दन्तादन्तिप्रकटनकरी दन्तिभिर्मन्दयानैः
मन्दाराणां मदपरिणतिं मथ्नती मन्दहासैः ।
अङ्कूराभ्यां मनसिजतरोरङ्कितोराः कुचाभ्या-
मन्तःकाञ्चि स्फुरति जगतामादिमा कापि माता ॥ ७९॥
த³ந்தா த³ந்தி ப்ரகடனகரீ த³ந்திபி⁴ர் மந்த³யானை:
மந்தா³ராணாம் மத³பரிணதிம் மத்²னதீ மந்த³ஹாஸை: ।
அங்கூராப்⁴யாம் மனஸிஜதரோரங்கிதோரா: குசாப்⁴யா-
மந்த:காஞ்சி ஸ்பு²ரதி ஜக³தா மாதி³மா காபி மாதா ॥ 79॥
தனது மென்னடையினால், தந்த்தத்திற்கு தந்தம் என்று யானைகளோடு போர் புரிந்தவளும், தனது மென்னகையினால் மந்தாரங்களின்
கருவத்தைக் குலைப்பவளும், மன்மத விருட்சத்தின் முளைபோன்றதாம் தனங்களால் சோபிப்பவளுமான,
ஆதி மாதாவுமான ஒருத்தி, காஞ்சி நகரில் விளங்குகிறாள்.
மென்னடை யில்தந்த வேழங்கட் கீடாய்
மிருதமிடும்;
மென்னகை, மந்தாரம் மீதேகும் தற்கினை
வேரறுக்கும்;
மன்மத மூல மதுர தனங்களால் வாமமுறும்,
அன்னையள் ஆதி அமைந்தனள் காஞ்சியில்
ஆண்டிருந்தே!
மிருதம்-போர்;
தற்கு-செருக்கு; மூலம்-மரம்; மதுரம்-முளை; வாமம்-சோபை,ஒளி.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மென்னடை யில்தந்த
வேழங்கட் கீடாய் மிருதமிடும்; மென்னகை,
மந்தாரம் மீதேகும் தற்கினை வேரறுக்கும்; மன்மத மூல மதுர தனங்களால் வாமமுறும், அன்னையள்
ஆதி அமைந்தனள் காஞ்சியில் ஆண்டிருந்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam