ஜூலை 12, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -93

परे जननि पार्वति प्रणतपालिनि प्रातिभ-
प्रदात्रि परमेश्वरि त्रिजगदाश्रिते शाश्वते
त्रियम्बककुटुम्बिनि त्रिपदसङ्गिनि त्रीक्षणे
त्रिशक्तिमयि वीक्षणं मयि निधेहि कामाक्षि ते ९३॥

பரே ஜனனி பார்வதி ப்ரணதபாலினி ப்ராதிப-
ப்ரதா³த்ரி பரமேஶ்வரி த்ரிஜக³தா³ஶ்ரிதே ஶாஶ்வதே
த்ரியம்ப³க குடும்பி³னி த்ரிபத³ஸங்கி³னி த்ரீக்ஷணே
த்ரிஶக்திமயி வீக்ஷணம் மயி நிதேஹி காமாக்ஷி தே 93

உயர்வே! தாயே பார்வதி! வணங்குபவரை காப்பவளே! தக்க நேரத்தே ஞானம் தருபவளே! பரமேஸ்வரியே! மூவுலகும் விரும்புபவளே! நித்தியளே! முக்கண்ணன் மனையே! முப்பதங்களைக் கூடியவளே (கர்ம, ஞான, பக்தி), முக்கண்ணாளே! முச்சக்தியின் வடிவே! காமாக்ஷி உன் பார்வை என்மேல் பதிக்கநீயே!

உயர்தாயே பார்வதி! உன்னைத் துதிப்போரை ஓம்புவைச
மயத்தே அறிவீயும் மாபர மேட்டி! வரைப்புமூன்றும்
வயவுறு சாசு வதிமுக்கண் ணர்க்கில்கா மாட்சிபார்வை
முயலென்மேல் முக்கண்ணீ! முச்சக்தி! கூடிய முப்பதமே!

ஓம்புதல்-காத்தல்; சமயத்தே-தக்க நேரத்தில்; பரமேட்டி-பரமேஸ்வரி; வரைப்பு-உலகம்; வயவு-விரும்பு; சாசுவதி-நித்தியள்; முயல்-செய்க;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

உயர் தாயே! பார்வதி! உன்னைத் துதிப்போரை ஓம்புவை சமயத்தே அறிவீயும் மாபரமேட்டி! வரைப்பு மூன்றும் வயவுறு சாசுவதி! முக்கண்ணர்க்கு இல் காமாட்சி! பார்வை முயல் என்மேல் முக்கண்ணீ! முச்சக்தி! கூடிய முப்பதமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...