अशोध्यमचलोद्भवं हृदयनन्दनं देहिनाम्
अनर्घमधिकाञ्चि तत्किमपि रत्नमुद्द्योतते ।
अनेन समलंकृता जयति शङ्कराङ्कस्थली
कदास्य मम मानसं व्रजति पेटिकाविभ्रमम् ॥ ८९॥
அஶோத்⁴ய மசலோத்³ப⁴வம் ஹ்ருʼத³ய நந்த³னம் தே³ஹிநாம்
அனர்க⁴மதி⁴காஞ்சி தத்கிமபி ரத்ன முத்³த்³யோததே ।
அனேன ஸமலம்க்ருʼதா ஜயதி ஶங்கராங்க ஸ்த²லீ
கதா³ஸ்ய மம மானஸம் வ்ரஜதி பேடிகா விப்⁴ரமம் ॥ 89॥
மலையில் உதித்ததும், தூய்மை செய்யத் தேவையில்லாததும், உயிரினத்தின் உள்ளத்தை மகிழ்விப்பதும், விலைமதிப்பில்லாததுமான ஒரு இரத்தினம்
காஞ்சியிலே விளங்குகிறது. அது சங்கரரின் மடியினை அலங்கரிக்கிறது. என் மனம் அதற்கான
பெட்டகமாக என்று நிலை பெறும்?
மலையிலு தித்ததும் வான்மைவேண் டாததும் மாநிலத்தில்
நிலையுயிர் நெஞ்சம்
நிறைசெய்து, காஞ்சியில் நின்றதுமாம்
விலையில் கழுமணி, வீற்றரன் ஊருமேல்
வேனிலாகும்!
நிலைபேழை யாகவென் நெஞ்சதற் கென்றோ
நிறைவதுவே!
வான்மை-தூய்மை;
நிறை-மகிழ்சி; கழுமணி-தூய்மையான இரத்தினம்; ஊரு-தொடை; வேனில்-அலங்காரம்; பேழை-பெட்டி;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மலையில் உதித்ததும் வான்மை வேண்டாததும் மாநிலத்தில், நிலை உயிர் நெஞ்சம் நிறைசெய்து, காஞ்சியில்
நின்றதுமாம், விலையில் கழுமணி வீற்று அரன்
ஊருமேல் வேனிலாகும்! நிலை பேழையாகவென் நெஞ்சதற் கென்றோ நிறைவதுவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam