ऊरीकुर्वन्नुरसिजतटे चातुरीं भूधराणां
पाथोजानां नयनयुगले पारिपन्थ्यं वितन्वन् ।
कम्पातीरे विहरति रुचा मोघयन्मेघशैलीं
कोकद्वेषं शिरसि कलयन्कोऽपि विद्याविशेषः ॥ ६३॥
ஊரீ குர்வன்னுரஸிஜதடே சாதுரீம் பூ⁴த⁴ராணாம்
பாதோ²ஜாநாம் நயன யுக³லே பாரி பந்த்²யம் விதன்வன் ।
கம்பாதீரே விஹரதி ருசா மோக⁴யன் மேக⁴ஶைலீம்
கோகத்³வேஷம் ஶிரஸி கலயன் கோऽபி வித்³யா விஶேஷ: ॥ 63॥
கம்பைக்
கரையில் ஒரு வியப்புக்குரிய வித்தையின் உரு இருக்கிறது. அது மார்புகளில் மலைகளின் அமைப்பைப்போல்
அழகை அமைத்துக்கொண்டு, இரு கண்களில் தாமரை மலர்களின் பகைமையையும், தலையில் சக்கிரவாகப்
பறவையில் வெறுப்பையும் வெளிப்படுத்தி நீலமேகங்களின் பொலிவையும் வீணெனச் செய்து விளங்குகிறது.
மலைகள்போல் ஏந்தெழில் மார்பீரும், கஞ்ச மலர்ப்பகைமை
நிலைகொள் விழியீரும், நீலமே கக்காந்தி நேரிலைபோல்
தலையிலே புட்கோகத் தைவெறுக் கும்போக்க தாய்வியக்கும்
கலையுரு வொன்று கரைக்கம்பை மீதினில் காண்கிறதே!
கஞ்சம்-தாமரை; புட்கோகம்- சக்கரவாகப் பறவை;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மலைகள்போல் ஏந்தெழில் மார்பீரும், கஞ்ச மலர்பகைமை, நிலைகொள் விழியீரும், நீல மேகக்காந்தி நேர் இலைபோல், தலையிலே புட் கோகத்தை வெறுக்கும் போக்கதாய் வியக்கும் கலை உருவொன்று கரைக் கம்பை மீதினில் காண்கிறதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam