ஜூன் 09, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -62

कालाम्भोदप्रकरसुषमां कान्तिभिस्तिर्जयन्ती
कल्याणानामुदयसरणिः कल्पवल्ली कवीनाम्
कन्दर्पारेः प्रियसहचरी कल्मषाणां निहन्त्री
काञ्चीदेशं तिलकयति सा कापि कारुण्यसीमा ६२॥

காலாம்போ³ ப்ரகர ஸுஷமாம் காந்திபிஸ் தர்ஜயந்தீ
கல்யாணாநாமுத³ய ஸரணி: கல்பவல்லீ கவீநாம்
கந்த³ர்பாரே: ப்ரிய ஸஹசரீ கல்மஷாணாம் நிஹந்த்ரீ
காஞ்சீதே³ஶம் திலகயதி ஸா காபி காருண்யஸீமா 62

கருமேகக் கூட்டத்தின் காந்தியை கீழ்படுத்தும் காந்தியுடையவளும், எல்லா மங்களங்களுக்கும் பிறப்பிடமாகவும்,  கவிகட்கு கற்பகத்தரு கொடியாயும், கந்தர்ப வைரியார் விரும்பும் மனையாளாகவும், பாவங்களை நாசம் செய்பவளாகவும், கருணை எல்லையாகவுமுள்ள ஒருவள் காஞ்சிதேசத்தைத் திலகம்போல் அலங்கரிக்கிறாள்

கருமேகக் கூட்டத்துக் காந்தியைத் தாழ்செயும் காந்தியினள்;
வருசுபங் கட்கு வசமவள்; கற்பக வல்லியுமாம்,
அருட்கவி ஞர்கட்கு; ஆட்டியாம் காம அகிதனுக்கு;
கருணைக் கரைபொட்டு காஞ்சிக்கு; அந்தம் கருவினைக்கே!

சுபம்-மங்களம்; வசம்-மூலம்; வல்லி-கொடி; ஆட்டி-மனைவி; அகிதன்-பகைவன்;
பொட்டு-திலகம்; அந்தம்-நாசம்,முடிவு; கருவினை-பாவம்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


கருமேகக் கூட்டத்துக் காந்தியைத் தாழ்செயும் காந்தியினள்; வரு சுபங்கட்கு வசமவள்; கற்பக வல்லியுமாம், அருட் கவிஞர்கட்கு; ஆட்டியாம் காம அகிதனுக்கு; கருணைக் கரைபொட்டு காஞ்சிக்கு; அந்தம் கருவினைக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...