त्रियम्बककुटुम्बिनीं त्रिपुरसुन्दरीमिन्दिरां
पुलिन्दपतिसुन्दरीं त्रिपुरभैरवीं भारतीम् ।
मतङ्गकुलनायिकां महिषमर्दनीं मातृकां
भणन्ति विबुधोत्तमा विहृतिमेव कामाक्षि ते ॥ ८०॥
த்ரியம்ப³க குடும்பி³னீம் த்ரிபுரஸுந்த³ரீமிந்தி³ராம்
புலிந்த³பதி ஸுந்த³ரீம் த்ரிபுர பை⁴ரவீம் பா⁴ரதீம் ।
மதங்க³குல நாயிகாம் மஹிஷ மர்த³னீம் மாத்ருʼகாம்
ப⁴ணந்தி விபு³தோ⁴த்தமா விஹ்ருʼதிமேவ காமாக்ஷி தே ॥ 80॥
காமாக்ஷி!
உன்றன் விளையாடல்கள் அமைந்த பல்வேறு தோற்றங்களை, முக்கண்ணன் மனைவி, திரிபுர அழகி, இலக்குமி,
வேடராசன் மனைவி கிராதி, திரிபுர பைரவி, பாரதி, மாதங்கி, மகிடனைக் கொன்றவள், மாத்ருகா
என்றும் அறிஞர்கள் வருணிக்கிறார்கள்.
முக்கண்ணன் காந்தையள், முப்புர
சுந்தரி, முப்புரத்து
துக்கை, கிராதி, துளவன்மார்
தூயோள், சுருதிமாதா,
மக்கி மகிடன் மரித்தவள், மாதங்கி,
மாத்ருகாவாய்
மிக்காய்ந்தோர் உன்னை வியந்துகா
மாட்சி விதந்திடுமே!
காந்தை-பிரியமானவள்;
துக்கை-துர்கை; கிராதி-வேடன் மனைவி; துளவன்-திருமால்; தூயோள்-இலக்குமி; சுருதிமாதா-பாரதி;
மக்கி-அழித்து; மரித்தவள்-இறக்கச்செய்தவள்; மிக்காய்ந்தோர்-அறிஞர்; விதந்து-சிறப்பாய்
எடுத்துச் சொல்லுதல்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
முக்கண்ணன்
காந்தையள், முப்புர சுந்தரி, முப்புரத்து துக்கை, கிராதி, துளவன்மார் தூயோள், சுருதிமாதா,
மக்கி மகிடன் மரித்தவள், மாதங்கி, மாத்ருகாவாய், மிக்காய்ந்தோர் உன்னை வியந்து காமாட்சி
விதந்திடுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam