11th
October, 2012
சிற்றின்பம்
வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம்
வேண்டு பவர்.
(குறள் 173: வெஃகாமை அதிகாரம்)
Transliteration:
siRRinbam
vegghi aRanalla seyyArE
maRRinbam
vENDubavar
siRRinbam – cheap pleasure by coveting others possessions
vegghi – desiring to covet others possessions
aRanalla – deeds that are not virtuous
seyyArE – will not indulge in them
maRRinbam – stable and rightful pleasures got though virtuous means
vENDubavar – those desire such righteous pleasures
The cheap, unsustaining, pleasures and the illicit
happiness are derived by coveting the possessions of others and their pain of
loss. People of virtuous thoughts and deeds do not entertain such thoughts and
they want the righteous pleasures and happiness that come through virtuous
means.
Revisit the verse in the chapter of virtue, discussed
earlier where vaLLuvar has said “aRaththAn varuvadhE inbam – maRRellAm puRaththa,
puguazhumila”, meaning what comes through virtuous means is true and long
lasting happiness.
“Those
will not indulge in, seeking cheap pleasures - ephemeral,
Not so virtuous deeds – who desire happiness
real and durable!”
தமிழிலே:
சிற்றின்பம் – பிறர்குரிய பொருளை பறித்துக்கொள்வதால்வரும் நிலையில்லா
அற்ப இன்பம்
வெஃகி – அதை கவரும் எண்ணத்தோடு விழைந்து
அறனல்ல – அறநெறிகளுக்குப் புறம்பான செயல்களை
செய்யாரே - செய்யமாட்டார்கள்
மற்றின்பம் – அறவழியால் வரும் நிலைத்திருக்கும் நல்லின்பங்களை
வேண்டுபவர்- விழைகின்றவர்.
பிறர்க்குரிய பொருள்களைக் கவரும் விழைவும் செயலும் அற்பமான,
நிலையில்லா, மற்றவர் வருத்தத்தில் வரும் இன்பமும், மகிழ்வும். அதுபோன்ற எண்ணமும்,
அதற்குரிய அறனெறி தவறிய செயல்களில் ஈடுபடுதலும், அறநெறிகளால் கிடைக்கின்ற முறையான
மகிழ்ச்சியினை மட்டுமே விரும்புகிற நல்ல சிந்தையர்களுக்கு கிடையாது.
அறன் வலியுறுத்தல் அதிகாரத்திலும், “அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம்
புறத்த, புகழுமில” என்று சொல்லியிருப்பார் வள்ளுவர்.
இன்றெனது
குறள்:
நிலையிலின்பம்
வேண்டி அறம்தவறி வெஃகார்
விலையிலின்பம்
வேண்டு பவர்
Nilayilinbam
vENDi aRamthavaRi vegghAr
Vilaiyilinbam
vENDu bavar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam