कालाम्भोदे सितरुचि दलं कैतकं दर्शयन्ती
मध्येसौदामिनि मधुलिहां मालिकां राजयन्ती ।
हंसारावं विकचकमले मञ्जुमुल्लासयन्ती
कम्पातीरे विलसति नवा कापि कारुण्यलक्ष्मीः ॥ ६७॥
காலாம்போ⁴தே³ ஸிதருசி த³லம் கைதகம் த³ர்ஶயந்தீ
மத்⁴யே ஸௌதா³மினி மது⁴லிஹாம் மாலிகாம் ராஜயந்தீ ।
ஹம்ஸாராவம் விகசகமலே மஞ்ஜுமுல்லாஸயந்தீ
கம்பாதீரே விலஸதி நவா காபி காருண்ய லக்ஷ்மீ: ॥ 67॥
கருத்த
மேகம்போல் கூந்தலில், வெண்காந்தியுள்ள தாழம்பூ மடலைக் காட்டுபவளும், மின்னல் கொடியிடையே
வண்டினத்து வரிசையை விளங்கச் செய்பவளும், மலர்ந்த
பங்கயத்தில் அன்னத்தின் ஒலியை உல்லாசமாக எழுப்புபவளுமாம்
ஒரு கருணைத் திரு (காமாக்ஷி) கம்பைத் தீரத்தில் விளங்குகிறாள்.
கருமேகத் தில்வெண்மைக் காழ்தாழம் கோத்தையைக் காட்டுகின்ற,
கருவண்டுக் கோவை களைமின்னல் வல்லிபால் காட்டுகின்ற,
சிருக மலர்வினில் தேவப்புள் ளாரவத் தில்மகிழும்,
கருணைத் திருவொன்று கம்பைக் கரையினில் காண்கிறதே!
காழ்-காந்தி,பொலிவு;
தாழம்-தாழம்பூ; கோத்தை-மடல்; கோவை-வரிசை; வல்லி-கொடி; சிருக-தாமரை; தேவப்புள்-அன்னம்;
ஆரவம்-ஒலி; திரு-லக்ஷ்மி.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கரு மேகத்தில்
வெண்மைக் காழ் தாழம் கோத்தையைக் காட்டுகின்ற, கருவண்டுக் கோவைகளை மின்னல்வல்லிபால் காட்டுகின்ற, சிருக மலர்வினில் தேவப்புள் ஆரவத்தில் மகிழும், கருணைத் திருவொன்று கம்பைக் கரையினில் காண்கிறதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam