7th October, 2012
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
(குறள் 169: அழுக்காறாமை அதிகாரம்)
Transiliteration:
Avviya nenjaththAn Akkamum sevviyAn
kEDum ninakkap paDum
Avviya – mind crooked because of jealousy
nenjaththAn - and people of hearts with such minds
Akkamum – the high flying life, prosperity
sevviyAn – who are virtuous and people of good thoughts
and deeds
kEDum -
their sufferings and lowly state in life
ninakkappaDum – are worth pondering (as
to why so!)
There comes a question in
the mind, when we witness prosperity for someone who has a jealous, victimizing
attitude, think and does only bad deeds. It is even more surprising when a
person of all good virtues and no mean bone, is full of suffereing in life and is in a lowly state. We wonder what good or bad karma they must
have done to be the way they are in this birth.
Of course devious minds
will think, this life is only for people that act as if “might is right” and people of good virtues
are spineless and do not know how to enjoy the life. VaLLuvar will ask in a
later chapter, “which greater force is there than the destiny ordained by the
deeds of past lives?” People of good thinking will always take it the right
sense and mend themselves if they have had non-virtuous ways hitherto.
vaLLuvar will answer this
doubt in the next verse. In SilappadikAram, aDaikkalak kAdhai, mADalamaraiyOn
tells kOvalan, “Known to me, you have done only virtuous things in this life. The
fact that you have lost everything and have come leaving your place today is
probably because of your deeds of past life”.
The thought of “birth-death” cycle is once again stressed in old literature
time and again and establishes the age old thought entrenched in our society.
“It begs a question in the mind to see
envious prospering
And the
lives of “for ever virtuous” are full of suffering”
தமிழிலே:
அவ்விய – பொறாமையினால் மனங்கோணிய
நெஞ்சத்தான் – நெஞ்சத்தினை உடையவருடைய
ஆக்கமும் – உயர்ந்த வாழ்வும்
செவ்வியான் – நல்ல குணங்களோடு வாழக்கூடியவர்களுடைய
கேடும் – தாழ்வு நிலை வாழ்க்கையும்
நினைக்கப்படும் – சில நேரங்களில் மனங்களிலே
நினைத்துப்பார்க்கின் எப்படி என்கிற வினாவை எழுப்பும்
சாதாரணமாக எல்லோருக்கும்
கெடுதலையே நினந்து, மற்றவர்கள் வாழுதலை பொறாது, மனத்த்திலே கோணலைக் கொண்டு கெடுதலையே
செய்து வாழ்பவர்கள் மிகுந்த வசதியிலும், எல்லாவித அதிகாரங்களுடனும் வாழ்ந்து
கொண்டிருப்பதும், நல்ல குணநலன்களயே கொண்டு, நல்லவற்றையே செய்து வாழ்பவர்கள்,
மிகுந்த தாழ்ந்த நிலையிலும் வருந்தி வாழ்வதை பார்க்கும்போது, சிந்திக்கக்கூடிய
மனங்களில் ஏன், எதனால் என்ற கேள்விகள் கேட்கப்பட்டு உழப்படுவது இயற்கை.
இந்த கேள்விகூட இவர்கள் செய்த
பழவினைதான் என்ன என்ற அளவில்தான் பெரும்பாலும் இருக்கிறது. கோணல் புத்தி
கொண்டவர்களே, இதைக்கண்டு, ஒருவேளை இப்படி வாழ்வதுதான் வாழ்கையென்று மேலும்
தீயசெயல்களை செய்யலாம். நேர் சிந்தனையாளர்கள், வள்ளுவரே பின்னால் சொல்வதுபோல், “ஊழிற்
பெருவலி யாவுள” என்று எண்ணி, பாழ்வினைகள் தொடரா வண்ணம் இப்பிறவியில், இனிமேலாவது
நல்லவை செய்து வாழவேண்டும் என்கிற அறிவுறுத்தலாகவே இவற்றைக் கொள்வார்கள்.
இவ்வக வினாவுக்கும்
பின்வரும் குறளில் விடையும் கூறுவார் வள்ளுவர். சிலப்பதிகார அடைக்கலக் காதையில்
மாடலமறையோன், கோவலனைப்பார்த்து இங்கனம் கூறுகிறான், “இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” என்று.
இப்பிறவியில் நீ செய்தன யாவும் நல்லறங்களே ஆகும், அவ்வாறிருக்க, திருமகளை ஒத்த
இம்மாணிக்கக் கொழுந்தாகிய கண்ணகியோடு துன்புற்று இங்கு நீ வந்திருப்பது உன்னுடைய
முற்பிறப்பின் தீவினை போலும்” என்கிறான்.
இன்றெனது குறள்(கள்):
அழுக்குற்றார் தம்உயர்வும் நல்லியலார் கேடும்
உழுமே உளத்தில் வினா
azhukkRRAr thamuyarvum nalliyalAr kEDum
uzhumE uLaththil vinA
அழுக்குற்றார் தம்உயர்வில் நல்லியலார் கேட்டில்
எழுந்திடுமெண் ணத்துவி னா
azhukRRAr thamuyarvil nalliyalAr kETTil
ezhundhiDumeN Naththuvi nA.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam