ஜூலை 02, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -83

घन्सतनतटस्फुटस्फुरितकञ्चुलीचञ्चली-
कृतत्रिपुरशासना सुजनशीलितोपासना
दृशोः सरणिमश्नुते मम कदा नु काञ्चीपुरे
परा परमयोगिनां ह्रुदय​ चित्कुला पुष्कला ८३॥

ஸ்தனஸ் தடஸ்பு²ட ஸ்பு²ரித கஞ்சுலீ சஞ்சலீ-
க்ருʼதத்ரிபுர ஶாஸனா ஸுஜன ஶீலிதோ பாஸனா
த்³ருʼஶோ: ஸரணிமஶ்னுதே மம கதா³ நு காஞ்சீபுரே
பரா பரமயோகி³நாம் ஹ்ருதய சித்குலா புஷ்கலா 83

தனது கடின தனங்களை அழகு செய்யும் கஞ்சுகத்தின் சோபையில் சலனமுறும் திரிபுராரியின் மனத்தை வசப்படுத்துபவளும், உத்தம யோகிகளால் தியானிக்கப்படும், சின்மய மூர்த்தியாம் காமாக்ஷி தேவி, காஞ்சியிலே என் கண்களுக்கு எப்போது புலப்படுவாளோ?

கடினத் தனங்களைக் காரிகை செய்திடு கஞ்சுகத்தின்
வடிவில் சலன வயர்தி ரிபுராரி மானசியாள்!
அடிசேர் அதியோக ஆன்மிகர் ஆத்துமம் ஆன்றிடுசின்
வடிவினள், காஞ்சியில் வந்தென் விழிகட்கு வாய்பதென்றே!

வடிவு-அழகு,உருவு; காரிகை-அழகு; கஞ்சுகம்-மார்புக் கச்சை; சலனம்-சஞ்சலம்; வயம்-வசம்; திரிபுராரி-முப்புரம் எரித்தவன்; மானசி-மனத்துள்ளவள்; அதியோகர்-பரமயோகியர்; ஆன்றிடு-சிறந்த.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கடினத் தனங்களைக் காரிகை செய்திடு கஞ்சுகத்தின் வடிவில் சலனவயர் திரிபுராரி மானசியாள், அடிசேர் அதியோக ஆன்மிகர் ஆத்துமம் ஆன்றிடு சின்வடிவினள், காஞ்சியில் வந்தென் விழிகட்கு வாய்பதென்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...