जम्भारातिप्रभृतिमुकुटीः पादयोः पीठयन्ती
गुम्फान्वाचां बुध
जनकृतान्स्वैरमारामयन्ती ।
शम्पालक्ष्मीं मणिगणरुचा
पाट पान् प्रापयन्ती
कम्पातीरे कविपरिषदां जृम्भते भाग्यसीमा ॥ ६०॥
ஜம்பா⁴ராதி ப்ரப்⁴ருʼதி முகுடீ: பாத³யோ: பீட²யந்தீ
கு³ம்பா²ன் வாசாம் புத³ ஜனக்ருʼதான் ஸ்வைர மாராமயந்தீ ।
ஶம்பா லக்ஷ்மீம் மணிக³ண ருசா பாதபான் ப்ராபயந்தீ
கம்பாதீரே கவி பரிஷதா³ம் ஜ்ருʼம்ப⁴தே பா⁴க்³யஸீமா ॥ 60॥
சம்பாரி முதல் அனைத்து தேவர்களின்
மகுடங்களை தனது சரணங்களுக்குப் பீடமாகச் செய்பவளும், கவிகளால் செய்யப்பட்ட வாக்கமுதுகளை,
தானுலவும் தோட்டம்போல் அனுபவிப்பவளும், தன் அணிகலன்களின் ஒளியால் விருட்சங்களையும்
மின்னல்போல் ஒளிரச் செய்பவளுமாக காமாக்ஷி தேவி, கவிகுலத்தின் பாக்கியமாக கம்பைக்கரையில் ஓங்கி விளங்குகிறாள்.
சம்பாரி தேவர் தலைமுடி கள்தம் சரண்தவிசாய்
கும்பற் கவிவாக்கை கொண்டா டியுலவு
கொல்லையாகத்
தம்மணி எல்லால் தருக்கள் தடித்துச் சதிரடைய
கம்பைக் கரையோங்கு காமாட்சி, செல்வம்
கவிகுலர்க்கே!
சம்பாரி-இந்திரன்;
தலைமுடி-கிரீடம்; தவிசு-பீடம்; கும்பற்கவி-கவிகுலம்; கொல்லை-உத்தியான வனம்; எல்-ஒளி;
தடித்து-மின்னல்; சதிர்-அழகு;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
சம்பாரி தேவர்
தலைமுடிகள் தம் சரண் தவிசாய், கும்பற் கவி வாக்கை கொண்டாடி உலவு கொல்லையாகத், தம் அணி
எல்லால் தருக்கள் தடித்துச் சதிரடைய, கம்பைக் கரையோங்கு காமாட்சி, செல்வம் கவிகுலர்க்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam