चन्द्रापीडां चतुरवदनां चञ्चलापाङ्गलीलां
कुन्दस्मेरां कुचभरनतां कुन्तलोद्धूतभृङ्गाम् ।
मारारातेर्मदनशिखिनं मांसलं दीपयन्तीं
कामाक्षीं तां कविकुलगिरां कल्पवल्लीमुपासे ॥ ६१॥
சந்த்³ராபீடா³ம் சதுரவத³நாம் சஞ்சலாபாங்க³லீலாம்
குந்த³ஸ்மேராம் குசப⁴ரனதாம் குந்தலோத்³தூ⁴த ப்⁴ருʼங்கா³ம் ।
மாராராதேர் மத³னஶிகி²னம் மாம்ஸலம் தீ³பயந்தீம்
காமாக்ஷீம் தாம் கவிகுல கி³ராம் கல்பவல்லீமுபாஸே ॥ 61॥
சந்திரனை அணியாகக்
கொண்டவளும், அழகு முகத்தளும், அலையும் கடைக்கண் லீலையுள்ளவளும், ஆம்பலன்ன புன்சிரிப்புடையவளும்,
தனங்களில் பாரத்தால் வணங்குவதுபோல் வளைந்தவளும், கேச அழகினால் வண்டுகளைத் துரத்தியவளும்,
மாரவைரிக்கும் காம நெருப்பை மூட்டுகிறவளும் கவிகுலத்தின் வாக்கினுக்கு கல்பகக் கொடிபோல்
இருப்பவளுமான ஸ்ரீகாமாக்ஷி தேவியை உபாசிக்கிறேன்.
அணிமதி, அம்முகம், அட்சக் கடைகள்
அலையுமாட்டு,
அணியாம்பல் புன்னகை, அங்கலி பாண அவிதலோடும்
அணிகூந்தல் வண்டோட்டும் அங்கச வைரியை
அள்ளழலார்
அணிவாக்கோர் கற்பகம் ஆயகா மாட்சி
அணைவனானே!
அம்-அழகு; ஆட்டு-விளையாட்டு,
லீலை; அணி-ஆபரணம், அழகு, பெருமைமிக்க; அங்கலி-தனங்கள்; பாணம்-பாரம்; அவிதல்-வளைதல்;
அங்கசன்-மன்மதன்; அள்-காமம்; அழல்-நெருப்பு; ஆர்- மிக்க; கற்பகம்-கற்பகக்கொடி; அணைவன்-சேருவேன்;
அணிவாக்கோர்- அழகு கவிவாணர்கள்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
அணி மதி, அம்
முகம், அட்சக் கடைகள் அலையும் ஆட்டு, அணி ஆம்பல் புன்னகை, அங்கலி பாண அவிதலோடும், அணி
கூந்தல் வண்டு ஓட்டும், அங்கச வைரியை அள் அழல் ஆர் அணி வாக்கோர் கற்பகம் ஆய காமாட்சி
அணைவனானே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam