परामृतझरीप्लुता जयति नित्यमन्तश्चरी
भुवामपि बहिश्चरी परमसंविदेकात्मिका ।
महद्भिरपरोक्षिता सततमेव काञ्चीपुरे
ममान्वहमहंमतिर्मनसि कापि माहेश्वरी ॥ ९०॥
பராம்ருʼத ஜரீப்லுதா ஜயதி நித்யமந்தஶ்சரீ
பு⁴வாமபி ப³ஹிஶ்சரீ பரமஸம்விதே³காத்மிகா ।
மஹத்³பி⁴ரபரோக்ஷிதா ஸததமேவ காஞ்சீபுரே
மமான்வஹ மஹம்மதிர்மனஸி காபி மாஹேஶ்வரீ ॥ 90॥
அமுதப்
பெருக்கில் நனைபவளும், அனைத்துலகின் அகத்தில் இருப்பவளும் புறத்தே பரவியவளும், பேருணர்வாக
ஒரே நிலையில் இருப்பவளும், காஞ்சியிலே, மகான்களால் தினமும் தரிசிக்கப்பட்டவளும், மகேசனிடத்திருந்து
வேறிலாப் பொருளுமான ஒருவள் என்மனத்தே தினமும் விளங்குகிறாள்..
மதுத்தாரை மஞ்சன மாடும், புறத்திலும்
மாநிலத்தோர்
இதயத்தும், ஆர்த்து இருக்கும்,
நிலைகொள் இருவுணர்வாய்
வதிந்திடும், என்றும் மகனீயர்
காஞ்சியில் வந்துகாணும்,
பதியீசன் பங்குறைப் பாங்குளத்
தென்றும் பதிந்ததுவே
மது-அமுதம்;
தாரை-பெருக்கு; மஞ்சனமாட்டு-நீராட்டு; ஆர்த்து-நிறைந்து; இருவுணர்வு-பேருணர்வு; வதிந்திடு-தங்கிடு;
மகனீயர்-மகான்கள்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மதுத்
தாரை மஞ்சனமாடும், புறத்திலும், மாநிலத்தோர் இதயத்தும், ஆர்த்து இருக்கும், நிலைகொள்
இருவுணர்வாய் வதிந்திடும், என்றும் மகனீயர் காஞ்சியில் வந்து காணும், பதியீசன் பங்குறைப்
பாங்கு உளத்தென்றும் பதிந்ததுவே!
அய்யா உங்கள் எண் கிடைக்குமா?
பதிலளிநீக்குஐயா நான் அமெரிக்காவில், கலிஃபோர்னியாவில் வசிக்கிறேன்.. என்னுடைய கைப்பேசி எண்: 408 722 1671
நீக்கு