सेतुर्मातर्मरतकमयो भक्तिभाजां भवाब्धौ
लीलालोला कुवलयमयी मान्मथी वैजयन्ती ।
काञ्चीभूषा पशुपतिदृशां कापि कालाञ्जनाली
मत्कं दुःखं शिथिलयतु ते मञ्जुलापाङ्गमाला ॥ ६५॥
ஸேதுர்மாதர் மரதகமயோ ப⁴க்திபா⁴ஜாம் ப⁴வாப்³தௌ⁴
லீலா லோலா குவலய மயீ மான்மதீ² வைஜயந்தீ ।
காஞ்சீபூ⁴ஷா பஶுபதி த்³ருʼஶாம் காபி காலாஞ்ஜனாலீ
மத்கம் து:³க²ம் ஶிதி²லயது தே மஞ்ஜுலா பாங்க³மாலா ॥ 65॥
தாயே! பக்தர்தம்
வாழ்க்கைக் கடலுக்கு, மரகதக் கற்களால் ஏற்பட்ட பாலமானவளும், கேளியில் மனமுள்ளவளும்
நீலோத்பல மலரானவளும், மன்மதனுடைய வெற்றிக் கொடியும், காஞ்சிக்கணியும், பசுபதியின் கண்களுக்கு
அழகளிக்கும் அஞ்சன மையும், இனிய கடைக்கண் பார்வையாம் மாலையுமானாளே! என்னுடைய துக்கத்தை போக்கு நீயே!
பத்தர் பவப்பவ்வப் பச்சைக்கல் பாலமும்,
பாவமதில்
சித்தமும், நெய்தல் திருப்பூவும்,
மாரன் திருக்கொடியும்
அத்தன் விழிகளில் அஞ்சன மும்காஞ்சி
ஆரமுமுன்
சித்திரக் கண்கடை சீர்மாலை என்கேதம்
தீர்க்க!தாயே!
பத்தர்-பக்தர்;
பவம்-சம்சாரம்; பவ்வம்-கடல்; பச்சைக்கல்-மரகதம்; பாவம்-விளையாட்டு; சித்தம்-மனம்; நெய்தல்-கருங்குவளைல்
திருக்கொடி-வெற்றிக்கொடி; அத்தன்-சிவன், பசுபதி; அஞ்சனம்-விழி மை; ஆரம்-அணிகலன்; சித்திரம்-அழகு;
கேதம்-துக்கம்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
பத்தர் பவப்
பவ்வப் பச்சைக்கல் பாலமும், பாவமதில் சித்தமும், நெய்தல் திருப் பூவும், மாரன் திருக்கொடியும்,
அத்தன் விழிகளில் அஞ்சனமும், காஞ்சி ஆரமும் உன் சித்திரக் கண்கடை சீர்மாலை என் கேதம்
தீர்க்க! தாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam