16th October, 2012
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
(குறள் 178: வெஃகாமை அதிகாரம்)
Transliteration:
aggAmai selvaththiRku yAdhenin veggAmai
vENDum piRankaip poruL.
aggAmai - Not diminishing in
selvaththiRku - ones’ wealth
yAdhenin – what is it? (how does it happen?)
veggAmai vENDum - when the person does not desire and covet
piRankaip poruL - others wealth
If our wealth should not
diminish or become small, we must not covet other’s belonging driven by greed! This is
the thought of todays KuraL.
Searching for information,
especially using the enormous ocean of information – web, can be pleasurable as
well as painful. Today it has been pleasurable.
Keyword search opened up many avenues and multiple thought streams – one
of them was indeed experiential and illuminating. Chandra Subramaniam’s website
“http://movingmoon.com/node/24” is
where he collects all his literary creations from formal poetry to little essays
and stories. Like many others have done, he has also written commentary for
KuraL, in his own style of a class of formal poetry known as “viruththap
pA”. It is not complete only up to 29
chapters so far. No transiliteration can bring the beauty of reading it in the
native language. I definitely encourage people to visit the site and read his
works. (I feel so confident that the title of my blogsite “thamiz ini mella vaLarum” is an absolute truth).
Most of the keyword search
on this topic leads to “stealing” in literary references. Though, both are basically taking away
somebodys’ belongings either against their will or displeasure or completely
unknown to them as to who took away their possessions. Covetting is done as an
act of might, pettiness or slyness and behind the back operation to known
people because of selfish needs and greed. Stealing is done mostly by those who
don’t have, from people that have – not driven by the greed. So this chapter
focuses more on greed driven coveting.
“If ones own wealth must not diminish
Be
devoid of coveting, an act of selfish”
தமிழிலே:
அஃகாமை – குறுகாமை, குறையாமை
செல்வத்திற்கு – ஒருவருடைய் செல்வத்திற்கு
யாதெனின் - எதுவென்றால்
வெஃகாமை வேண்டும் – பேராசையினால் கவர்ந்துகொள்ளாமையாகிய
குணநலம் வேண்டும்
பிறன்கைப் பொருள் – பிறருக்கு உரித்தான
செல்வத்தினை.
ஒருவருக்கு அவருடைய செல்வம்
குன்றாது, குறுகாது இருக்கவேண்டுமானால், அவர் பிறருக்குரிய பொருளினை தன்
பேராசையின் வழிசென்று கவர்ந்துகொள்ளாத குணநலம் உடையராதல் வேண்டும். இதுதான்,
இன்றைய குறள் சொல்லும் கருத்து.
இணையதளத் தேடல் இனியவும்
தரும், இன்னாவும் செய்யும். இன்று இனிதே தந்தது.
இக்குறளுக்கான பிறர் கருத்து அறியும் விழைவில் செய்த திறவுச்சொல் தேடலில்,
திறந்த பலவெளிகளில் ஒருவெளி, வெளிச்ச ஒளியானது. சந்த்ரா சுப்பிரமணியன் என்பவரது
இணையதளம் (http://movingmoon.com/node/24), அவருடைய தமிழ்
படைப்புகளின் சேமிப்பிடம். அவர் இருபத்தொன்பதுஅதிகாரங்கள் வரை திருக்குறளுக்கு விருத்தப்பாக்களாக
விளக்கச் செய்யுள்கள் செய்துள்ளார். படிக்க மிகவும் அருமை. (மற்ற படைப்புகளையும்
படிக்கவேண்டும் – என்னுடைய இணையதள தலைப்பு முற்றிலும் உண்மை). இன்றைய குறளுக்கான அவருடைய
விருத்த விளக்கம் இதோ:
வாழ்வெலாம் சேர்த்த செல்வ
வளமெலாம் குறையா தென்றும்
தாழ்வுறா திருக்கச் செய்யும்
தலைமையாம் வழியே தென்றால்
சூழ்ந்துளார்க் கையீன் ஆக்கம்
சுரண்டியே தனக்காய்ச் சேர்க்கும்
கீழ்நிலை எண்ணம் இன்றிக்
கேடுறா திருத்தல் ஒன்றே
பிறன் பொருள் கவருதல்,
பறித்தல் என்ற சொல்லின் அடிப்படையிலான தேடலில், இலக்கியங்கள் பெரும்பாலும் கள்ளாமை
அதிகாரத்திலேயே கொண்டு சேர்க்கின்றன. கள்ளாமையும் பிறர்பொருள் கவராமைதான்.
பின்னால் வரப்போகும் கள்ளாமை அதிகாரத்துக்கும் வெஃகாமை அதிகாரத்தும் என்ன வேறுபாடு
என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கவருதல், பறித்தல் ஒருவர் அறிய அவருக்கு
உடைத்தான பொருளை பேராசையின்காரணமாக வலிந்து எடுத்துக்கொள்வதாகும். கள்ளன்மை
அக்காரணமில்லாது, வறுமையினாலும், தனகில்லாமையினாலும்தான் பெரும்பாலும் நிகழ்வது;
பெரும்பாலும் களவு கொடுத்தவர்களுக்கு யாரிடம் களவு கொடுத்தோம் என்றுகூட
பலசமயங்களில் தெரியாது. பெரும்பாலும் களவு செய்பவர்களுக்கும் பேராசை ஒரு காரணமாக
இராது.
இன்றெனது குறள்:
கவரல் பிறர்பொருள் செய்யாமை செல்வம்
எவர்க்கும் குறுகா நலன்
Kavaral
piRarporuL seyyAmai selvam
Evarkkum kuRugA nalan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam