ताम्राम्भोजं जलदनिकटे तत्र बन्धूकपुष्पं
तस्मिन्मल्लीकुसुमसुषमां तत्र वीणानिनादम् ।
व्यावृन्वाना सुकृतलहरी कापि काञ्चिनगर्याम्
ऐशानी सा कलयतितरामैन्द्रजालं विलासम् ॥ ६९॥
தாம்ராம்போ⁴ஜம் ஜலத³னிகடே தத்ர ப³ந்தூ⁴கபுஷ்பம்
தஸ்மின்மல்லீகுஸுமஸுஷமாம் தத்ர வீணானினாத³ம் ।
வ்யாவ்ருʼன்வானா ஸுக்ருʼதலஹரீ காபி காஞ்சினக³ர்யாம்
ஐஶானீ ஸா கலயதிதராமைந்த்³ரஜாலம் விலாஸம் ॥ 69॥
மேகத்தின்
அருகில், செந்தாமரைப் பூவையும், அந்த செந்தாமரையில், செம்பரத்தம் பூவையும், அதனூடே
மல்லிகைப் பூவின் காந்தியையும், அதில் வீணையின் இன்னிசையும் விளக்கிக் காட்டுபவளும்,
ஈசனின் புண்ணிய வரிசைகளுமான ஒருவள் காஞ்சீ நகரத்தில் இந்திரஜாலமே போலே விளங்குகிறாள்.
இப்பாடலில்
கூந்தலுக்கும் மேகத்தையும், முகத்துக்கு செந்தாமரைப் பூவையும், இதழ்களுக்கு செம்பரத்தம்
பூவையும், புன்னகைக்கு மல்லிகைப் பூவின் ஒளியையும், இனிய குரலுக்கு வீணை இசையையும்
உருவமித்து உள்ளார் மூக கவி. இவையெல்லாம் காமாக்ஷியின் இந்திரஜால வித்தை போலுள்ளதாம்
குழல்மேகம், செம்முகக் கோகயம் கைப்பக்கம், கோவைபோலி
தழதுவோ செம்பரத் தை,யதில் மல்லிகை தைத்தநகை
பழகின்சொல் வீணையின் பண்ணீசன் புண்ணியப் பத்தியன்றோ
அழகிந் திரஜாலம் ஆம்போல காஞ்சியில் ஆன்றதன்றே!
கோகயம்-தாமரை;
கைப்பக்கம்-அருகில்; இதழ்-உதடு; பத்தி-வரிசை; ஆன்றது-சிறந்தது.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
குழல்மேகம், செம்முகக் கோகயம் கைப்பக்கம்,
கோவை போல் இதழதுவோ செம்பரத்தை, அதில் மல்லிகை தைத்த நகை
பழகு இன் சொல் வீணையின் பண்; ஈசன் புண்ணியப் பத்தியன்றோ, அழகு இந்திரஜாலம் ஆம்போல காஞ்சியில் ஆன்றதன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam