ஜூன் 06, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -58

बुधे वा मूके वा तव पतति यस्मिन्क्षणमसौ
कटाक्षः कामाक्षि प्रकटजडिमक्षोदपटिमा
कथंकारं नास्मै करमुकुलचूडालमुकुटा
नमोवाकं ब्रूयुर्नमुचिपरिपन्थिप्रभृतयः ५८॥

பு³தே வா மூகே வா தவ பததி யஸ்மின் க்ஷண மஸௌ
கடாக்ஷ: காமாக்ஷி! ப்ரகட ஜடி³மக்ஷோத³ படிமா
கத²ம் காரம் நாஸ்மை கரமுகுல சூடா³ல முகுடா
நமோவாகம் ப்³ரூயுர் முசி பரிபந்தி²ப்ரப்ருʼதய: 58

காமாக்ஷி! மிகுந்த அறியாமையை அழிக்கும் திறனுள்ள உன் கடைக்கண், எந்த அறிஞனிடத்தோ, அல்லது ஊமையிடமோ விழுமோ, அந்த கணத்தில் நமுசியின் எதிரியான இந்திரன் முதலாம் தேவர்கள் கரங்களைச் சிரங்கள்மேல் அணிமுடிகளாகச் சூடிக் கொண்டு, நமஸ்காரம் என்று ஏன் சொல்லமாட்டார்கள்?

மிகுந்த அறியாமை வீவுசெய் உன்றன் விழிக்கடைகள்
உகுக்க, அறிஞரும் ஊமையும், காமாட்சி, உற்றகணம்
செகுத்தான் நமுசியை தேவேந் திரன்முதல் தேவருமேன்
மகுடம்போல் கைதூக்கி “வந்தனம்” என்னார்கள் வாய்திறந்தே!

வீவு-அழித்தல்; உகுத்தல்-சிந்துதல்; செகுத்தான்-வென்றான்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

மிகுந்த அறியாமை வீவுசெய் உன்றன் விழிக்கடைகள் உகுக்க, அறிஞரும் ஊமையும், காமாட்சி, உற்றகணம், செகுத்தான் நமுசியை, தேவேந்திரன் முதல் தேவருமேன்,  மகுடம்போல் கைதூக்கி “வந்தனம்” என்னார்கள் வாய்திறந்தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...