அக்டோபர் 08, 2012

குறளின் குரல் - 179


8th October, 2012

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
                  (குறள் 170:அழுக்காறாமை அதிகாரம்)

Transliteration:
azhukaRRu aganRArum illai ahdu illAr
Perukkaththil thIrndArum il

azhukaRRu – Driven by jealousy
aganRArum – great men
illai  - none has become so (people of respectable stature)
ahdu illAr – Devoid of such meanness (jealousy)
Perukkaththil – without wealth (all good things to have in life)
thIrndArum - perished
il - none

It is but natural for the mind to ponder over and comprehend the anomalies of life and the apparent injustice that life renders to us. Seemingly glorious life of jealous and devious and a life of burden saddled with trouble for those who are devoid of such bad traits leading a virtuous life are inexplicable.  VaLLuvar answers that in an indirect way in this verse. He hints that the glorious life of jealous will not sustain.  Similarly the troublesome and burdened life of virtuous is nothing but a transient temporary phase.

Our deeds of earlier births have a bearing in our current birth and that’s probably what can explain the observed aberrations that we see in our lives.

“Driven by jealousy none has been placed high –
  Devoid of that has lost none forever to sigh”

தமிழிலே:
அழுக்கற்று – பொறாமை வசப்பட்டு
அகன்றாரும் – பெரியவர்களாய், நாயகராய் (அகன் என்ற சொல்லுக்கு நாயகன் என்கிற பொருள்)
இல்லை – ஆனவர்கள் இல்லை
அஃதுஇல்லார் – பொறாமையாகிய தீக்குணம் அற்றவர்கள்
பெருக்கத்தில் – செல்வங்கள் இல்லாமல் (பொதுவாக எல்லா வாழ்க்கை வளங்களிலும்)
தீர்ந்தாரும் – ஒழிந்தாரும்
இல் - இல்லை

சென்ற குறளின் ஏற்படும் அகவினாவுக்கான பதில் இக்குறள் வாயிலாகச் சொல்லப்படுகிறது. பொறாமை வசப்பட்ட மனமுடையவர்கள் நன்றாக வாழ்வதும் அக்குணமற்று நல்லோராய் இருப்பவர்கள் துன்பத்தில் வாடுவதும் எதனால் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஏற்படுவது இயற்கை.  இக்குறளில் வள்ளுவர் அதற்கான பதிலை இவ்வாறு சொல்லுகிறார்: “வாழ்வது போல் தோன்றினாலும், எல்லோர் வாயிலும் வீழ்ந்து எழுவார்களே அல்லாது, அவர்கள் சமூகத்தில் ஒரு உயர்ந்த அளவில் வைக்க சமூகத்தினர் ஒப்பார் என்றும், அதேபோல, அத்தீக்குணம் அற்றவர்கள் செல்வங்கள் இல்லாது வரியராய் தாழ்நிலையிலேயே இருப்பர் என்றும் கூறமுடியாது”.

கம்பராமாயண ஆரணியகாண்டத்தில், சூர்பனகை சூழ்ச்சிப்படலத்தில், இராவணன் சந்திரனைப்பார்த்து கூறுவதாக உள்ளபாடலில், “மாற்றார் செல்வம் கண்டு அழிந்தால், வெற்றி ஆகவற்று ஆமோ? என்கிறார் கம்பர். பிறர் வளம் கண்டு இங்ஙனம் சிதைவுற்றால் வென்று உயர்தல் இயலுவதாகுமோ? என்பதால் அழுக்காறு உடையவர்களுக்கு ஆக்கமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறான்.

பொறாமை குணத்தோர் வாழ்வது போல் தோன்றினாலும் வீழ்ந்தாரே, அக்குணம் அற்றவர் வீழ்ந்தது போல தோன்றினாலும் வாழ்வாரே என்பதே இக்குறளின் சுருக்கக் கருத்து.

இன்றெனது குறள் (கள்):
அழுக்காற்றால் ஆக்கம் அடைந்தாரும், இன்றி
விழுந்தொழிந்து பட்டாரும் இல்
azhukARRAl Akkam aDaindhArum inRi
vizhundhozhindu paTTArum il

அழுக்குற்றார் வாழ்ந்தாலும் வீழ்ந்தாரே- அற்றோர்
விழுந்தாலும் வாழ்கின்ற வர்
AzhukkuRRAr vAzhndjAlum vIzhndhArE – aRROr
vizhundhAlum  vAzhkinRa var

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...