவரே
நோதலில், ஊணுடை அற்று
Idhaluk kavviyan kELir keDuvarE
nOdhalil UNuDai aRRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam