13th October, 2012
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
(குறள் 175: வெஃகாமை அதிகாரம்)
Transliteration:
Aggi aganRa aRivennAm yArmATTum
Veggi veRiya seyin
Aggi – knowing deeply
aganRa – and in wide variety of subjects
aRivennAm – what use is it to have learned so much?
yArmATTum – with everyone
Veggi – want to covet what is theirs
veRiya – as if uneducated, foolish (doing deeds hated
by others)
seyin – if does (the person who covets)
A person, though well and
widely read and deeply studied, what use is it, if the person acts like a
senseless one, coveting others possession?
Education should only
elevate a person in thoughts and deeds. It should not steer them in the wrong
path. That does not merit either the education or the educated. When we study
something deeply, it automatically paves way to learn varied subjects very
easily. There is a unified model of many fields of studies. When such highly
learned persons, act senselessly, it is but natural to have the question, what
use is for them?
The word “Aggudhal” mean
becoming narrow. There is saying “Plouging deep is better than wide” implying
the same. When he says, “agghi agandRa”, he shows how the knowledge expands for
someone. Deep study paves way for knowledge
in a wide variety of subjects. Even such people sometimes due to messed up
minds, can stray the virtuous path. So, he asks such people what use is to for
them to be that educated and act so lowly?
“What use is it for some in deep study and
widespread learning?
When indulgent
in senseless coveting out of detestable yearning?
தமிழிலே:
அஃகி - நுணுக்கமாகவும்
அகன்ற – பரந்த அறிவுவெளியிலும் கொண்ட
அறிவென்னாம் – அறிவு என்ன பயன் உடைத்ததாம்?
யார்மாட்டும் - யாரிடத்திலும்
வெஃகி – அவர்களின் பொருளை கவர்ந்துகொள்ள விழைந்து
வெறிய – அறிவின்மையான் (பிறர் வெறுக்கத்தக்க
செயல்களை)
செயின் - செய்வாராயின்
ஒருவர் பரந்துபட்ட
அறிவுவெளியில் நுண்ணிய அறிவோடு நூல்கள் பல கற்ற அறிவாளராக இருந்தும், அவருக்கு
அவ்வறிவு என்னபயன் உடையதாம், அவர் எல்லோரிடத்திலும் அறிவழிந்தவர் போல வெறுக்கத்தக்கச்
செயலான, அவர்களுக்கு உரிய பொருள்களை கவர்ந்துகொள்ளுதலைச் செய்வாரானால்?
கல்வி ஒருவனை மேம்படுத்த
வேண்டுமேயன்றி, அவர்களைத் தவறான வழியில் செலுத்தக்கூடாது. அது கல்விக்கும்
சிறப்பில்லை, கற்றவர்க்கும் சிறப்பில்லை. நுணுக்கமாக
ஒரு பொருளைப் படித்து அறிந்து கொண்டால், அதுவே அகன்ற பலதளங்களைச் சார்ந்த
அறிவுக்கும் வழி வகுக்கிறது. இப்படிப்
படிக்கிறவர்கள், படிக்கிறது இராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில் என்கிற அளவில்
செயல் படும்போது “இவர்களின் அறிவினால் ஆய பயன் என்ன?” என்ற கேள்வி எழத்தானே செய்யும்?
அஃகுதல் என்ற சொல்லுக்கு
குறுகுதல் என்ற பொருள், அல்குதல் என்ற சொல்லும் அதேதான். அகல உழுவதைவிட ஆழ உழுவதே
மேல் என்ற ஒரு வாக்கு உண்டு. படிக்கும் போது உணர்ந்து, ஆழ்ந்து படிப்பதுதான்
நுண்ணிய அறிவை வளர்க்கும். ஒருபொருளைப் பற்றி நுணுகிப்படித்து தெரிந்து
கொள்ளுவதில், மற்ற துறைகள் என்று கருதப்படும் பல திசைகளிலும் உள்ள பொருள்களும்
தானாகப் புலப்படும்.
இன்றெனது குறள்:
நுண்ணியதாய் நன்னுகர்ந்த நூலறிவேன்? யாருக்கும்
எண்ணார்போல் வவ்வல் செயின் (எண்ணார்போல் – அறிவு மயக்கதால்
எண்ணமற்றுப்போய்)
nuNNiyadhAi
nanugarndha nUlaRivEn? yArukkum
eNNArpOl vaval seyin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam