அக்டோபர் 09, 2012

குறளின் குரல் - 180


அதிகாரம் 18: வெஃகாமை (Not desiring others possessions/Avoiding Covetousness)

[Though vaLLuvar has already written about not desiring other person’s spouse, in this chapter he writes about not desiring others possessions, mostly the wealth. Having such desire is small mind’s thinking. Out of envy such thoughts creep in to covet what others have; hence the chapter has been kept next to the chapter on Envy]

9th October, 2012


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
                  (குறள் 171: வெஃகாமை அதிகாரம்)

Transliteration:
naDuvinRi nanporuL veggin kuDiponRik
kuRRamum AngE tharum

naDuvinRi – without having the centered thought that this is not virtuous
nanporuL – what material good things that belong to others
veggin – a person who desires to covet
kuDiponRik -  will destroy his/her home as well as descendants
kuRRamum  -   crimes
AngE tharum -   lead only to more (crimes)

When a person who covets what rightfully belongs to others, without the just sense, the very thought will destroy his family and decendants and also will indulge the person do more crimes.

The use of word “ponRudhal” suggests “diminishing and perishing”.  “Veggudhal” is the word to mean, to grab from someone, what does not belong to self. Another poetic word that we see in literature for the same is “vavvudhal”. innA nArppadhu suggests the same meaning in one of its verses – “aDaikkalam vavvudhal innA”. Kambar,  to suggest that MahAbali grabbed the heavens that belong to Gods and the earth that belongs to humans, says, “thiRal mAvali enbAn vAnamum vayyamum vavvudhal seydhAn” .  Though MahAbali was the grand son of PrahlAdA, a devotee of Vishnum, and was one of those rare good demonic kings, because of the arrogance of his might, did what was not right. 

Interestingly the same word has been used by AbirAmi baTTar in abirAmi andhAdhi, to mention that Goddess pArvathi has grabbed the left side of Shiva’s body, not in a bad connotation though.  “madhisaya mAgavandRo vAmabAgaththai vavviyadhE?” is the ending of one poem. The next one begins with that ending word “ vavviya bAgaththu iRaivarum nIyum magizhdhirukkum sevviyum ungaL thirumaNak kOlamum sindhaiyuLLE”.

Anonther beautiful poem from muthoLLAyiram, from Sangam Anthology, uses the word cleverly to praise a king in a different way. This king has coveted the hearts of beautiful girls and because of that their beautiful faces lost the glow and brilliance. The poet asks how does such an act befit a king and make him worthy of holding the scepter anymore.

“Unjust desire to covet others rightful possession
  Destroys the family and lead to crime of derision”

தமிழிலே:
நடுவின்றி – நமக்கு இது அறமன்று என்ற நடு நின்ற சிந்தனையின்றி
நன்பொருள் – பிறருக்கு சொந்தமான நல்ல பொருள்களைக்
வெஃகின் – கவர்ந்து கொள்ள விழைபவருக்கு
குடிபொன்றிக் – அவருடைய குடிமுழுதுமே அதனால் கெட்டழியும்
குற்றமும் – அது பல குற்றங்களில்
ஆங்கே தரும் – அவரை ஆழ்த்திவிடும்

ஒருவர் பிறருக்கு சொந்தமான பொருள்களில் ஆசை கொள்ளுதல் நமக்கு அறமன்று என்ற நடுவார்ந்த எண்ணமில்லாது கவர்ந்து கொள்ள நினந்தால் அது அவருடைய குடியை அழிந்து, அவரை அறமற்ற பல குற்றங்களில் கொண்டு சேர்த்துவிடும்.

பொன்றுதல் என்பது குன்றுதலையும், அழிதலையும் குறிக்கும். வெஃகுதல் என்பது. வவ்வுதல், கவ்வுதல், பற்றுதல் என்ற பொருளில் வந்தாலும், முறையற்று கவருதல் என்ற பொருளிலேயே பெருபாலும் கையாளப்படுகிறது. இன்னா நாற்பது பாடலொன்று, “அடைக்கலம் வவ்வுதல் இன்னா” என்று பிறரிடம் அடைக்கலமாகிய பொருளைக் கவருதல் துன்பம் தரும் என்கிறது. மாவலி வானகத்தையும் வையகத்தையும் பறித்து என்ற பொருளிலே கம்பர் “திறல் மாவலி என்பான் வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்” என்பார். மாவலி என்பான் திறமுடையவந்தான் ஆனால் தேவருக்கு உரிய வானகத்தையும், மனிதருக்குரிய வையகத்தையும் அவன் முறையற்று கவர்ந்ததை “வவ்வுதல்” என்ற சொல்லிலே கம்பர் உணர்த்துகிறார்.

அபிராமி பட்டரோ உமை சிவனாரின் இடப்பாகம் பற்றியதை உணர்த்துவிதமாக இருபாடல்களில் வவ்வுதலைக் குறிக்கிறார். இக்குறள் கருத்துக்கு மாறாக இருந்தாலும், பற்றினை நல்விதமாகக் கூறுதலுக்கும் வவ்வுதல் பயனாகியுள்ளது. “வவ்வியபாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே” என்பார் பட்டர்.  அந்தாதியானதால், முந்தைய பாடலில், “மதிசய மாகவன்றோ வாமபாகத்தை வவ்வியதே?” என்ற வினாவோடு முடித்திருப்பார்.

மற்றொரு முத்தொள்ளாயிரப்பாடல், தலைவனிடம் மயங்கி அவனிடம் மனதை பறிகொடுத்த பெண்கள் அதனால், அழகு குன்றினராம். அவ்வாறு பெண்களின்  அழகைத் திருடிகொண்டு போனமன்னன் எப்படி செங்கோல் செலுத்தும் மன்னனாக இருக்கமுடியும் என்கிறது. கவிதை நயத்தில் தலைவனை ஏற்றிச் சொன்னாலும் வவ்வுதல் என்ற சொல் “திருடலுக்கு ஒப்பானதாகவும், அது செங்கோல் ஏந்தும் தகுதியை மன்னனுக்கு அளிக்காது” என்றும் சொல்வது கவனிக்கத்தக்கது. அப்பாடல்:

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேன்மாந்தைக் கோவே! - நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என!

இன்றெனது குறள்
பிறர்பொருள் வவ்வல் குடிகெடுத்து சேர்க்கும்
அறனொழிந்த குற்றங் களில்

piRarporuL vavval kuDikeduththu sErkkum
aRanozhinda kuRRang kaLil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...