12th October, 2012
இலமென்று
வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில்
காட்சி யவர்.
(குறள் 174: வெஃகாமை அதிகாரம்)
Transliteration:
ilamenRu
vegghudhal seyyAr pulamvenRa
punmayil
kAtchi yavar
ilamenRu – being upset that
they have nothing (comparing with others that have)
vegghudhal – to covet others possessions
seyyAr - will not venture
pulamvenRa – those who have conquered their senses
punmayil - flawless
kAtchiyavar – learned who have clear understanding of what is right or
wrong.
A learned person with a good clarity of thinking and control of senses will not feel that he/she does not have what others have, and be driven by jealousy to covet others belongings.
Another thought while reading this verse, for that matter, reading many other verses from different chapters, that occur is that vaLLuvar has tried to link good virtues and acts discussed in other chapter subtly, perhaps to emphasize each one of them in the context of others. In this verse, he suggests that clarity of thinking is needed; which needs good learning; which brings control of senses; which averts the inferior feeling of being poor; which averts jealousy; which avoids eventually coveting. Often times we are left to wonder, why vaLLuvar repeats himself in so many verses, when there is only very minimal difference between one virtue and another. May be this is the reason!
“Wise with control of senses and clear thinking,
Will not covet, craving because of not having”
தமிழிலே:
இலமென்று – எம்மிடம் ஏதுமில்லாமல் ஏழையாயிருக்கிறோம் என்று வருந்தி,
பொறாமையில்
வெஃகுதல் – பிறருக்குரிய பொருளை கவர்ந்து கொள்ள விழைதலை
செய்யார் - செய்யமாட்டார்கள்
புலம்வென்ற – தம்புலன்களை வென்று, இது நன்மை தீமையென்றறிந்த
புன்மையில் - குற்றமில்லாத
காட்சியவர் – தெள்ளறிவு கொண்டோர்
தாம் வரியராய் இருக்கிறோமே என்று வருந்தி, அவ்வருத்தம்
கோபமாக, வசதியுடன் வாழ்பவர்கள் மீது பொறாமையாக மாறி, அவர்களுக்குரிய பொருளைக்
கவர்ந்து கொள்ள நினைக்கும் தீய செயலை, குற்றமில்லாத, தம்புலன்களை வென்று தெளிந்த
அறிவினைக்கொண்டவர்கள் செய்யமாட்டார்கள்.
இக்குறளினால் பலகருத்துக்களை ஒருங்கிணத்திருப்பதைப்
பார்க்கலாம். திருக்குறள் முழுவதுமே இவ்வாறு எப்படி நல்லகுணங்களும் செய்கைகளும்
ஒன்றோடொன்று இயைந்தவை என்று காட்டியிருப்பார் வள்ளுவர். தெள்ளறிவு கொண்டார்க்கே,
புலன்களைக் கட்டுப்படுத்துதல் இயலும் என்பதும், தெள்ளறிவுக்கு கல்வி
தேவையென்பதும், அவ்வாறு புலன்களை வென்றோர்க்கு, பிறர் மீது பொறாமையோ, வருத்தமோ,
அல்லது தாம் ஏழையராக இருக்கிறோம், தம்மிடம் ஏதுமில்லை என்கிற கழிவிரக்கமோ
ஏற்படாது. அவர்கள் வெஃகுதலை நினைக்கமாட்டார்கள்.
இன்றெனது
குறள்(கள்):
குற்றமில்லாத்
தெள்ளறிவோர், தம்புலம டக்கினார்
சற்றுமிலேம்
என்றுவெஃ கார்
kuRRamillAth
theLLaRivOr, thampulama DakkinAr,
saRRumilEm
enRuvegghAr
புலன்வென்று
குற்றமில் தெள்ளறிவு கொண்டோர்
இலமென்று
வவ்வாத வர்
pulanvenRu
kuRRamil thELLarivu koNdOr
ilanmenRu
vavvAdhavar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam