कवीन्द्रहृदयेचरी परिगृहीतकाञ्चीपुरी
निरूढकरुणाझरी निखिललोकरक्षाकरी ।
मनःपथदवीयसी मदनशासनप्रेयसी
महागुणगरीयसी मम दृशोऽस्तु नेदीयसी ॥ ८४॥
கவீந்த்³ர ஹ்ருʼத³யே சரீ பரிக்³ருʼஹீத காஞ்சீபுரீ
நிரூட⁴ கருணாசரீ நிகி²ல லோக ரக்ஷாகரீ ।
மன: பத²த³வீயஸீ மத³ன ஶாஸன ப்ரேயஸீ
மஹாகு³ண க³ரீயஸீ மம த்³ருʼஶோऽஸ்து நேதீ³யஸீ ॥ 84॥
கவி வல்லோர்
இதயங்களில் உலவுபவளும், காஞ்சிபுரியைத் தங்குமிடமாகக் கொண்டவளும், நிறைந்த கருணை வெள்ளமுள்ளவளும்,
அனைத்து உலகங்களையும் காப்பவளும், மனதிற்கு எட்டாதவளும், காமாரியின் காதலியும், உத்தம
குணங்களால் பெருமையுற்றவளுமான தேவி என்னுடைய கண்களுக்கு எப்போது நெருங்கியவளாவாளோ?
கவிவல்லோர் உள்ளங் களிளே உலவுவள்;
காஞ்சியினை
உவப்பள்; நிறையன்பின் ஓதம் உடைத்தவள்;
ஓம்பிடுவாள்
புவியெலாம்; உள்ளம் புகவெட்டாள்;
காமன் புடைக்கினியள்;
பவித்திரப் பண்புடை பாமையென்
பார்வைக்குப் பக்கமென்றே?
ஓதம்-வெள்ளம்;
ஓம்பு-காத்தல்; புடை-பகை; பவித்திரம்-உத்தம்; பாமை-ஒளிமிக்கவள்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கவி வல்லோர்
உள்ளங்களிளே உலவுவள்; காஞ்சியினை உவப்பள்; நிறை அன்பின் ஓதம் உடைத்தவள்; ஓம்பிடுவாள்
புவியெலாம்; உள்ளம் புக எட்டாள்; காமன் புடைக்கு இனியள்; பவித்திரப் பண்புடை பாமை என்
பார்வைக்குப் பக்கமென்றே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam