அக்டோபர் 14, 2012

குறளின் குரல் - 185


14th October, 2012

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
                  (குறள் 176:வெஃகாமை அதிகாரம்)

Transliteration:
aruLveggi ARRinkaN ninRAn poruLveggip
pollAdha sUzhak keDum

aruLveggi  -  to be filled with blessing in life
ARRinkaN – adhering to virtuous ways
ninRAn  - and live by that code
poruLveggip – If desires for other’s possessions
pollAdha - evil ways
sUzhak – will engulf him
keDum - and ruin him

The word “aruL” is a very unique word. It is used in the context of divine blessings or simply “grace” in most texts. “krupA” is an equivalent word. One who wants divine blessings and treads the path of virtuous life as a householder will lose the blessings from good people as well as ruin his own life, the moment a desire to covet others possession enters his mind. Parimelazhagar, interprets the word “aRam” here as ascetic path, though he does not say so explicitly.  When the thought of coveting enters, a house holder, who strays from the virtuous ways, loses his family life as well as the right desire to become ascetic. This interpretation seems a stretch.

Devoid of this interpreted meaning, a simple description would be:  When a person with the desire to have good blessings of life, lets the ill thought of coveting enter his mind, his virtuous life as well as the blessings he desires are lost. It suffices to interpret the word “aruL” as “blessings from good people”.

That who treads the virtuous path of life seeking divine grace,
When swerves to covet, is engulfed by darkness of disgrace.

தமிழிலே:
அருள்வெஃகி - வாழ்வில் அருள் நிறைந்திருக்க வேண்டி
ஆற்றின்கண் – அதற்குண்டான தரும நெறிகளில், வழிகளில்
நின்றான் – நின்று வாழ்பவன்
பொருள்வெஃகிப் – பிறர் பொருளுக்கு ஆசைபட்டு
பொல்லாத – தீய, குற்றமுள்ள வழி நெறிகளை
சூழக் – அவை தன்னை சூழுமாறு கருத, எண்ண
கெடும் – அதனால் கெடுவான்.

பரிமேலழகர் அருள் என்பதற்கு அருளாகிய அறம் விரும்பி அதற்கான வழியாம் இல்லறத்திலே ஒழுகுபவர் என்கிறார். அருளாகிய அறம் என்பதை துறவறம் என்று பொருள் கொள்ளுவதாக அவர் உரையே தெரிவிக்கிறது.  அப்படிப்பட்ட ஒருவர், பிறர் பொருளை விரும்பி அவற்றை அடையும் குற்ற வழிகளை நாட, கெடுவர் என்று பொருள் சொல்லப்படுகிறது. இல்லற நெறியே, அறிவு முதிர்வுக்கும், பின்னால் துறவறத்துக்கு அதனை “ஆறு” (வழி) என்கிறார் பரிமேலழகர்.  மேலும், அவ்வாறு இல்லற நன்னெறியில் ஒழுகுபவர் பிறர் பொருள் கவருதலை எண்ணுவாராயின், இல்லறமும் கெட்டு, அவரது அருள் விரும்பும் முறையான விருப்புமே கெட்டுவிடும் என்கிறார்.

கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளாமல், வாழ்வதற்கான அருள் வேண்டி பின்பற்ற தமக்குரிய அறநெறிகளை பின்பற்றும் ஒருவருக்கு, பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் தோன்றும் போதே, அவர் அறமும் கெட்டு, அருளும் இழக்கிறார். அருள் என்பதற்கு நல்லோரால் கிடைக்கூடிய நன்மைகளாகக் கொள்ளலாம்.

இன்றெனது குறள்:
அருள்வேண்டி நல்லறத்தை நாடுபவர் வவ்வின்
இருள்சூழ்ந்து இல்லாக்கெ டும்
aruLvENDi nallaRaththai nADubavar vavvin
iruLsUzhndhu illAkkeDum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...