प्रतीचीं पश्यामः प्रकटरुचिनीवारकणिका
प्रभासध्रीचीनां प्रदलितषडाधारकमलाम् ।
चरन्तीं सौषुम्ने पथि परपदेन्दुप्रविगलतू
सुधार्द्रां कामाक्षीं परिणतपरंज्योतिरुदयाम् ॥ ५९॥
ப்ரதீசீம் பஶ்யாம: ப்ரகடருசி நீவார கணிகா
ப்ரபா⁴ ஸத்⁴ரீசீநாம் ப்ரத³லித ஷடா³தா⁴ர கமலாம் ।
சரந்தீம் ஸௌஷும்னே பதி² பரபதே³ந்து³
ப்ரவிக³லத்-
ஸுதா⁴ர்த்³ராம் காமாக்ஷீம் பரிணத பரம்ஜ்யோதிருத³யாம் ॥ 59॥
நீவார
(காட்டு நெல்லின்) நிறத்திற்கு ஒப்பான ஒளி கொண்டதும், ஆறு மலர்ந்த ஆதார பதுமங்களாம்
சக்கரங்களை உடையவளும், ஸுஷூம்னை நாடி வழியே மேல் நோக்கிச் செல்பவளும், பரமபதமாகிய ஆயிரந்தாமரையில் இருந்து பெருகும் அமுதத்தில் நனைந்தவளுமான
காமாட்சியை பரிணாமமடைந்த பெருவொளியாக (குண்டலினீயாகக்) காண்கிறோம்.
நீவார நெல்லின் நிறத்தொளிக்
கொப்பாம் நிகமமுடை,
பூவாம் புயமாறு போதாழி பெற்றவள்,
போதபத
மாவாயி ரக்கய வண்ணம் நனைந்தாள்;
வழிச்சுழுவில்
மேவாகும் பேரெல் விகாரமும் காமாட்சீ!
விண்டனமே!
நீவாரம்-
காட்டு நெல்; நிகமம்-ஒளி; போதாழி- போது +ஆழி- இதழ்களல் சக்கரங்கள்; போதபத-பரமபதம்; கயம்-தாமரை; வண்ணம்- அமுதம்; வழிச்சுழு-ஸூஷூம்னா
நாடி; மேவாகும்- உயர்ந்து செல்லும்; பேரெல்-பேரொளி; விகாரம்-மாறுநிலை,பரிணாமம்; விண்டு-தெளிந்து
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
நீவார
நெல்லின் நிறத்தொளிக்கு ஒப்பாம் நிகமம் உடை, பூவாம்புயம் ஆறு போது ஆழி பெற்றவள், போதபதமாவாயிரக்
கய வண்ணம் நனைந்தாள்; வழிச் சுழுவில் மேவாகும் பேரெல் விகாரமும் காமாட்சீ! விண்டனமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam