அக்டோபர் 10, 2012

குறளின் குரல் - 181

10th October, 2012

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
                  (குறள் 172: வெஃகாமை அதிகாரம்)

Transliteration:
paDupayan veggi pazhipaDuva seyyAr
naDuvanmai nANu bavar

paDupayan – knowing the use of coveting somebody’s possession
veggi – and understanding what a virtuless act to desire so,
pazhipaDuva  - and also understanding that it is an act of wrongdoing
seyyAr – will not do
naDuvanmai  - not being centered (that others possessions are not ours)
nANubavar -  who feel shameful about it.

Those who are shameful of thoughts or deeds to covet what rightfully belongs to someone else, are just in their thoughts. Though they may see the benefits of such an act, they will shy away understanding the slanderous nature of such an act.

What is the connection between being just and coveteousness?  While reading the work of vaLLuvar, it is evident that he has time and again connected all the good virtues and bad crimes to there respective deeds in different forms; he has also emphasized on doing or avoiding the respective deeds. Persons of fairness will not covet somebody’s belongings though they see some use of that, being one sided. They will be shy to even think, let alone do such deeds.

The word “veghgal” has multiple other words such as “vavval”, “paRiththal”, “icchiththuk kavardhal”, “iNungudhal” etc.  All of them mean the same -  trying to take away what is not theirs from someone else. vaLLuvar is not asking us to be devoid of desire, but only the ill-deeds borne about out of ill-thoughts causing avarice. Hence the whole chapter on covetousness!

SUrpanaka’s illicit desire on RAmA, similar desire of RAvANA on SIthA, vaLI’s covetous act against his brother, Kaurava’s act to take away what belongs to pAnDavas are all acts of covetousness.

“That who is shy of unfairness will not covet
Though benefits abound, it is a slanderous act”

தமிழிலே:
படுபயன் - ஒருவர் பொருளைக் பறித்துக் கொள்வதினால் வரும் பயனை
வெஃகிப் – முறையற்றதென அறிந்து விழைதலை
பழிப்படுவ – பழிக்கப்படும் செயலென்றறிந்து
செய்யார் - செய்யமாட்டார்
நடுவன்மை – ஒருவர் பொருள் பிறர்குரியது அல்ல என்கிற நடுநின்ற செயலின்மை கண்டு
நாணுபவர் - வெட்கப்படுபவர்

தமக்குரியதல்லாவற்றைக் கவர்தல் நடுநிலையற்ற செயல் என்றறிந்து அதற்கு வெட்கப்படுபவர், ஒருவர் பொருளை முறையற்று கவர்ந்தால், தமக்குறும் பயன் மிக்கதாயினும் முறையற்று கவர்ந்ததோடு மட்டுமல்லாது, அது பழிக்கப்படும் செயலென்றறிந்து, அச்செயலைச் செய்யமாட்டார்.

பிறர்குரிய பொருளைக் கவர்வதற்கும், நடுவு நிலைமைக்கும் என்ன தொடர்பு? வள்ளுவரைப் படிக்கும் போது, பல்வேறு குணநலன்களையும், குணக்குற்றங்களையும் அவற்றிற்கு இணையான செயல்களோடு பொருத்தி, செய்வதை வலியுறுத்துதலும், விலக்குதலை வலிந்துச் சொல்லியிருப்பதையும் காணலாம். குணநலன்கள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவையோ, அதேபோல்தான் குணக்குற்றங்களும்.  நடுவு நிலை நின்றவர், பிறர் பொருளை கவர்தல் பயனே தந்தாலும், அது ஒழுக்கக்கேடு என்பதையும் உணர்வதால், அதாவது ஒருபக்கமாக சிந்தியாமல், நல்லது, அல்லது இரண்டையும் ஆராய்ந்து, அச்செயலை செய்யவும், ஏன் நினைக்கவுமே நாணுவார்.

வெஃகல் என்பது மிக்கவிரும்பி கவர்தல், பேராசை கொண்டு வவ்வல் என்ற பொருளிலேயே இவ்வதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. வவ்வல், வவ்வுதல், அவ்வுதல், கவ்வுதல், இணுக்கம், பறித்தல் எல்லாமே தங்களுகுடமையில்லாத ஒன்றை தனக்குரியதாக்கிக் கொள்ள விழைதல்.  வள்ளுவர் ஆசையை விலக்கச் சொல்லவில்லை, பேராசையும் அதன்காரணமாக எவ்வழியிலேனும் தமக்குரியதாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்கிற தீக்குணத்தைக் கண்டிக்கத்தான் இவ்வதிகாரத்தைச் செய்துள்ளார்.

சூர்பனகை இராமனைக்கண்டு இச்சைகொண்டு கவர நினைத்ததும், இராவணன் சீதையழகிலே மதிமயங்கி அவளைக்கவர்ந்து சென்றதும், வாலி தன்னுடைய தம்பியின் மனையாளைக் கவர்ந்து சென்றதும், கௌரவர்கள் பாண்டவருக்குச் சொந்தமான நாட்டினை முறையற்ற வழியிலே கவர்ந்துகொண்டதும் வெஃகலின் நிகழ்வுகள்தான்.

இன்றெனது குறள்:
நடுவின்மைக் கஞ்சுபவர் வெஃகுதலை நாடார்
விடுக்குமது பாவத்தி லென்று.

naDuvinmaik kanjubavar veghudhalai nADAr
viDukkumadhu pAvAththi lenRu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...