धनेन न रमामहे खलजनान्न सेवामहे
न चापलमयामहे भवभयान्न दूयामहे ।
स्थिरां तनुमहेतरां मनसि किं च काञ्चीरत-
स्मरान्तककुटुम्बिनीचरणपल्लवोपासनाम् ॥ ८५॥
த⁴னேன ந ரமாமஹே க²லஜனான் ந ஸேவாமஹே
ந சாபலமயாமஹே ப⁴வப⁴யான் ந தூ³யாமஹே ।
ஸ்தி²ராம் தனுமஹே தராம் மனஸி கிம் ச காஞ்சீரத-
ஸ்மராந்தக குடும்பி³னீ சரணபல்லவோபாஸநாம் ॥ 85॥
செல்வத்தில்
(மயங்கி) )மகிழமாட்டோம்; தீயோருக்குப் பணி புரியோம்; மனத்தில் சலனமடையோம்; உலகவாழ்வின்
துயரால் வாடோம்; ஆனால் காஞ்சியை விழையும் மன்மத வைரியின் மனைவியின் திருவடிகளை வழிபடுதலை
உள்ளத்துள் திடமாகக் கொள்ளுவோம்.
செல்வச் செருக்கிலோம்; சேவைகள்
செய்திலோம் தீயவர்க்கு;
அல்லல் மனத்துறோம்; அண்டவாழ் வெப்பில் அடுதலுறோம்;
வில்லிப் பகைவர் விழைகின்ற,
காஞ்சியில் வீங்குமொன்றின்
வல்சீர் கழல்களை வல்ல துதிசெய்வோம்
வைத்துளத்தே!
செருக்கு-மகிழ்தல்;
அல்லல்-சஞ்சலம்; வெப்பு-துயர்; அடுதல்-வேகுதல்; வில்லி-மன்மதன்; வீங்கு-நிறைந்த; வல்-வலிய;
வல்ல-திடமான
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
செல்வச்
செருக்கிலோம்; சேவைகள் செய்திலோம் தீயவர்க்கு; அல்லல் மனத்துறோம்; அண்டவாழ் வெப்பில்
அடுதலுறோம்; வில்லிப் பகைவர் விழைகின்ற, காஞ்சியில் வீங்குமொன்றின் வல்சீர் கழல்களை
வல்ல துதிசெய்வோம் வைத்துளத்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam