15th October, 2012
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
(குறள் 177: வெஃகாமை அதிகாரம்)
Transliteration:
vENDaRka veghiyAm Akkam viLaivayin
mANDaR karidhAm payan
vENDaRka – Don’t desire
veghiyAm – coveting
others possessions
Akkam – his status, prosperity
viLaivayin – what comes out of it
mANDaR(kku) = be a respected outcome
aridhAm – Is impossible
payan – its used (to be read with viLaivayin)
By coveting others
possession, a person can never get prosperity or respectable use of what he took
away from others. Illgotten wealth will not give happiness while trying to
enjoy the use of such wealth. A person who has done wrong to someone, if there
is a fear of justice or repercussions of such an act in their hearts, the
attempts to enjoy will be ruined by the guilt trip of their own mind
Don’t desire prosperity by coveting others’
wealth
It has neither respectable use nor merit on
this earth.
தமிழிலே:
வேண்டற்க - விரும்பாதீர்
வெஃகியாம் – பிறர்பொருளைக் கவர்வதால்
ஆக்கம் – மேன்மை, உயர்வு
விளைவயின் – அதனால் விளயக்கூடிய
மாண்டற்கு – மாட்சிமை பொருந்தி இருத்தல்
அரிதாம் – என்பது அரிதாம் (இருக்காது என்பதையே
குறிக்கிறது)
பயன் – அதனுடைய பயனாக்கம் (விளைவையினோடு
கூட்டிப்படிக்க)
ஒருவர் வளத்தைக் கவர்ந்து
அதனால் தன் வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தை விரும்பக்கூடாது. அவ்வாறு
அடையக்கூடிய வளத்தின் பயனை நினைத்துப்பார்த்தால் (உள்ளின்), உவப்பைத் தரக்கூடிய
பயனைத் தராது.
முறையற்ற வழிகளில் பிறருடைய
பொருளைக் கவர்ந்து கொண்டவர்கள் தம்மனதில் மகிழ்வோடு கவர்ந்தபொருளினால் வரும்
பயனைத் துய்த்தல் என்பது மிகவும் கடினம். குற்றமுள்ளவர் நெஞ்சம்
குறுகுறுப்பதைப்போல, அவர்கள் வினை அவர்களையே சுட்டு, மகிழ்வென்று நினந்தது, மனதை
அரிக்கின்றதாகி விடும். உள்ள உறுத்தல் பயனை இல்லாமல் ஆக்கிவிடும். பெரும்பாலும் தன்னெஞ்சுக்கஞ்சுவாருக்கே இது
பொருந்தும்.
இன்றெனது குறள்:
கொள்ளாதே வவ்வலால் செல்வம் அதன்பயன்
உள்ளின் உவப்பில் உணர்
koLLAdhE vavalAl selvam adhan payan
uLLIn uvappil uNar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam