सुराः परिजना वपुर्मनसिजाय वैरायते
त्रिविष्टपनितम्बिनीकुचतटी च केलीगिरिः ।
गिरः सुरभयो वयस्तरुणिमा दरिद्रस्य वा
कटाक्षसरणौ क्षणं निपतितस्य कामाक्षि ते ॥ ८६॥
ஸுரா: பரிஜனா வபுர் மனஸிஜாய வைராயதே
த்ரிவிஷ்டபநிதம்பி³னீ குசதடீ ச கேலீகி³ரி: ।
கி³ர: ஸுரப⁴யோ வயஸ் தருணிமா த³ரித்³ரஸ்ய வா
கடாக்ஷஸரணௌ க்ஷணம் நிபதிதஸ்ய காமாக்ஷி தே ॥ 86॥
காமாக்ஷி தேவி! உன்னுடைய கடைக்கண்
பாதையில் கண நேரமே விழுந்தவன் பரம ஏழையாயினும், (அவனுக்கு)
தேவர்கள் பணியாட்கள்; (அவன்) உடல் மன்மதனுக்கு வைரியாகும், தேவப்பெண்களின் தனங்கள்
விளையாடும் சிறுமலையுமாகும்; (அவன்) வாக்குகள் மதுரமாம்; (அவன்) வயதும் வாலிபமே!
கணநேர மும்முன் கடைவிழிப் பாதையின் கண்விழுந்தால்,
சுணங்கு வரியர்க்கு தொல்லையர்
வேலையாள்; தூலமும்பூங்
கணையர்க்கு வைரி, கரடுவான் பெண்டிர்கொங் கைகளுக்கு;
மணக்குமின் வாக்கு; வயததும், காமாட்சி! வாலிபமே!
சுணங்கு
- மெலிவடைந்த; வரியர்-ஏழைகள்; தொல்லையர்-தேவர்கள்; தூலம் - உடல்; பூங்கணையர்-மன்மதன்;
கரடு-சிறுகுன்று; வான்பெண்டிர்-தேவமகளிர்; மணக்கும் இன்-மதுரம்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கண நேரமும்
உன் கடைவிழிப் பாதையின்கண் விழுந்தால், சுணங்கு வரியர்க்கு தொல்லையர் வேலையாள்; தூலமும், பூங்கணையர்க்கு வைரி, கரடு, வான்பெண்டிர் கொங்கைகளுக்கு; மணக்கும் இன் வாக்கு; வயததும், காமாட்சி! வாலிபமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam